வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*
நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*
எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*
ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*
இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*
கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*
கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
*** *** *** *** ***
குழந்தையின் குரலாய் நம்பிக்கை கவிதையை
அனுப்பி வைத்த ராமலக்ஷ்மிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
குறள் வழிக்கதைகள்
5 years ago
2 comments:
நன்றி தென்றல்.
குழந்தைகள் யாவருக்கும் என் அன்பான குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
இரண்டு நாட்களாக வீட்டுப் பாடம் பள்ளி சிலபஸ் பற்றி எல்லாம் பேசி களைப்பாகி விட்ட பெற்றோர் நமக்கு ஆறுதலாய் குரல் கொடுக்கிறார்கள் நம் செல்லக் குழந்தைகள். என்னதான் சொல்லுங்க, இந்த தலைமுறை குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். சொன்னபடி செஞ்சிடுவாங்கல்ல..
/*தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க*/
என் பெரிய பொண்ணு பையை வெய்ட் போட்டு பார்த்தேன் 10 கிலோ. என்னாலேயே தூக்க முடிவதில்லை... வருத்தமாகத் தான் உள்ளது. என்ன செய்ய?
/*கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்*/
மேடம். ரொம்ப அழகாக எழுதி இருக்கீங்க. மீண்டும் மீண்டும் படிக்க விழைகிறது மனம்
Post a Comment