இதற்கு முந்தைய பதிவில் பலரின் பலவகையான கருத்துக்களைப் பார்த்தோம்.
அதிக வீட்டுப்பாடம் தவறு என்றாலும் பிள்ளைகள்
வீட்டுப்பாடத்துடன் தான் வீட்டிற்கு வருகிறார்கள்.
வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதின் உண்மையான நோக்கம்
இதுதான்.
1. பள்ளியில் படித்த பாடத்தை ரிவைச் செய்துக்கொள்ள.
வீட்டில் ஒரு முறைப் படித்தால் பள்ளியில் படித்தது
நன்றாக மனதில் பதியும்.
2. நன்கு படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
படித்ததில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.
3. வீட்டுப்பாடம் செய்யப் பழகுவாதால் பிள்ளைகள்
தன் வேலையைத் தானே செய்யப் பழகுகிறார்கள்.
4. படிப்பைத் தவிர தனித்துவமாக வேலையை
முடிக்கப் பழகுகிறார்கள்.
5. சாதாரணமாக ஒரு பாடத்திற்கு கேள்வி, பதில்
எழுதும் பொழுது கூட சில மாணவர்கள் அதை
அசைன் மெண்ட் மாதிரி அழகாக ச்கெட்ச் கொண்டு
தலைப்பு எழுதி, அழகாக கோடு போட்டு என்ரு
செய்வார்கள். இதனால் ஒரு பெருமை உணர்வு
கிடைக்கும்.
இப்படி சில பாசிடிவ்களும் இருக்கிறது
வீட்டுப்பாடத்தில்.
இங்கு பெற்றோராக நாம் பின் பற்றி ஆகிய வேண்டிய
சில வி்டயங்களைப் பார்ப்போம்.
இன்னைக்கும் உங்க ஸ்கூல்ல ஹோம்வொர்க் கொடுத்துட்டாங்களா?!
என்று பிள்ளைகள் எதிரில் பேசினால் படிக்கும் பள்ளியைப்
பற்றி, படிப்பைப் பற்றி தவறான அபிப்பிராயம் பிள்ளைகளுக்கு
ஏற்படு்ம்.
பள்ளியிலிருந்து வந்ததும் உண்ண உணவுக் கொடுத்து
சிறிது நேரம் விளையாட விடுங்கள்.
அதன் பிறகு அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது
என்று கேட்டு அறிந்து பிறகு என்ன பாடம் நடத்தினார்கள்?
என்று கேட்டு பிறகு ஹோம் வொர்க் செய்யச் சொல்லுங்கள்.
ஆம் வீட்டுப்பாடத்தைப் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும். நாம் செய்து கொடுப்பதினால்
அவர்கள் சோம்பேறிகளாகிறார்கள். மேலும் பள்ளியில்
ஆசிரியர் இது ஹோம் வொர்க் என்று சொல்லும்போது
ஹ, நானா செய்யப் போகிறேன்! என்று நினைக்கையில்
படிப்பே தேவையில்லை என்ற மன நிலைக்கு ஆவார்கள்.
பிள்ளைகளை வீட்டுப்பாடத்தைச் செய்யச் சொல்லவேண்டும்.
தவறாகச் செய்தாலும் சரி. தவறில் இருந்துதான் கற்றுக்கொள்ள
முடியும். தவறாகவே இருந்தாலும் அவர்களாகவே செய்து
முடிப்பார்கள். தன் வேலையைத் தானே செய்யும் திறமை
உண்டாகும். அடுத்தவர்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள்.
வீட்டுப் பாடத்தை முடிக்க இயலாத போது (அதாவது
புரியாத கணக்கு, புரியாத வார்த்தை, புரியாத அர்த்தம்)
போன்ற சமயத்தில் நாம் அருகிருந்து அவர்களுக்கு உதவ
வேண்டும்.
பெற்றோர்களின் ஈடுபாடு பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு
வழிவகுக்கும். அதுவே பெற்றோரே செய்து கொடுத்தால்
அவர்களது முன்னேற்றத்திற்கு நாம் ஒரு தடைக்கல்லாகிறோம்.
***********************************************************
வீட்டுபாடத்தில் பிள்ளைகளுக்கு இப்படியும் உதவலாம்.
வீட்டுப்பாடம் செய்யும் நேரம் நாம் வீட்டில்
இருக்கும் நேரமாக பார்த்துக்கொள்ளவும்.
