பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம்
அதாங்க ஹோம்வொர்க் கொ்டுத்தா அது
பிள்ளைகளுக்கா? இல்லை பெற்றோர்களுக்கா!ன்னு
கேக்குற அளவுக்கு இருக்கு.
ப்ரொஜ்க்ட் கொடுத்தாங்கன்னா, எக்சிபிஷனுக்கு
ஏதாவது செய்யுங்கன்னா எல்லாம் பெத்தவங்களுக்குத்தான்.
நாம படிச்சு முடிச்சதுக்கப்புறமும் ஹோம்வொர்க்
பூதம் நம்மளை துரத்துற மாதிரியே இருக்கா?
இல்ல குழந்தையா இருந்து அழகா செய்ய முடியாம
விட்ட ஹோம்வொர்க்கை இப்ப ஆசையோடு
செஞ்சு கொடுக்கறீங்களா?
சரி வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதன் நோக்கம்
என்னன்னு நீங்க நினைக்கறீங்க.
எம்புட்டு ஹோம்வொர்க் கொடுக்கலாம்னு நினைக்கறீங்க.
வாங்களேன்! இந்த ஹோம்வொர்க் டென்சனைப் பத்தி
ஒரு கலந்துரையாடல் செய்யலாம்.
உங்க கருத்தை பதிஞ்சுட்டு போங்க.
குறள் வழிக்கதைகள்
5 years ago
137 comments:
ஹோம் வொர்க் கொடுக்கற ஸ்கூல் எல்லாத்தையும் புள்ளைங்கள வெளில வர சொல்லிட்டு தீ வெச்சு கொளுத்தனும்.
ஒரே வரில இப்படித்தான் சொல்லனும்.
ஸ்கூல்னா ஸ்கூலோட முடிச்சுக்கனும்.
மூணு வயசுல இருந்து 25 வயசு வரைக்கும் காலைல 5,6 மணிக்கு எந்திரிச்சு படிச்சுட்டு அரக்க பறக்க கிளம்பி இஸ்கூலுக்கு போயிட்டு அங்க விளையாட்டு க்ளாஸ், நீதி போதனை க்ளாஸை கூட விட்டு வைக்காம இடைவிடாம அயறாது சொல்லி கொடுத்த பின்னாடியும்....
வீட்டுக்கு வந்தோ வராமயோ உடனே டியூசன் போய்ட்டு வந்து ஹோம்வொர்க் செஞ்சிட்டு அதுக்கப்புறம் மருபடியும் படிப்பு...
விட்டு விடுதலையாகி 21 லயோ 24 லயோ வேலைக்கு போனவங்க கிட்ட இந்தனை நாள் படிச்ச படிப்பு இந்த வேலைக்கு தவிர வேற எதுக்காச்சும் வாழ்க்கைல யூஸ் ஆகுதான்னு கேட்டா...
நம்ம பய புள்ளைங்க சொல்லுதுங்க. இந்த படிப்பு வேலை வாங்க ஒரு விசிட்டிங் கார்ட் மட்டும்தான் அந்த வேலைக்கு மறுபடியும் சில கத்துக்கனுமாம்...
படிப்ப வெச்சு வேலைக்கு போனவங்களுக்கே 20 வருச அற்புத கத்துக்க வேண்டிய வயசு வாழ்க்கை வெறும் விசிட்டிங்க் கார்டுக்காக செலவு செய்யப்படுது.
சரி ஊரோட ஒத்து வாழனும். ஸ்கூல்ல சொல்லி கொடுங்க. என்னமோ புள்ளைங்கள டார்ச்சர் பண்ணுங்க.
வாழ்க்கைய கத்துகறதுக்க்கு கிடைக்கும் கொஞ்ச நேரம் ஸ்கூல விட்டு வெளிய இருக்கும் நேரம்தான்..
மறுபடியும் வீட்லயும் வந்து ஹோம்வொர்க் பண்னனும் சொல்றீங்கன்னா...
இந்த வார்த்தைகளுக்கு என்னை எல்லாரும் மன்னிக்கவும்
"ஸ்கூல்ல என்ன மயிறாடா புடுங்கறீங்க"
(பி.கு என் அப்பா அம்மா ரெண்டு பேரும் டீச்சர்ஸ்)
பள்ளிப்பாடம் குழந்தைகளுக்கு!
வீட்டு பாடம் பெற்றோர்களுக்கு!
எனக்கு மட்டும் விதிவிலக்கு
என் குழந்தையின் வீட்டுபாடம்
என் மனைவிக்கு மட்டும்
ஆஹா வாங்க நந்து,
ஆரம்பமே சூடா இருக்கே.
பார்ப்போம் அடுத்தவங்க கருத்தையும்.
எனக்கு மட்டும் விதிவிலக்கு//
உங்களுக்கு மட்டுமா? கூடவே இருந்தாலும் எத்தனை அப்பா ஹோம் வொர்க் செய்ய சொல்லித் தர்றாங்கன்னு நினைக்கறீங்க?
:)))))))))))
ஸ்கூல்னா ஸ்கூலோட முடிச்சுக்கனும்
நந்துவின் கருத்துக்களோட முழுமையா உடன்படுகிறேன்! அவரு மன்னிப்பு கேட்டுகிட்ட வார்த்தைகள் உட்பட(நானும் மன்னாப்பு கேட்டுக்கிறேன்).
ஸ்கூல்ல குடுக்குற ஹோம் வொர்க் பத்தாதுன்னு டியூஷன் வேற! பசங்க தூக்கிட்டுப் போற புத்தகச் சுமையை பார்க்கணுமே!
"நான் வளர்கிறேனே மம்மி"ன்னு விளம்பரத்துல மட்டும்தான் பாட முடியும் போல இருக்கு!
முதல்ல 8 மணி நேர பள்ளிக் கூடமே ஜாஸ்தின்னு சொல்லுவேன்!
படிப்பு சொல்லித் தரேன்னு கொடுமை பண்ணுறீங்க குழந்தைகளை!
அதே மாதிரி லிவு விட்டாலும் கூடவே ஹோம் வொர்க் குடுத்து அனுப்பிடுறாங்க! அப்புறம் லீவு எதுக்கு!
வாத்தியார் டீச்சருங்களுக்கு மட்டும்தான் ஓய்வு வேணுமா என்ன? புள்ளைங்க ஃப்ரீயா இருக்கக் கூடாதா லீவு நாட்கள்ளே!
பின் குறிப்பு: என் அப்பா, அம்மா, ரெண்டு அக்காக்கள் எல்லாருமே டீச்சர்ஸ்தான்!
நான் இங்கே குரல் கொடுத்திருப்பது குழந்தைகளுக்கான (5வது வரை படிக்கும் குழந்தைகளுக்கான) ஹோம்வொர்க்ஸ் பத்தினது!
காலேஜ்ல கொடுக்கும் அசைன்மெண்ட்ஸ் பத்தி எதுவும் நான் சொல்லலை!
//பின் குறிப்பு: என் அப்பா, அம்மா, ரெண்டு அக்காக்கள் எல்லாருமே டீச்சர்ஸ்தான்! //
நேர்ல கேக்க தைரியம் இல்லாம
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இங்க புலம்புரிங்களா!
படிப்பு சொல்லித் தரேன்னு கொடுமை பண்ணுறீங்க குழந்தைகளை!//
avvvvvvvvvvvvvvvvvv
சொல்லித்தர்றாங்கன்னு சொல்லுங்க சிபி.
வாத்தியார் டீச்சருங்களுக்கு மட்டும்தான் ஓய்வு வேணுமா என்ன? புள்ளைங்க ஃப்ரீயா இருக்கக் கூடாதா லீவு நாட்கள்ளே!//
குட் கொஸ்டின்.
//காலேஜ்ல கொடுக்கும் அசைன்மெண்ட்ஸ் பத்தி எதுவும் நான் சொல்லலை!//
அதையும் மத்தவங்க கிட்ட வாங்கி தான இப்ப பசங்க பண்றாங்க
நேர்ல கேக்க தைரியம் இல்லாம
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இங்க புலம்புரிங்களா!//
நேர்ல கேக்க தைரியம் இல்லாமன்னு சொல்ல முடியாது. நந்து சொல்லியிருக்கிற மாதிரி ஊரோட ஒத்துவாழ்னுதான் பொதுவா நாம இருக்கோம்.
//நந்து சொல்லியிருக்கிற மாதிரி ஊரோட ஒத்துவாழ்னுதான் பொதுவா நாம இருக்கோம்.//
இவரு பேச்ச கேக்காதிங்க
பெற்றோர்கள் வீட்டு பாடம் செய்யிரது தப்புன்னு சொல்லிகிட்டே, அவர் பொண்ணுக்கு வீட்டுப்பாடம் செய்து கொடுப்பார்
காலேஜில் மட்டுமல்ல பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஹோம்வொர்க், அல்லது ப்ராஜக்ட் வொர்க் கூட பெற்றோர்க்ளால்தான் செய்யபடுது.
பெற்றோர்களின் வேலைக்கு பிள்ளைகளுக்கு மதிப்பெண்.
