பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
காலையில் புதுகைத்தென்றல் பிளாக்கில்
போடப்பட்ட வாக்கினில் இனிமை வேண்டும்
கதை பேரண்ட்ஸ் கிளப்பில் அதன் ப்ரத்யேக
வாசகர்களுக்காக( அப்படித்தான் ராமலக்ஷ்மி
பின்னூட்டத்துல சொல்லியிருக்காங்க.)

*********************************************

”நீதான் பேய்!,” என்று கத்திக்கொண்டே

ஓடி வந்து என்னிடம் ஒளிந்துக்கொண்ட
தம்பி் நவீனை துரத்திக்கொண்டே ஓடிவந்தாள்
என் பெரிய மகள் நீலிமா.

பொழுது விடிந்து பொழுது போவதற்குள்
வீட்டில் ஒரே களேபரம்தான். இவர்கள்
இருவரும் பள்ளிக்கு சென்றிருக்கு நேரம்தான்
வீடு நிசப்தமாக இருக்கும்.

”இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.

”அக்கா! என்னைத் திட்டறாங்க. தலையில
கூட கொட்டிட்டாங்க பாருங்கம்மா வலிக்குது!”என்றான்
மகன் நவீன்.

“திட்டனதையும், கொட்டினதையும் மட்டும் சொல்லு!”
நீ செஞ்சதைச் சொல்லாத, என்ற பெரி்ய மகள்
நீலிமாவிடம்,”என்ன நடந்தது? ப்ரச்சன்னை என்னன்னு?
நீதான் சொல்லு” என்றேன்.

”பாத்துட்டு தர்றேன்னு சொல்லி என் ஃபரெண்டு
கொடுத்த கீ செயினை உடைச்சிட்டான்! என்
பெஸ்ட் ப்ரெண்ட் என் பர்த்டேக்காக கொடுதது
அது”, என்று வருத்தத்தோடு சொன்னாள்.

”அதுக்கு அக்கா என்னை கோட்டான், நாய்
அப்படின்னு திட்டி்னாங்கம்மா!” என்றான்.

”எதுக்கு தலையில கொட்டின?,” என்றதும்
”வெவ்வேன்னு அழகு காட்டினான் தம்பி”,
என்றாள்.

அலுப்பாக வந்தது எனக்கு. எப்போதும் இதே
நிலைதான். அடிதடி சண்டை நடக்கும்.
இவள் முடியைப்பிடித்து் இழுப்பான், அவள்
அடிக்க என்று பெரிய யுத்தமே நடக்கும்.

தாளமுடியாமால் இருவருக்கும் 2 போட்டு
விட்டு வருவேன். ஆளுக்கொரு மூலையில்
உட்கார்ந்து அழுவார்கள். இதுதான் இவர்களின்
சண்டையின் முடிவாக இருக்கும்.
பிள்ளைகளை அடித்துவிட்டு அந்த
வருத்தத்தில் சாப்பிடமால் இருப்பேன்.
இந்த நிலமை தொடரக்கூடாது.
புரிய வைக்கவேண்டும்
என்று முடிவு செய்தேன்.

”என் கூட வாங்க ரெண்டு பேரும்”, என்றேன்.
அடிக்காமல் அழைத்த அம்மாவை ஆச்சரியமாக
பார்த்தனர் பிள்ளைகள்.
” இப்படி உட்காருங்க” என்று டைனிங் டேபிளு்ருகில்
அமர்த்தி விட்டு உள்ளே சென்றேன்.

தலையைத் தடவிக்கொண்டே மகனும்,
முனுமுனுத்துக்கொண்டே மகளும் உட்கார்ந்திருந்தனர்.

“ம்ம். ரெண்டு பேரும் இதை சாப்பிடுங்க”, என்று
அவர்களிடம் நீட்டிய தட்டை பார்த்து முகம்
சுளித்தனர்.

“என்னம்மா! வாழைக்காயைக் கொடுக்கறீங்க.
காயை பச்சையா சாப்பிட்டா பல் கறுப்பாயிடும்னு
சொல்வீங்களே!” என்று கேட்டாள் மகள்.

”பரவாயில்லை சாப்பிடுங்க” என்றேன்.
“காயைச் சாப்பிட்டா நல்லா இருக்காதும்மா.
பழம் தான் சுவையா இருக்கும், இருங்க
நான் போய் வாழப்பழத்தை எடுத்துகிட்டு
வர்றேன்”! என்று எழுந்த மகனை
உட்கார வைத்தேன்.

”வாழைக்காய், வாழைப்பழம் ரெண்டும்
ஒரே மரத்திலேர்ந்துதானே வருது.
அப்ப ஏன் வாழைப்பழத்தை மட்டும்
விரும்பி சாப்பிடற? என்றதும் மகள்
அதான் தம்பி சொன்னானே அம்மா,
“ பழம் சுவையா இருக்கும்னு. அதான்!”
என்றாள் மகள்.

”சரியா சொன்ன! சுவையான பழம் இருக்க
காயைச் சாப்பிட யாருக்குத்தான்
விருப்பம் இருக்கும்?” அதே போல
அன்பான கனிவான வார்த்தைகள்
இருக்க ரெண்டுபேரும் கடுமையான
வார்த்தைகளை உபயோகிக்கலாமா??”
என்றேன்.