(இதுதான் பலரின் பிரச்சனை. வேலைக்குச்
செல்லும் அம்மாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்).
அப்படிபட்ட நிலையில் பி்ள்ளைகள் தன்னால் இயன்ற
பாடத்தை செய்து முடித்துவிட்டு தெரியாததை
பெற்றோ்ர் வந்ததும் கேட்டுச் செய்வது போல்
திட்டமிட்டுக்கொள்ள்லாம்.
ஏதோ அவசர வேலையில் வர முடியாவிட்டால்
பிள்ளையை போனிலாவது தொடர்பு கொண்டு உதவுங்கள்.
இப்படிச் செய்வதன் முக்கிய நோக்கம் பிள்ளைக்கு
அவனும் அவனது பாடங்களும், வேலையும்
நமக்கு முக்கியம் என்ற செய்தியைச் சொல்கிறோம்.
படிக்க என்று தனியாக ஒரு இடம் அவசியம்.
டைனிங்டேபிளில் உட்கார்ந்தும் படிக்கலாம்.
ஆனால் டீவி போடப்பட்டிருக்கக்கூடாது.
பிள்ளைகளின் கவனம் திசை திரும்பும்
வஸ்துக்கள் ஏதும் அருகில் இல்லாமல்
பார்க்கவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில்
உட்கார்ந்து படிக்கவேண்டும் என்று திட்ட
மிட்டுவிட்டால் பிரச்சனையில்லை.
சனி, ஞாயி்று விடுமுறை தினங்களில்
கொஞ்சம் அதிகாமாக வீட்டுப்பாடம்
கொடுத்திருந்தால் கூட அவைகளை
வெள்ளி இரவுக்குள் முடித்துவிடக்
கூறுங்கள். இதனால் சனி, ஞாயிறு
விடுமுறையை பிள்ளைகள் அனுபவிக்க
முடியும்.
மொத்ததில் வீட்டுப்பாடத்தை சுமையில்லாமல்
ஆக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
போன பதிவும், கமண்டுகளும் இப்பதான் பாத்தேன். :)
ஹோம்வர்க் குடுக்கலாம், ஆனா அது வெறும்
1)அந்த கொஸ்டினை ரெண்டு தரம் எழுது,
2)இந்த வாய்பாட்டை ஐந்து தரம் எழுது ரேஞ்சுல இருக்க கூடாது.
கிரியேட்டிவ் அஸைன்மென்ட்னு சொல்ல்வாங்களே, உதாரணமா யுகேஜி படிக்கற குழந்தைக்கு பழம், பூ, கலர்ஸ் பத்தி பாடம் வருதுன்னு வெச்சுப்போம்.
ஒரு வாரம் டைம் குடுத்து அதே வகை கலர்கள் கொண்ட பொருளை கலக்ட் பண்ணி வந்து டீச்சர்கிட்ட காட்டனும்.
டீச்சரும் பாத்துட்டு அதை அவங்களே அமுக்காம வெரிகுட் சொல்லி ஒரு சாக்லேட் குடுக்கலாம். :)
அதுக்காக அனிமல்ஸ் பாடத்துக்கு யானை எல்லாம் கூட்டிட்டு ஸ்கூலுக்கு போக முடியாது.
இதுனால அந்த குழந்தை மனசுல நல்லா அந்த கலர்கள் பதிஞ்சுடும்.
பொதுவா எதையுமே ரிலேட் பண்ணி படிச்சா நல்லா நினைவில் இருக்கும் என்பது என் அனுபவம்.
காலேஜ் வரக்கும் அப்படி தான் படிச்சேன். மனப்பாடம பண்ணது ரெம்ப கம்மி.
வாங்க அம்பி கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
//மொத்ததில் வீட்டுப்பாடத்தை சுமையில்லாமல்
ஆக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.//
மொத்தத்தில் வீ.பா என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதை சுமையில்லாமல் ஆக்கும் வாய்ப்புக்களை அழகாகச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
அம்பியின் கருத்தும் சரியே. அதைத்தான் குழந்தைகள் புரிந்து படிக்குமாறு கல்வி முறை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன் உங்களது பிற பதிவுகளில்.
ஆமாம் ராமலக்ஷ்மி,
விரும்பியது கிடைக்காத போது, கிடைத்ததை விரும்பி ஏற்பதுதானே அழகு.
Post a Comment