அஞ்சலி திரைப்படத்தில் கூட ரகுவரனிடம் மாஸ்டர் வருன்,”அப்பா நீங்க செஞ்ச சம் தப்பாயிடுச்சு. மிஸ் என்னை கிளாஸை விட்டு துரத்திட்டாங்கன்னு சொல்றமாதிரி ஒரு சீன் வரும்
நிஜத்தைதான் அங்க சினிமாவில் காட்டியிருக்காங்க.
அதே மாதிரி இந்தக் காலத்து சிலபஸ் பத்தியும் கொஞ்சம் பார்த்தாகணும்!
இப்ப 5 வது படிக்குற பசங்களோட புத்தகத்தை வாங்கி கொஞ்சம் புரட்டி பாருங்க! நாமெல்லாம் அதை 12 வதுலதான் படிச்சிருப்போம்!
ஆனா இப்போ அந்த அளவு சிலபஸை பின்சு மூளைகளுக்குள்ளே திணிக்கிறாங்க! என்னவோ 8வது படிச்சவுடனே ஏரோப்ளேன் எஞ்சினியர் ஆகி ரிப்பேர் பண்ணிடனும், பத்தாவது முடிச்சவுடனே நாசாவுக்கு போயி ராக்கெட் விட புரோகிராம் எழுதணும் போன்ற சிலபஸ்தான்!
1 வது படிக்கும்ப்பொதே டெந்த்ல 400க்கு குறைவில்லாம எடுத்தாத்தான் நல்ல குரூப் கிடைக்கும்! அதுக்கப்புறம் எண்ட்ரன்ஸ், (எஞ்சினியரிங்/மெடிக்கல்) 1200 ஐ நோக்கிய ஓட்டம்!
..இப்படி எவ்வளோ....
புள்ளைங்க வாழ்க்கையை நாம வீணடிச்சிகிட்டுத்தான் இருக்கோம்!
இந்த குழந்தைப் பருவம்தான் அவங்க கவலைகள் இல்லாம இருக்கிற வயசு! அதை நாம வலுக்கட்டாயமா பிடுங்கிடுறோம்னு சொன்னா யாரும் அடிக்க வரமாடாங்கன்னு நினைக்கிறேன்!
இவரு பேச்ச கேக்காதிங்க
பெற்றோர்கள் வீட்டு பாடம் செய்யிரது தப்புன்னு சொல்லிகிட்டே, அவர் பொண்ணுக்கு வீட்டுப்பாடம் செய்து கொடுப்பார்//
எல்லோரும் அப்படித்தான்.
ஹோம் வொர்க் கொடுப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அதைப் பத்தியும் கருத்து சொல்லுங்க.
சிபி,
நான் ஒண்ணு சொல்ல ஆசைப்படறேன்.
நீங்க உங்க பிள்ளையை என்னாவாக்க விரும்பறீங்க? அதாவது உங்கள் கனவுகளை சுமக்கும் சிலுவையாகவா? அல்லது அவர்களது கனவுகளை மதித்து அவர்கள் விருப்பப்படிப்பு படிப்பவனாக ஆக்க விரும்புகிறீர்களா என்பதை பொறுத்து இருக்கிறது.
//ஹோம் வொர்க் கொடுப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? //
டீச்சருங்க சொல்ற விளக்கம்:
அன்னன்னிக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை மறுபடி வீட்டுலே போயி ஒரு தபா ரிவிசன் செஞ்சா நல்ல மனசுல பதியும்!
இதுக்கு நான் கேக்குற கேள்வி:
அடுத்த நாள் வரைக்கும் கூட மனசுல பதியற மாதிரி பள்ளிக் கூடத்துலேயே சொல்லித் தந்துட்டு போக வேண்டியதுதானே!
ஏரோப்ளன் ஓட்டணும்னா அதுக்கு தகுந்த அஸ்திவாரம் போடப்படணும்.
அஸ்திவாரம் சரி இல்லாட்டி கட்டடம் ஸ்டாராங்கா இருக்காது என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று.
அடுத்த நாள் வரைக்கும் கூட மனசுல பதியற மாதிரி பள்ளிக் கூடத்துலேயே சொல்லித் தந்துட்டு போக வேண்டியதுதானே!//
சரி தான். ஆனா இங்க ஒரு நிலமையை யோசிக்கணும்.
வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்.
//நீங்க உங்க பிள்ளையை என்னாவாக்க விரும்பறீங்க? அதாவது உங்கள் கனவுகளை சுமக்கும் சிலுவையாகவா? அல்லது அவர்களது கனவுகளை மதித்து அவர்கள் விருப்பப்படிப்பு படிப்பவனாக ஆக்க விரும்புகிறீர்களா என்பதை பொறுத்து இருக்கிறது.
//
எனக்கு விருப்பமான துறையில் என்னால கலக்க முடியும்! அதே பிடிக்காத துறைல போன "எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" கதைதான்!
படிப்பு, வேலை, பிஸினஸ் -அவங்க சாய்ஸ்!
அவ்வளவு ஏன்? வாழ்க்கைத் துணை கூட அவங்க சாய்ஸ்தான் என்னைப் பொறுத்தவரை! (வேணும்னா ஃப்ரெண்லியா கன்சல்ட்டேசன் குடுப்பேன்)
//ஹோம் வொர்க் கொடுப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அதைப் பத்தியும் கருத்து சொல்லுங்க. //
வீட்ல யாரும் நிம்மதியா இருக்ககூடாதுன்னு தான் கொடுக்குறாங்க
எனக்கு விருப்பமான துறையில் என்னால கலக்க முடியும்! அதே பிடிக்காத துறைல போன "எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" கதைதான்!
படிப்பு, வேலை, பிஸினஸ் -அவங்க சாய்ஸ்! //
இந்த மனப்பான்மை சென்ற தலைமுறை பெற்றோருக்கு இல்லாமல் போனதன் விளைவே பல குடும்பங்களின் பெற்றோர் பிள்ளை உறவு இனிமை இல்லாமல் போனது.
கொண்ட கொள்கையை கடைசிவரை விடாமல் காப்பாற்ற வாழ்த்துக்கள் சிபி.
வீட்ல யாரும் நிம்மதியா இருக்ககூடாதுன்னு தான் கொடுக்குறாங்க//
:)
//அஸ்திவாரம் சரி இல்லாட்டி கட்டடம் ஸ்டாராங்கா இருக்காது என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று.
//
அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்தான்! அதுக்காக எட்டாவது ஃப்ளோர்க்கு போடவேண்டிய காண்க்ரீட் கலவையை அஸ்திவாரத்துலயே கொட்டி வெச்சா எப்படி?
நாங்க படிச்ச சிலபஸும், இப்ப படிச்ச சிலபஸும் கொஞ்சம் கம்பேர் பண்ணுங்க?
//கொண்ட கொள்கையை கடைசிவரை விடாமல் காப்பாற்ற வாழ்த்துக்கள் சிபி.
//
சிம்பிள்!
நம்ம பெற்றோர்களுக்கு கிடைக்காத எஜுகாஷன் நமக்கு கொடுத்தாங்க!
நமக்கு கிடைக்காத வாய்ப்புகளை நம்ம பிள்ளைங்களுக்கொ கொடுத்து சந்தோஷப் படுறோம்!
//வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்//
உண்மைதான்! அதனாலதான் எக்ஸாம், மார்க், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டெல்லாம் கொடுத்து மாணவர்களுக்கிடையே கம்பேரிட்டிவ் மெண்டாலிட்டியை உண்டு பண்ணாதீங்கன்னு சொல்றோம்!
நாங்க படிச்ச சிலபஸும், இப்ப படிச்ச சிலபஸும் கொஞ்சம் கம்பேர் பண்ணுங்க?//
நாம படிச்சது சிலபஸ் இப்ப இருக்கறது பலபஸ் என்பதில் சந்தேகமே இல்லீங்க.
இது வெள்ளைக்காரன் நமக்கு தந்து விட்டு போயிருக்கும் சாபம்.
மெக்காலே முறைக்கல்வியை அவனுடன் எடுத்துச் செல்லவில்லை.
இங்கேயே விட்டுவிட்டுசென்றான்.
அவனது நாட்டில் மாண்டிசோரி முறைக்கல்வியும், பிரிட்டீஷ் முறைக் கல்வியும் தான்.
அவை பாடத்தை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக செய்முறைகளினால் வகுப்பிலேயே புரிந்துக்கொள்ளக்கூடிய முறை
இந்திய அரசு ஏதேனும் செய்தால் தான் நம் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வ்ர முடியும்.
நந்து கூறி இருப்பது போல் இந்த மெக்காலே முறைக் கல்வியால் நாம் படிக்கும் படிப்பு ஒரு விசிட்டிங் கார்டு மாதிரிதான்.
//இந்திய அரசு ஏதேனும் செய்தால் தான் நம் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வ்ர முடியும்.//
அவர்களுக்கு இதற்கு நேரமில்லை
வேறு எதாவது வழி யோசிக்கவும்
இன்னும் சொல்லப்போனால் +2 வரைப் படிப்பு ஒரு பாரமாக இருப்பது தமிழ்நாட்டில்தான்.