என்னை ஏறிட்ட மகளிடம்,”தம்பி
கீழே போட்டு உடைச்சது தப்பு. என்னிடம்
வந்து சொல்லியிருக்கணும். இல்ல
இப்படி செய்யலாமான்னு மென்மையா
கண்டிக்கணும். அதைவிட்டு
கோட்டான், நாய்னு சொல்லலாமா,”என்றேன்.

”தப்புதாம்மா!” என்றாள் மகள்.

“அக்காவோட சாமானை பாக்க எடுத்த சரி.
அதை பத்திரமாக கையாள வேண்டாமா?
அது உடஞ்சதுல அக்கா எவ்வளவு
வேதனைப்படறாங்க, வயசுல பெரியவங்களை
பேய்னு வேற சொல்வது சரியா நவீன்?
என்றதும் தலையைக் குனிந்து கொண்டு
”சாரி” என்றான்.

”சாரி, சொல்லவேண்டியது எனக்கில்லை”
என்றதும் அக்கா எழுந்து போய் தம்பிக்கு
முத்தம் கொடுத்து,”சாரிடா தம்பி! வலிக்குதா?
வா! ஐஸ் க்ப்யூஸ் வைக்கிறேன்,” என்றழைத்தாள்.

அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்து
“இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன்
அக்கா!”என்றபடி அக்காவுடன் சென்றான்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்வர்ந்தற்று

என்ற திருக்குறளை படித்து அதன்
பொருள் அறிந்திருந்தாலும் பொறுமை
இன்மையால் பிள்ளைகளிடம் கடுமையாக
நடந்து கொண்டிருந்தேன். இன்று பிள்ளைகளை
அடிக்காமல் இதமாக புரியவைத்ததன் பலன்
அனைவருக்கும் மகிழ்ச்சி.

என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைதான்
ஞாபகம் வந்தது.”படித்தால் மட்டும் போதாது!”

*****************************************************

தொடர் பதிவாக வந்து கொண்டிருக்கும்
திருக்குறள் பதிவிற்காக இன்னொரு கதை இது.

18 comments:

அருமையாக உள்ளது. இன்று என் பெண்களுக்கு நான் கூறப்போகும் கதை இது தான்...

நன்றி:)!

இன்று என் பெண்களுக்கு நான் கூறப்போகும் கதை இது தான்...//

aaha mikka magilchi

நன்றி!

:)

அருமையான கதை! முக்கியமான செய்தியை எளிதாகப் புரிய வைத்து விட்டீர்கள்.

(என் கதைகளையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி)

http://thamizsangam.blogspot.com/2007/01/blog-post_13.html

தமிழ்ச்சங்கத்துல ஆரம்பிச்சோம். இப்போ தொடராக்கின புண்ணியவான் நல்லா இருக்கனும். இந்தத் தொடர்-கதைகளை உபயோகிச்சலாங்களா?

நல்ல கதை.

வாழ்த்து(க்)கள்.

அருமை!!!!

//நல்ல கதை.

வாழ்த்து(க்)கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

This comment has been removed by the author.

ஹை ! நம்ம கதையின் இணைப்புக்கு மிக்க நன்றி. ஒரு சின்ன கரெக்ஷன்.

'உட்பகை உற்ற குடி' என்று தட்டச்சு பிழையை சரிசெய்கிறீர்களா ?!!

என் கதைகளையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி)//

உங்களுக்கு உங்களின் லிங்கை கொடுத்துதவிய ராமலக்ஷ்மிக்கும் எங்கள் நன்றி.

இப்போ தொடராக்கின புண்ணியவான் நல்லா இருக்கனும்//

வாழ்த்துக்கு நன்றி இளா.

இந்தத் தொடர்-கதைகளை உபயோகிச்சலாங்களா?//

ஆஹா அதுக்கென்ன. இதை யெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கலாம்னு கூட ஒரு எண்ணம் இருக்கு. மேற்படி விவரங்களுக்கு் அணுகவும் தலைவர்: காமிரக் கலைஞர் ஜீவ்ஸ் அவர்களை.

உட்பகை உற்ற குடி' என்று தட்டச்சு பிழையை சரிசெய்கிறீர்களா ?!!//

சரி செயிதிட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.

கதை நல்லாருக்கு மேடம். குறளுக்குப் பொருத்தமாயிருக்கு. வாழ்த்துகள்.

தட்டச்சுப் பிழை சரி செய்ததற்கு மிக்க நன்றி.

//உங்களுக்கு உங்களின் லிங்கை கொடுத்துதவிய ராமலக்ஷ்மிக்கும் எங்கள் நன்றி.//

ராமலஷ்மி மேடம் அவர்களுக்கு சிறப்பு நன்றி.

http://majinnah.blogspot.com/2008/11/blog-post_10.html

தமிழ் பிரியனின் 'எழுமைக்கும் ஏமாப்புடைக்கும்' குறள் கதை.

இணைத்திட வேண்டுகிறேன்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்