10ற்கு பிறகு மற்ற மாநிலங்களில் இண்டர் என்று சொல்லி இளநிலை கல்லூரி (அந்தாக்கால் பீயூசி) மாதிரி இருக்கிறது.
வேறு எதாவது வழி யோசிக்கவும்//
எங்கப்பா மத்தவங்க வந்து உங்க கருத்தை சொல்லுங்க.
காலேஜ்ல கூட கம்ப்யூட்டர் புரோகிராமிங்க் லேப்ல பாத்தீங்கன்னா 20 புரோகிராம் இருக்கும்!
சீனியர் பசங்ககிட்டே நாங்க வாங்கி அதை அப்படியே காப்பி பண்ணி வெச்சிக்கணும்!
அதுவும் 1+2+3+4+5+...n
ஃபைபனோசி சீரியஸ், பிரைம் நம்பர்ஸ்,
எல்லாமே இப்படித்தான் இருக்கும்.
இதை மக் அடிச்சிட்டு வந்து கம்பெனில வந்து ஒரு சிம்பிள் புரோகிராம்க்கு அல்காரிதம் தெரியாம திண்டாடுறாங்க!
அதுக்கு பதிலா
சிம்பிள் இண்ட்ரெஸ்ட், காம்ப்ளெக்ஸ் இண்ட்ரெஸ்ட், ஈஎம்ஐ கால்குலேஷன், இந்த மாதிரி ரியல் லைஃப் சிமுலேட் பண்னுற புரோகிராம்கள் சின்னதா இருந்தாலும் கூட பேங்கிங் டொமைன்ல வர புரோகிராம்களுக்கு ஈஸியா புரியும்!
இந்த பதிவுக்கு தெகாவை இழுத்து விட்டா அவரும் நல்லா குமுறுவார்!
சிலபஸ் - ரியல் லைஃப் என்விரோன்மெண்டை சிமுலேட் பண்னுற மாதிரி இருக்கணும்!
பெரிய கம்பெனிகளில் பெரிய பதவியில் இருக்கும் நபர்களுக்கு கூட இன்வாய்ஸ் ன்னா என்னன்னு தெரியாது! (அவர் தினமும் மளிகைக் கடையில் பில் போட்டு சாமான்களை வீட்டுக்கு வாங்கிட்டுப் போறவரா இருக்கும்)
ஆனா பிஸிக்ஸ்லே தட்டடுக்கு ன்னா என்னன்னு கேட்டா +2விலே படிச்சதை அப்படியே ஒப்பிப்பார்!
தெகா அவர்களுது மெயில் ஐடி என்னிடம் இல்லை.
நீங்களே அழையுங்களேன் சிபி.
இந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் பல பெற்றோருக்கு போய் சேரவேண்டும்.
உங்களுக்குத் தெரிந்த பெற்றோர்களை அழையுங்கள்
அதேதான் சிபி,
அடிப்படை நமது கல்விமுறையில் இருக்கும் பிரச்சனைதான்.
/
நந்து f/o நிலா said...
ஹோம் வொர்க் கொடுக்கற ஸ்கூல் எல்லாத்தையும் புள்ளைங்கள வெளில வர சொல்லிட்டு தீ வெச்சு கொளுத்தனும்.
/
அண்ணே ஈரோடுல இருந்து இதை ஆரம்பிக்கலாமா????
//
வால்பையன் said...
//இந்திய அரசு ஏதேனும் செய்தால் தான் நம் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வ்ர முடியும்.//
அவர்களுக்கு இதற்கு நேரமில்லை
வேறு எதாவது வழி யோசிக்கவும்
//
:))))
//இன்னும் சொல்லப்போனால் +2 வரைப் படிப்பு ஒரு பாரமாக இருப்பது தமிழ்நாட்டில்தான்.//
உண்மை தான் எனக்கெல்லாம் 9-தாவது முடிக்கவே தாவு தீர்ந்து விட்டது.
///
நந்து f/o நிலா said...
ஹோம் வொர்க் கொடுக்கற ஸ்கூல் எல்லாத்தையும் புள்ளைங்கள வெளில வர சொல்லிட்டு தீ வெச்சு கொளுத்தனும்.
/
அண்ணே ஈரோடுல இருந்து இதை ஆரம்பிக்கலாமா????//
சேலம்/கோவை யில் தனது பொதுவாழ்வைத் துவங்க இருக்கும் நந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
(நமக்கும் ஒரு போஸ்ட் பார்த்து ஒதுக்கி வெச்சிடுங்க)
சிலபஸ் பற்றி நாமக்கல் சிபி சொல்வது சரியே. அதையெல்லாம் படித்து விட்டு மறுபடி வீட்டில் வந்து ஹோம் வொர்க் செய்யச் சொன்னால் அயர்வில் சலிப்பில் எத்தனை குழந்தைகள் ஈடுபாட்டுடன் செய்வார்களோ தெரியாது. கடனே என்று செய்வது மனதிலும் பதியாது. கணக்கு போன்றவற்றிற்கு ப்ராக்டிஸ் தேவைதான். மறுக்க முடியாது.மிடில் ஸ்கூல் வரை அதை வகுப்பிலேயே செய்ய வைக்க முடியும். ஹை ஸ்கூல் லெவலில் நாட்டில் இருக்கும் காம்பெடிஷனுக்கு ஈடு கொடுத்து ஓட வேண்டிய கட்டாயத்துக்கு பிள்ளைகள் ஆளாக்கப் படுகிறார்கள்.
வீட்டுப் பாடம் கொடுக்காதீர்கள் என நாம் சொன்னாலும் எந்தப் பள்ளிகளும் கேட்கப் போவதில்லை. அட்லீஸ்ட் குறைக்கச் சொல்லலாம். எல்லாப் பாடங்களிலும் தினம் ஹோம் வொர்க் என்பது விடுத்து இன்ன கிழமையில் இந்த சப்ஜெக்டில் மட்டும் என ஒரு சிஸ்டம் செய்யச் சொல்லலாம். எழுத்து வேலைகள் குறைக்கப் பட்டால் பள்ளியில் நடந்த அன்றைய பாடங்களை ஒரு முறையேனும் ரிவைஸ் செய்ய குழந்தைகளுக்கும் நேரம் கிடைக்கும்.
கருத்துக்கு மிக்க நன்றி
ராமலக்ஷ்மி.
இங்க ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல ஆசைப்படறேன்,
தங்கத்தமிழ் நாட்டிலும் சரி, கொழும்புவிலும் சரி நான் ஆசிரியையாக வேலை பார்த்திருக்கேன்.
ஹோம்வொர்க் கொடுக்காட்டிப்போன பெற்றோர்கள் எங்ககூட சண்டைக்கு வருவாங்க!!!
நீங்க என்ன சொல்லி கொடுத்தீங்கன்னு எங்களுக்கு என்னத் தெரியும்? சும்மா சாப்பாடு எடுத்துகிட்டு பள்ளிக்கூடத்துகு பிள்ளைங்க வர்றாங்க. என்ன கத்துகிட்டாங்கன்னு தெரியனும்ன்ல
ஹோம்வொர்க் கொடுங்கன்னு கேட்ட பெற்றோர்கள் ஜாஸ்தி.
இதுக்கென்ன சொல்றீங்க??!!!!
கொடுக்கட்டும் எழுத்தைக் குறைத்து வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க வைக்கட்டும். அத்தனை அக்கறையோடு வீ.பா கொடுக்கச் சொல்லும் பெற்றோர் அவர்கள் எழுதினரா என்று மட்டும் பார்க்காமல் வாசித்துப் புரிந்து கொண்டுள்ளனரா என்பதையும் கவனித்து உதவட்டும். பள்ளியில் எந்த அளவுக்குப் புரியும் படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்திட வாய்ப்பாக இருக்கும்.
புதுகைத்தென்றல், இன்னைக்கு நிலாவுக்கு ஸ்கூல் அட்மிசன்ங்க. ஒரு மாண்டிசோரி ஸ்கூல். ஆல்ரெடி அங்க என் அண்ணன் பையனும் படிக்கிறான். யூகேஜி படிக்கும் பையனுக்கு ஒரு நாள் ஹோம்வொர்க் கொடுத்திருந்தாங்க. வீஇட்ல நான் ஹோம்வொர்க் செய்யலைம்மா என்று லேசான அழுகையுடன் சொல்லிக்கொண்டிருந்தான்.
என்னடா இது நாம பட்ட கஷ்டம் நம்ம புள்ளைங்களும்படக்கூடாதேன்னுதானே மாண்டிசோரி சிஸ்டட்துல சேர்த்தோம். இப்ப அங்கயும் இப்படியான்னு ரொம்ப மனசு க்ஷ்டமா போயிடுச்சு.
இன்னைக்கு அட்மிசனப்போ நான் அவங்களா கேட்டேன். எப்படி நீங்க ஹோம் வொர்க் கொடுக்கலாம்ன்னு. காரணம் என்னன்னா பேரண்ட்ஸ்.
கருமம் புடிச்சவங்க மாண்டிசோரி ஸ்கூல்னா என்ன ஏதுன்னு கொஞ்சமாச்சும் கேட்டுகிட்டு புள்ளய சேக்க வேண்டியதானே? ஒண்ண்யும் கேக்காம புள்ளய சேர்த்துட்டு மத்த ஸ்கூல் புள்ளைங்க எப்படி எழுதறாங்க, ரைம்ஸ் சொல்றாங்கன்னு கம்பேர் பண்ணி ஸ்கூல்ல வந்து கம்ப்ளெய்ண்டா பண்ணா அவங்களும் என்னதான் பண்ணுவாங்க. மொதல்ல 10% காம்ப்ரமைஸ், அப்புறம் 20% ன்னு இறங்க வேண்டியதான்.
எல்லாம் நம்ம ஆளுங்க பண்றதும் இருக்குங்க.
சரி வாத்தியாருங்க பண்றது தப்பு, பேரெண்ட்ஸ் பண்றதும் தப்பு. அப யார்தாண்டா ரைட்டு?
தெரியலீங்க.
ஆனா புள்ளைங்களுக்கு ஹோம்வொர்க் கொடுக்கரது மட்டும் மஹா தப்பு.
http://jeyamohan.in/?p=491
இதை படித்து பாருங்கள்.
இந்த கொடுமையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அதில் சைக்யாட்ரிஸ்டிடம் ட்ரீட்மெண்ட் போய் இன்னும் 5 வருடத்துக்கு படிப்பு என்ற பேச்சையே எடுக்க கூடாது என்ற அளவுக்கு ஆன குழந்தைகளின் சதவீதம் பற்றி வெளியில் வருவதில்லை. :(
எல்லோருக்கும் தெரிவதெல்லாம் இந்த சில மாவட்டங்களில் உள்ள ஸ்கூல்களில் இருந்து மட்டும் கண்டிப்பாக ஸ்டேட் ரேங்க் வருவது மட்டும்தான்.
இன்னும் இங்க பக்கத்துல நடக்கறதையெல்லாம் முழுசா எழுதுனா பலருக்கு காமெடியா இருக்கும். சிலர் நம்ப கூட மாட்டாங்க.
கண்ணுல சில விஷயங்கள பாக்க முடியலீங்க. முன்னேறனும் முன்னேறனும்ன்னு ஒரு தலைமுறையே பாழாப்போறத பாத்துகிட்டே இருக்கோம்.
//வால்பையன் said...
//நந்து சொல்லியிருக்கிற மாதிரி ஊரோட ஒத்துவாழ்னுதான் பொதுவா நாம இருக்கோம்.//
இவரு பேச்ச கேக்காதிங்க
பெற்றோர்கள் வீட்டு பாடம் செய்யிரது தப்புன்னு சொல்லிகிட்டே, அவர் பொண்ணுக்கு வீட்டுப்பாடம் செய்து கொடுப்பார்//
கண்டிப்பா நிலாவுக்க்கு ஹோம்வொர்க் கொடுத்தா நாந்தான் செஞ்சு கொடுப்பேன்.
இன்னைக்கு ஸ்கூல்ல சொன்னது. என் பொண்ணு ஒவ்வொரு வகுப்புலயும் பாஸ் மட்டும் பண்ணிகிட்டு வந்தா போதும்.என்னோட அதிக பட்ச எதிர்பார்ப்பு அவ்ளோதான்.
நான் மகளுக்கு பள்ளிக்கூடம் தேர்ந்தெடுக்கும் போதே ஹோம் ஒர்க் குறைவாக இருக்கும் பள்ளியாகத்தான் தேர்ந்தெடுத்தேன்.. ஆரம்பத்தில் இந்த ப்ராஜக்ட் தொல்லைகள் இருந்தது.. பிறகு குறைந்துவிட்டது.. அதுவும் கூட ஐடியாக்களை வீட்டில் யோசித்துக்கொண்டு பள்ளியில் ஆக்டிவிடி பீரியடில் செய்தால் போதும் என்று மாற்றிவிட்டார்கள்..
பாடங்களை வாரம் ஒன்றாக பிரித்து ராமலக்ஷ்மி சொல்வது போல வாரத்துக்கு ஒரு பாடத்துக்கு ஒரு சின்ன தேர்வு போல இருக்கும் அது அந்த வாரத்தில் நடத்திய ஒரு பாடத்துக்குத்தான்..
ஆனால் ஒரு எக்ஸ்ட்ரா நோட் போட்டுக்கொண்டு பள்ளியில் படித்ததை இன்னொரு முறை போட்டுப்பார்க்கும்படி கணக்கு மிஸ் ஒரு சிஸ்டம் வச்சிருக்காங்க..
காலையில் 8 மணியிலிருந்து மதியம் 2 வரை படிப்பவர்கள் .. மாலையில் ஒரு இரண்டு மணி நேரம் விளையாடிவிட்டு.. கொஞ்சமேனும் புத்தகத்தை எடுத்து படிப்பார்களானால் ஹோம் ஒர்க் என்றூ ஒன்று அவசியமில்லை..
குழந்தைகளுக்கு கண்டிப்பா ஹோம் வொர்க் குடுக்கனும். ஆனா அது பாட சம்பந்தமா இருக்கக் கூடாது. அவர்களின் பொதுவான கற்பனை சக்தியை , ஆளுமைத் திறனை வளர்க்கப் பயன்படும் விதத்தில் இருக்கனும்.. அது எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதன் பயன்கள்..
1. வீட்டில் குழந்தைகளும் பெற்றோர்களும் விவாதித்து பெரியவர்களின் வழிகாட்டுதல் படி செய்யவைப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குள் நல்ல புரிதல் வளரும்.. ஜெனரேஷன் கேப் என்று சொல்லப் படும் விஷயம் அடிபட்டுப் போகும். குழந்தைகளுக்கும் பெற்றோருடன் இணைந்து செய்யும் செயல்கள் அலுப்பையோ எரிச்சலையோ தராமல் அவர்களுக்கு முழு ஈடுபாட்டை உருவாக்கும்..
2. சிறுவயது முதலே இது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் பின்னாளில் அவர்களுக்கு பொருத்தமான சரியானத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க உதவும்.. இதன் மூலம் வெரும் பணியாளர் கூட்டத்தை மட்டுமே உருவாக்காமல் நல்ல பல தொழில்முனைவோரை உருவாக்க முடியும்.
3. பள்ளி, கல்லூரி அல்லது நேர்முகத் தேர்வுகளில் பயமோ தயக்கமோ இல்லாமல் அவர்களால் செயல்பட முடியும்.
....பாட சம்பந்தப் பட்ட வீட்டுப் பாடங்கள் மட்டுமில்லாமல் 10ஆம் வகுப்பு வரை தேர்வு என்ற மன அழுத்தம் தரும் விஷயத்தயே ஒழிக்க வேண்டும்... தேர்வு இருப்பதால் தான் பாடத்தை புரிந்துக் கொள்வதற்கு முக்கியத் துவம் தராமல் வெரும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்யும் தத்திக்கள் உருவாகிறார்கள்.
... எனக்கு இன்று வரை புரியாத விஷயம்... தேர்வுகள் எதற்கு? அதில் வரும் மதிப்பெண்களை வைத்து ஒருவனின் திறமையை எப்படி கணக்கிடுவது? மதிப்பெண்கள் என்பது மனப்பாடம் சம்பந்தபொ பட்டது தானே?
//வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்.//
இப்டி யோசிக்கிறதே தப்பு அல்லது இயலாமை.. இந்த ஹோம் வொர்க் இம்சையே தனியார் பள்ளிகளில் தான். அரசாங்க பள்ளிகளில் அவ்வளவு கொடுமைகள் இல்லை.
தனியார் பள்ளிகளில் இதுக்கு தான் வாங்கறாங்க கட்டு கட்டா பணம். சரியான விகிதத்தில் வாத்தியார்கள் இல்லைனா நீங்க தான் சண்டை போடனும். அவங்க கையாலாகாத் தனம் அல்லது கொள்ளைக்கெல்லாம் நாம சப்பை கட்டு கட்டக் கூடாது.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஷேர்ஹண்டர் என்ற சக பதிவர் இது தொடர்பாக ஒரு அருமையான பதிவினை முன் வைத்திருந்தார். இந்த இடத்தில் அந்தப் பதிவும் ரொம்ப முக்கியமென்பதல், அதன் சுட்டி இங்கே இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் II .
என்னிடம் கேட்டால் ஒட்டு மொத்த இந்திய கல்வியூட்டு காலவதியாகிப் போன பாட நூல்களையும், பாடம் நடத்தும் அணுகுமுறையையும் கடாசி விட்டு, வகுப்பறை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே உள்ள நட்புறவை மேம்படுத்தி நன்கு ஊடாடும் மன நிலையை கொண்டு வர வேண்டும்.
இதனில் ஆசிரியர்களின் பங்கும், ஆர்வமும் இன்றிமையாதது. இருக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்ற பொழுதிலும், முதலில் பெற்றோர்களுக்கு இது சார்ந்து(கிளிப்பிள்ளை போல ஒப்பிவிப்பது பக்கத்து வீட்டு நவ்யாவை விட என் மக வேகமா சொல்றா பாருங்க, அப்படிங்கிற ஆட்டிட்யுட்) விழிப்புணர்வேற்றுவது ரொம்ப அவசியம்.
அவ்வாறு நடைமுறைப் படுத்தக் கூடிய வகையில் பாடங்களை மாணக்கர்களுடன் ஆசிரியர்கள் "பகிர்ந்துகொள்ளும்" பொழுது(சோ, ஆசிரியர்கள் அப்பப்போ தானும் படிக்கணும், கற்பனையை வளர்த்துக்கிட்டு புதுசு புதுசா விசயங்களோட வந்து சொல்லிக்கொடுக்கணும்), அங்கே பயம் களையப்பட்டு நல்லுறவு இருவருக்குமிடையே நிகழக் கூடும்.
எனவே வாத்திகளுக்கு முதலில் இது தொடர்பாக சிறப்பு வகுப்புக்கள் அதிலும் குறிப்பாக 5ஆம் வகுப்பிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் பொழுது, பயத்திலயே பள்ளீ சார்ந்து ஏற்படும் வெறுப்பும் தேவையற்ற உளைச்சலும் அச் சிறுவ/மிகளிடையே அகற்றப்படலாம்.
அதுவே நம்மூரில் ஒரு பெரிய குறைதான், என்பது எனது அவதானிப்பு. எனது சொந்த அனுபவமும் கூட!
மற்றபடி வீட்டுப்பாடம் அவசியம் அது எந்தளவிற்கென்றால் ஒரு குறிப்பிட்ட மாணவன் எந்த பாடப் பகுதியில் வீக்காக இருக்கிறானோ அந்தப் பகுதியில் மேலும் சில செய்முறைகள் வீட்டுப் பாடங்கள் செய்யும் பொழுது அகற்றப்படலாம். பெற்றோர்கள் அது தொடர்பாக அவர்களுடன் ஊடாடலாமே ஒழிய அவர்களுக்காக முழுமையாக செய்து கொடுப்பது சுத்த முட்டாள்தனம்.
மேலும் சிபி இங்கு நிறைய விசயங்களை சிலபஸ் சார்ந்தும், அதன் சுமை பற்றியும் நன்றாகவே எடுத்துரைத்திருக்கிறார். விட்டு விடுகிறேன்.
First of all, here is my request to all the educators who are in this noble field, dont come to work just to get paid especially if you are initiating the kids to learn in elementary school level. That is where, the kids need more attention, patience, tolerance from the adult-teacher side; therefore, educate yourself before you enter into their sanctom.
Thanks!
//ஹோம் வொர்க் கொடுப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அதைப் பத்தியும் கருத்து சொல்லுங்க. //
ரொம்ப சிம்பிள்!..
பள்ளியின் சுயநலன் தான்.. ஹோம் வொர்க் செய்ய வைத்து அடிக்கடி பரீட்சை வைத்து மனப்பாடம் பண்ண வைத்து மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைத்து அதை பக்கம் பக்கமாக கலர் விளம்பரம் குடுத்து லட்சங்களில் டொனேஷன் வாங்கி ஒரு கல்வி நிறுவனத்தை பல கவி நிறுவங்களாக உயர்த்தும் ஒரே கொள்ளை நோக்கம் தான்.
//First of all, here is my request to all the educators who are in this noble field, dont come to work just to get paid //
அட போங்க தெக்கி.. நம்மூர்ல கந்து வட்டிக்கு விடறவங்க பதி பேர் வாத்தியார்கள் தான்.. முதலுக்கே மோசம் பண்ணிடுவீங்க போல.. :))
//சிம்பிள்!
நம்ம பெற்றோர்களுக்கு கிடைக்காத எஜுகாஷன் நமக்கு கொடுத்தாங்க!
நமக்கு கிடைக்காத வாய்ப்புகளை நம்ம பிள்ளைங்களுக்கொ கொடுத்து சந்தோஷப் படுறோம்!//
இது தான் ப்ராக்டிகல். :)
தல சூப்பரா சொல்லிட்டார். :)
//கண்டிப்பா நிலாவுக்க்கு ஹோம்வொர்க் கொடுத்தா நாந்தான் செஞ்சு கொடுப்பேன்.
இன்னைக்கு ஸ்கூல்ல சொன்னது. என் பொண்ணு ஒவ்வொரு வகுப்புலயும் பாஸ் மட்டும் பண்ணிகிட்டு வந்தா போதும்.என்னோட அதிக பட்ச எதிர்பார்ப்பு அவ்ளோதான்.//
இந்த விஷயத்தை ஏத்துக்க முடியாது.. இது உங்களோட திணிப்பு.. உங்க எதிர்பார்ப்புக்காக பாஸ் மட்டும் பண்ணா போதும்னு விட்ரலாம்.அவளுக்கும் அதே பழகிப் போச்சின்னு வைங்க.. நாளைக்கு மத்த புள்ளைங்க ப்ராக்ரஸ் ரிப்போர்ட் வச்சி பெருமை பேசும் போதும் அவர்களை ஒப்பிட்டு ( இதை உங்களால் கண்காணிக்கவோ தடுக்கவோ முடியாது) ஆசிரியர்கள் பேசும் போது உங்க பொண்ணுக்கு ஏற்படுமே தாழ்வு மனப்பான்மை, அதை உங்களால் ஒன்னும் செய்ய முடியாது.. அந்த தாழ்வு மனப்பானமை அவளை எந்த நிலைக்கும் கொண்டு போகும்... வீட்டில் இருக்கும் உங்கள் 3 பேரின் மனநிலையை விட வகுப்பறையில் இருக்கும் பலரின் மனநிலை தான் அவளை ஆக்கிரமிக்கும்.
ஊரோடு ஒத்துப் போகனும்னு சொன்னிங்களே.. அது இதுக்கும் இருக்கனும்.. வேற வழி இல்லை.
ஒரு பர்த்டே பார்டியில் ஒருத்தங்க கிட்ட பேசும்போது அவங்க பிள்ளைய பள்ளிக்கூடத்துல போடாம ஹோம் ஸ்கூலிங்க்ன்னு வீட்டுல இருந்தே தான்படிப்பிக்க்றதா சொன்னாங்க.. என்ன மெத்தடுங்க ஃபாலோ செய்யறீங்கன்னு கேட்டேன். .. நானா எதெல்லாம் இந்த ஏஜுக்கு சரின்னு நினைக்கிறோனோ அதெல்லாம் வாங்கி முழு நாளு ம் பிள்ளைங்க கூட இருக்கேன்.. ஆர்ட் மற்றூம் வேற சில க்ளாஸ் தனியா எடுத்துக்கிறாளாம்.. பத்தாவது வரை இப்படித்தான் அப்பறம் யோசிப்போம்ங்கறாங்க..
பெங்களூர் , ஹைதராபாத்ல இதுபோல நிறைய பேரு இருப்பதாவும் ..இன்னும் வெளிநாட்டில் இதை நிறைய பேரு நம்பறதாவும் சொல்லிக்கிறாங்க..
அவங்க இத்தனைக்கும் இரண்டு பெரிய பள்ளியில் டீச்சிங்கல் இருந்துருக்காங்க.. வேஸ்டுங்க என்ன சொல்லி க்குடுக்கறாங்கன்னு சொன்னாங்க..
//இது உங்களோட திணிப்பு.. உங்க எதிர்பார்ப்புக்காக பாஸ் மட்டும் பண்ணா போதும்னு விட்ரலாம்//
இது திணிப்பு இல்ல. தப்பா புரிஞ்சுகிட்ட. மார்க் நிறய எடுக்கனும்ன்னு ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னுதான் சொல்ல வந்தது. அப்படி சொன்னாதான் அது திணிப்பு.
மார்க்,ரேங்க் பற்றிய எதிர்பார்ப்புதான் பாஸ் பண்ணா போதும்கறது. அவளுக்கு கம்மியான மார்க் எடுப்பது கவுரவ குறைச்சலா தாழ்வு மனப்பாண்மைய தருதுன்னா அதுகு அவளே மார்க் நிறய எடுக்க முயற்சி எடுக்க வேண்டியதான்.
ஒரு அப்பனா நான் வீட்டுல வாத்தியாரா இருக்க முடியாது.
ஒரு அப்பன் புள்ளைக்கு வாழ்க்கையை, மனுசங்களை, நியாய தர்மங்களை மற்றும் ப்ராக்டிகல் உலகத்தைத்தான் சொல்லிதர வேண்டும்.
எல்லாரும் இன்னும் நெறைய கருத்துக்களை அள்ளித் தெளிங்க.. எனக்கும் எப்போவாச்சும் ஒதவாமலா போய்டும்? :)))
எனக்கு இன்னும் குழந்தைங்க இல்ல
இருந்தாலும் நானும் ரவ்டிதான்
// முதல்ல 8 மணி நேர பள்ளிக் கூடமே ஜாஸ்தின்னு சொல்லுவேன்! //
உங்களுக்கு சரி உங்க வீட்டுல கேட்டுப்பாருங்க !
// ஆனா இப்போ அந்த அளவு சிலபஸை பின்சு மூளைகளுக்குள்ளே திணிக்கிறாங்க! என்னவோ 8வது படிச்சவுடனே ஏரோப்ளேன் எஞ்சினியர் ஆகி ரிப்பேர் பண்ணிடனும், பத்தாவது முடிச்சவுடனே நாசாவுக்கு போயி ராக்கெட் விட புரோகிராம் எழுதணும் போன்ற சிலபஸ்தான்! //
இப்படியெல்லாம் விரும்புறது ஆசிரியர்களா பெற்றோகளா ?
உங்க குழந்தைங்க எஞ்சினியர் ஆயி ரிப்பேரும் பண்ணனும் ஆனா மூளைக்குள்ள திணிக்கவும் கூடாது.படிக்குரதுல ஒருசில பசங்களுக்கு மட்டும் தான் (30% சொல்லலாமா )பள்ளியில சொல்லித்தறதே போதுமானதா இருக்கு.மத்த பசங்களையும் கொஞ்சம் நினைங்க சாமி
எந்த பள்ளி சென்ட்டம் வாங்குதுன்னு பாத்துதானே செத்துறீங்க அப்ப உங்க பசங்களும் எல்லாத்துலையும் சென்ட்டம் வாங்கனும்னு நீங்களும் நினைக்கத்தானே செய்யுறீங்க.அப்போ அவங்களோட சேந்து நீங்களும் கொஞ்சமாச்சும் உலச்சுத்தான் ஆகணும்.
உங்க பசங்க எதுவா ஆகனும்னு முதல்ல தீர்மானிக்குறது நீங்கதான் அப்புறம்தான் பசங்க.
அவன் நல்லா படிக்கலைனா அந்த கெட்டப்பேரு அவனுக்கு மட்டும் இல்லை அவன் சார்ந்த பள்ளிக்கும் தான்.
// எனக்கு விருப்பமான துறையில் என்னால கலக்க முடியும்! அதே பிடிக்காத துறைல போன "எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" கதைதான்! //
போன வாரம் தாம்பரத்துல நடந்த மக்கள் அரங்கத்துல ஒரு பையன் பேசினான் எனக்கு Bcom CA பண்ணனும்னு ஆசை ஆனா அதை விட CS பண்ணினாத்தான் உனக்கு நல்லதுன்னு சொல்லி படிக்க வெச்சாங்க இப்போ நான் நல்ல சம்பளம் வாங்குறேன்.ஒருனா அப்பா கேட்டாரு நீ விரும்புனத படிக்க வெக்கலைன்னு என்மேல வருத்தமான்னு இல்லை நீங்க சொன்னதா கேட்டதால தான் இன்னயுக்கு கைநிறைய சம்பாதிக்குறேன்னான்.அப்போ அவன் அப்பா சொன்னபடி கேட்டதால்தான் அவன் இந்த நிலைமைக்கு வந்தான்.
(இதுல பாருங்க பசங்க படிக்குறதே பணத்துக்காகத்தான்னு ஆக்கிட்டாங்களே அப்படின்னு நினைக்கத்தோணுது இதுக்கு யாரு காரணம் பெற்றோர்களே )
//ஹோம் வொர்க் கொடுப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? //
நாபடிக்கரப்பவுந்தான் இருந்துது நல்லா படிக்குற பசங்க வகுப்புலயே வீடுப்பாடத்த முடிச்சாங்க.ரவுசு பார்ட்டிங்க வீட்டுலையும் பண்ணாம அடுத்தநாள் வெளில முட்டிபோட்டு நிப்போம்
வகுப்புல ஒரு 8 பீரியடுல வெவ்வேரையா யான பாடங்கள வீட்டுல வந்து திரும்ப ஒரு முறை படிக்குரதுன்னு அர்த்தம்.
அதுக்கு ஒரு மணிநேரம் செலவு பண்ணுறது தப்பில்லை
/ / உண்மைதான்! அதனாலதான் எக்ஸாம், மார்க், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டெல்லாம் கொடுத்து மாணவர்களுக்கிடையே கம்பேரிட்டிவ் மெண்டாலிட்டியை உண்டு பண்ணாதீங்கன்னு சொல்றோம்! //
இதுல உங்க பங்கும் இருக்கு அவனப்பாறு ஊட்டுல குடுக்குற பணத்த எப்படி சேக்குறான்
அந்தப்புல்லையப்பாறு எப்படி வீட்டுவேலை செய்யுறா இப்படி நாம சொல்லுறதில்லை இது வெட்டி வேலை
ஆனா இது ஒரு ஆரோக்கியமான் போட்டி.இந்தப்போட்டில தொல்வியக்கூட பசங்க ரசிக்கப்பலகிக்குறாங்க
// இது வெள்ளைக்காரன் நமக்கு தந்து விட்டு போயிருக்கும் சாபம்.//
இது எப்படின்னே எனக்குப்புரியலைங்க வெளிநாட்டுல இருக்கவிங்க பசங்கள இங்க கொண்டுவந்து படிக்க வைக்குறாங்க.ஏன்னு கேட்டா அங்க ஹோம் வொர்க் இல்ல சிலபஸ் ரொம்ப கம்மி ஸ்கூல் பொறுத்தவரை இங்க தான் சிறப்பு கல்லூரின்னா அங்க பெஸ்ட்ன்னு சொல்லுறாங்க
இக்கரைக்கு அக்கறை பச்சை.
என கருத்து ஹோம் வொர்க் அவசியமே
அப்படி உங்க பசங்க ரொம்ப கசட்ப்படுறதா மனசுக்குப்பட்டா தமிழ் பள்ளிகள்ல படிக்க வைங்க மத்த ஊரு எப்படின்னு தெரியாது ஈரோடு கோவை பகுதிகள்ல அரசுப்பள்ளிகள் நல்ல சிறப்பா செயல்படுத்து பாடத்திட்டமும் கம்மி செலவும் உலகம்மும் புரியும்
// பொடியன்-|-SanJai said...
எல்லாரும் இன்னும் நெறைய கருத்துக்களை அள்ளித் தெளிங்க.. எனக்கும் எப்போவாச்சும் ஒதவாமலா போய்டும்? :))) //
same blood.
நந்து, நாமக்கல் சிபி ரெண்டுபேரோடவும் உடன்படறேன்.
பி.கு: என் தம்பி ஸ்கூல் டீச்சர். என் சித்தப்பா (இப்போ ரிட்டயர்ட்) ஸ்கூல் ஹெட் மாஸ்டர். இன்னொரு சித்தப்பா சி.இ.ஒ!
(நெஜமாங்க. நக்கலில்ல!)
நந்துவின் கருத்துக்களும், அதில் இருக்கும் உண்மைகளும் ஆச்சர்யமளிக்கிறது.
சபாஷ்!
//எனக்கு இன்னும் குழந்தைங்க இல்ல
இருந்தாலும் நானும் ரவ்டிதான் //
கார்த்திக்! நானும் உங்களைப் போல ஒரு ரவுடிதான்!
//உங்க குழந்தைங்க எஞ்சினியர் ஆயி ரிப்பேரும் பண்ணனும் ஆனா மூளைக்குள்ள திணிக்கவும் கூடாது.படிக்குரதுல ஒருசில பசங்களுக்கு மட்டும் தான் (30% சொல்லலாமா )பள்ளியில சொல்லித்தறதே போதுமானதா இருக்கு.மத்த பசங்களையும் கொஞ்சம் நினைங்க சாமி
//
நான் சிலபஸ் அதிகம்னு சொல்றது எல்லா பசங்களுக்கும் சேர்த்துத்தான் சாமி!
மூளைக்குள்ளே நிறையத் திணிக்க வேண்டாம்னுதான் சொல்றேன்!
திணிக்க வைக்கிறதே தப்பு! (30% பசங்களை விடுங்க! அவங்களா படிச்சிக்குவாங்க!) மத்தவங்களும் சேர்த்து சொல்லித் தர பாடத்துலே ஆர்வத்தை உண்டாக்கி ரசிச்சி படிக்க வைக்கணும்!
சரியா படிக்கலையா! எழுது 5 முறை 10 முறை இம்போசிசன்னு கை வலிக்க வலிக்க எழுத வெச்சிட்டா அப்போதைக்கு வேணா மனப்பாடம் (கவனிக்க வெறும் மனப்பாடம் மட்டுமேதான் ஆகும்) வேணா ஆகுமே ஒழிய மனசுல நிக்காது சாமி!
//எந்த பள்ளி சென்ட்டம் வாங்குதுன்னு பாத்துதானே செத்துறீங்க அப்ப உங்க பசங்களும் எல்லாத்துலையும் சென்ட்டம் வாங்கனும்னு நீங்களும் நினைக்கத்தானே செய்யுறீங்க.அப்போ அவங்களோட சேந்து நீங்களும் கொஞ்சமாச்சும் உலச்சுத்தான் ஆகணும்.
//
இதுல பெற்றோர்கள் தப்பும் இருக்கத்தான் செய்யுது! இல்லைன்னு சொல்லலை கார்த்திக்!
பெற்றோர்கள், பள்ளிகள் எல்லாரும் சேர்ந்துதான் குழந்தைகளை கொடுமை பண்ணுறாங்க!
இதுல செண்டம் வாங்குற போட்டில பள்ளிகள் செய்யும் கூத்து இருக்கே!
9ம் வகுப்பு சிலபஸை அரையாண்டுக்குள்ளே முடிச்சிட்டு 10வது சில்பஸை ஆரம்பிச்சிடுவாங்க!
ஒரு வருஷத்துலே படிக்க வேண்டிய சிலபஸை அரை வருஷமும், அடுத்த ஒரு வருஷம் படிக்க வேண்டிய சிலபஸை 1 1/2 வருஷமும் படிக்க வெக்கிறாங்க!
ரிசல்ட் 100% ஓகே! புரொடக்டிவிட்டி என்ன ஆச்சுன்னு ஒரு கேள்வி வருதே!
8 மணி நேரத்துலே எழுதுற ஒரு புரோகிராமை 4 மணி நேரம் ஓவர் டைம் போட்டு எழுதுறேன்!
நேரம் பார்க்காம வேலை செய்யுறேன்னு நல்ல பேர் கிடைக்கலாம்! அவுட்புட்டும் வந்துடும்! ஆனா அதுவா திறமை?
அதுவா புரடக்டிவிட்டி?>
அரை வருஷம் மட்டும் படிச்சா போதும் என்பதால் 9 வது/+1 சிலபஸ் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததா? அப்படி முக்கியமல்லாத ஒண்ணு எதுக்கு இருக்கணும்?
//உங்க பசங்க எதுவா ஆகனும்னு முதல்ல தீர்மானிக்குறது நீங்கதான் அப்புறம்தான் பசங்க.
//
அந்த தீர்மானம் 10வது முடிச்சிட்டு வந்தா போதும்! அதுவரை ஜெனரல் எடுகேஷந்தான்!
எல்லாப் பெற்றோர்களையும் போல நாம பிரஷர் கொடுக்கத் தேவை இல்லை! இந்தக் காலத்துப் பசங்க ரொம்பவே கிளியரா இருக்காங்க!
அவங்க பாத்து படிச்சிக்குவாங்க!
நாம தொடர்ந்து படி, படி, டியூஷன் போ, ஹோம்வொர்க் செய்யின்னு நச்சரிச்சாத்தான் படிப்புன்னாலே வெறுப்பு வந்துடும் பசங்களுக்கு!
புத்தகமும் கையும் இருந்துட்டா அப்ஸ் தொந்தரவு இருக்காதுன்னு பபயனும் ரெண்டு புக்கை எடுத்துகிட்டு படிக்க ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போறேன்னு கெளம்பிடுவான்!
நாம வேணா பெருமையா சொல்லிக்கலாம்! சனி ஞாயிறு கூட படிக்க குரூப் ஸ்டடிக்கு போயிடுடறான்னு! அந்த குரூப் ஸ்டடியெல்லாம் எங்கே நடக்கும்னு (அதெ குரூப் ஸ்டடியெல்லாம் போன) எங்களுக்கு நல்லாவே தெரியும்!
அதை விட வீட்டுல பையனா ஃப்ரீயா விட்டமுன்னா அவனே வந்து இந்த பாடத்துலே அவ்ளோ மார்க் வாங்கினேன், இதுலே இவ்ளோ வாங்கினேன், ஒரு சப்ஜெக்ட் ஊத்திகிச்சு, நாளைக்கு பசங்க எல்லாம் சேர்ந்து சினிமா போலாம்னு இருக்கோம்...னு நிறைய ஷேர் பண்ணிப்பாங்க!
நமக்கும் ஒரு தைரியம் இருக்கும்! எதுவா இருந்தாலும் பையன் சொல்லிட்டுத்தான் செய்வான்னு!
அப்பாடா... ஹோம் ஒர்க் செய்கிற மாதிரி, ஒரிஜினில் போஸ்ட், பின்னூட்டம் எல்லாவற்றையும் படித்து முடிச்சு, நாம் எழுதுவதற்கு கிட்டதட்ட 45 நிமிஷம் ஆகிவிட்டது.
இப்போதுள்ள படிப்பில், மாணவர்கள், கரைத்து குடிக்க வைக்கின்றார்கள். அதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. உதாரணத்திற்கு, ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம், பாங்க் டி.டி ஃபார்ம் நிரப்ப தெரியாத எந்தனையே பட்டதாரிகளை நாம் காண முடியும். முதுகலை பட்டம் முடித்தவர்களாக இருப்பார்கள், அவர்களால் ஒரு லெட்டர் கூட எழுத முடியாமல் இருக்கின்றது.
மிக கொடுமையான விஷயம், சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், வெளி நாட்டிற்கு வேலைக்கு சொல்லும் ஒரு பட்டதாரிக்கு, இமிகிரேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்ய தெரியவில்லை. என்னிடம் கேட்டு பூர்த்தி செய்தார். இத்துணைக்கும் அவர் மிக பெரிய பொறுப்பில் வேலை செய்கின்றார். இதற்கு காரணம் இப்போதுள்ள கல்வி முறைதான். இப்போதுள்ள முறையில் நிறைய மார்க் வாங்குவதுதான் முக்கியம் என்கின்றார்களே தவிர, வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வதற்கான வழி முறைகள் மிகவும் குறைந்துவிட்டன.
நான் படிக்கும் போது மனகணக்கு என்று ஒரு வகுப்பு உண்டு, இப்போதெல்லாம் அந்த வழக்கம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது. குழைந்தை பருவத்தில் ஒடி, ஆடி விளையாடமல், பள்ளி, பாடம், ஹோம் ஒர்க், ட்யூஷன், டி.வி. என்று போனால், உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும். விளையாடும் போது சிறுவர்கள் விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான விஷயங்களை புரிந்து கொள்ள இயலும். இந்த ஹோம் ஒர்க் தனியார் பள்ளிகளில் தான் அதிகம் உள்ளது, அரசு பள்ளிகளில் அது அவ்வளவாக இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணம்.
இதில் மிகக் கொடுமையான் விஷயம், 8 மணிக்கு நாம் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது கூட குழைந்தைகள் ஹோம் ஒர்க் செய்து கொண்டு இருப்பார்கள். நாம் எதாவது சொல்ல போனால்,
போப்பா உனக்கு புரியாது, இன்னும் ஹோம் ஒர்க் முடிக்கவில்லை என சொல்லி நம்மிடம் மனம் விட்டு பேசுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
இப்போதுள்ள கல்வி முறையினால், நம் குழைந்தைகள், இழந்தவைகள் மிக மிக அதிகம்.
இராகவன், நைஜிரியா
//பி.கு: என் தம்பி ஸ்கூல் டீச்சர். என் சித்தப்பா (இப்போ ரிட்டயர்ட்) ஸ்கூல் ஹெட் மாஸ்டர். இன்னொரு சித்தப்பா சி.இ.ஒ!
//
பரிசல்! இதுல அவங்களோட வியூவும் என்னன்னு கேட்டு இங்கே பதிவு செய்யுங்க!
நான் என் பெரிய அக்காகிட்டே (அவங்களும் டீச்சர்தான்)கேட்டுச் சொல்லச் சொல்லி என் மாப்ஸ்கிட்டே சொல்லி இருக்கேன்!
டாக்டர். ருத்ரன் அவர்களையும் இதற்கு அழைத்தால், மிக நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். இராகவன், நைஜிரியா
//இப்போதுள்ள படிப்பில், மாணவர்கள், கரைத்து குடிக்க வைக்கின்றார்கள். அதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. உதாரணத்திற்கு, ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம், பாங்க் டி.டி ஃபார்ம் நிரப்ப தெரியாத எந்தனையே பட்டதாரிகளை நாம் காண முடியும். முதுகலை பட்டம் முடித்தவர்களாக இருப்பார்கள், அவர்களால் ஒரு லெட்டர் கூட எழுத முடியாமல் இருக்கின்றது.
//
கரெக்ட்! +2 வரைக்கும் மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நம் பிள்ளைகளை மாற்றி விடுகிறோம்!
லீவு லெட்டர் எழுதறதைப் பார்த்தாலே தெரிஞ்சி போயிடும்!
"சார் ஐயம் சஃபரிங்க் ஃப்ரம் ஃபீவஃர்" என்ற லைன் இல்லாம கடிதம் எழுதச் சொல்லுங்க பார்ப்போம்! பசங்க திண்டாடிடுவாங்க!
சப்ஜெக்ட் தவிர வேற கதையோ, கவிதையோ எழுதிட்டா போச்சு! உருப்படாத வழில போயிகிட்டிருக்கான்னு சொந்தக் காரங்க வரை சொல்லிடுவாங்க!
படைப்புத் திறனை வளர்த்துக்க பசங்களுக்கு நேரமே கிடைக்காது!
ஒரு வழியா +2 முடிச்சிட்டு வேற ஊர் எஞ்சினியரிங்க்/மெடிக்கல் காலேஜ்லயோ சீட் கிடைச்சிட்டாதான் பசங்களுக்கு மத்த விஷயங்களுக்கு டைமே கிடைக்குது!
அதுவும் அந்த வயசுல எதெதுல செலவு ஆகும்னு சொல்லவே தேவைஇல்லை!
//டாக்டர். ருத்ரன் அவர்களையும் இதற்கு அழைத்தால், மிக நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். இராகவன், நைஜிரியா
//
இதை நான் வழிமொழிகிறேன்!
எனக்கு அவர் மெயில் ஐடி இல்லையே!
//இதில் மிகக் கொடுமையான் விஷயம், 8 மணிக்கு நாம் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது கூட குழைந்தைகள் ஹோம் ஒர்க் செய்து கொண்டு இருப்பார்கள். நாம் எதாவது சொல்ல போனால்,
போப்பா உனக்கு புரியாது, இன்னும் ஹோம் ஒர்க் முடிக்கவில்லை என சொல்லி நம்மிடம் மனம் விட்டு பேசுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.//
ஆமா! அவங்க கஷ்டம் அவங்களுக்கு! நாளைக்கு ஹோம் வொர்க் செய்யலைன்னு வெளில நிக்க வைப்பாங்க! பேரண்ட்ஸைக் கூட்டிட்டு வான்னு சொல்லுவாங்க!
:(
பெத்தவங்களுக்கும், புள்ளைங்களுக்கும் பெரிய கேப் வரதே இங்கதான்!
அப்புறம் மார்க் கம்மியா வாங்குற பசங்களை வீட்டுல வாயைத் திறக்க விட மாடாங்க! நீ வாங்குற மார்க்குக்கு பேச்சு ஒண்ணுதான் குறைச்சல்னு சொல்லி வாயை அடைப்பாங்க! சொல்ல நினைச்சதை சொல்ல முடியாம மனசுல வெச்சிப் புழுங்குற எத்தனை பேரோ!
//இராகவன், நைஜிரியா said
விளையாடும் போது சிறுவர்கள் விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான விஷயங்களை புரிந்து கொள்ள இயலும்//
இராவகன் ஒரு கொடுமையான காமெடி சொல்றேன். இதே நாமக்கல்,திருச்செங்கோடு,ராசிபுரம் பக்கத்துல உள்ள ஒரு ஸ்டேட் ரேங்க் வாங்கும் ஸ்கூல் ( ஸ்கூல் பெரெல்லாம் வேணாங்க. பாதிபய சொந்தகாரங்க)
நம்மள்ளாம் இப்படி சொல்றோம்ன்னு வாரத்துல ஒரு மணி நேரம் கண்டிப்பா விளையாட்டுக்குன்னு ஒதுக்கிட்டாங்க. அந்த டைம் ல ஒவ்வொரு பையன்கிட்டயும் ஒரு பெரிய பந்து ஒண்ண கொடுத்திருவாங்க.நம்ம பசங்க ஆல்ரெடி ப்ராய்லர் கோழியாவே வளந்துட்டானுங்களா.. அந்த பந்த வெச்சுகிட்டு என்ன பண்றதுன்னு தெரியரதில்ல... பொறந்ததிலிருந்து எங்கயும் விளையாட உட்டதில்லயா.சோ எந்த விளையாட்டும் தெரியாது
அதுவுமில்லாம ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பந்து.கொஞ்ச நேரம் பேந்த பேந்த முழிச்சுட்டு பந்த மேல மேல தூக்கி போட்டு புடிச்சுப்பாங்க. அவ்ளோதான்.
அப்புறம் மிலிட்டரி டைம் ஆரம்பிச்சுடும் மெஷின் மாதிரி கெளம்பிட வேண்டியதான்...
(மிகைப்படுத்தல் இல்லைங்க. உண்மை உண்மை உண்மை)
//அதுவுமில்லாம ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பந்து//
ஒரே ஒரு பந்தை கொடுத்து விளையாட விட்டா பேரண்ட்ஸ் கேப்பாங்க இல்லையா! நாங்க குடுக்குற ஃபீஸ் என்ன ஆச்சுன்னு?
:))
//நம்ம பசங்க ஆல்ரெடி ப்ராய்லர் கோழியாவே வளந்துட்டானுங்களா.. அந்த பந்த வெச்சுகிட்டு என்ன பண்றதுன்னு தெரியரதில்ல... பொறந்ததிலிருந்து எங்கயும் விளையாட உட்டதில்லயா.சோ எந்த விளையாட்டும் தெரியாது//
:))
ஆனா பசங்க துக்கத்துல இருக்கும்போது லேசா கிள்ளிப் பாருங்க
"ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்" னு கடகடன்னு ஒப்பிப்பாங்க!
//( ஸ்கூல் பெரெல்லாம் வேணாங்க. பாதிபய சொந்தகாரங்க)
//
கேள்விப்பட்டிருக்கேன்!
9வது சிலபஸ் பாதிவருஷம், +1 சிலபஸ் பாதிவருஷம்
அல்லது மொத்தமாவே 10 வது ரெண்டு வருஷம், +2 ரெண்டு வருஷம்னெல்லாம் இந்த ஸ்கூல்லே கேள்விப் பட்டிருக்கேன்!
//"ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்" னு கடகடன்னு ஒப்பிப்பாங்க! //
சின்ன வயசுல ரொம்பவே பாதிக்கப்பட்ட ஒரு ஆள் மாதிரி தெரியுது.
//சின்ன வயசுல ரொம்பவே பாதிக்கப்பட்ட ஒரு ஆள் மாதிரி தெரியுது//
ஆமாங்க! :(
எல்லாப் புகழும் எங்க மாணிக்கம்(9ம் வகுப்பு கணிதம்) சாருக்கே!
ஒப்பிக்கும்போது ஒரு வார்த்தை மிஸ் ஆனாலும் முட்டிலயே அடி விழுமே!
அதே மாதிரி ஒரு நாள் 9ம் வகுப்புலே கெமிஸ்ட்ரி வாத்தியார் உதயகுமார் கரும்புச் சர்க்கரையின் மூலக்கூறு வாய்ப்பாடு என்னன்னு கேட்டு அடிச்சாரு பாருங்க!
ஏறத்தாழ கிளாஸ்ல இருந்த எல்லாப் பசங்களும் அடிவாங்கி அழுதோம்! கடைசியா ஒரே ஒரு பையன் மட்டும் தைரியத்தை வரவழைச்சிகிட்டு அழுதுகிட்டே சொன்னான். "சார்! நேத்து நீங்க அந்த கேள்வியை குறிச்சே குடுக்கலைன்னு"
"ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்"
ஐயய்யோ! இன்னொரு லைன் சொல்ல மறந்துட்டேன் பாருங்க!
"ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்
ஏ ஸ்கொயர் ஈஸிகோல்ட்டு பீ ஸ்கொயர் ப்ளஸ் ஸீ ஸ்கொயர்"
இதையெல்லாம் ஒருதடவை லெக்சரரா இருக்கும் என் சித்தியிடம் சொல்லி இப்ப கூட கனவுல எக்சாம் ஹால்ல பதட்டத்தோட உக்காந்திருக்க மாதிரி கனவு வருதுன்னேன்.
அதுக்கு அவங்க" அடப்போடா எனக்கே எக்சாம் கனவு இன்னும் வருது. கண்ணு முழிச்சு பாத்த பின்னாடித்தான் அப்பாடா எக்சாம்லாம் இல்லன்னு நிம்மதியாகுன்னாங்க"
இது எப்படி இருக்கு :(
நிறைய எழுதனும்னு தோணிச்சு. எல்லாத்தையும் கமெண்டா போட முடியாதுங்கறதுனால ஒரு பதிவே போடுடேன்
http://memynotepad.blogspot.com/2008/11/blog-post_12.html
நந்து, சிபி இவங்க கருத்துக்களோட உடன்படறேன்.
//கனவுல எக்சாம் ஹால்ல பதட்டத்தோட உக்காந்திருக்க மாதிரி கனவு வருதுன்னேன்.//
இது ரொம்பவே நிசங்க. எனக்கு மட்டும்தான் வருதோன்னு நினைச்சேன். நிறைய பேருக்கு வருதுன்னு நினைக்கும்போது ஒரு அல்ப்ப சந்தோசம். :-))))
// இது வெள்ளைக்காரன் நமக்கு தந்து விட்டு போயிருக்கும் சாபம்.
மெக்காலே முறைக்கல்வியை அவனுடன் எடுத்துச் செல்லவில்லை.
இங்கேயே விட்டுவிட்டுசென்றான்.
அவனது நாட்டில் மாண்டிசோரி முறைக்கல்வியும், பிரிட்டீஷ் முறைக் கல்வியும் தான்.
அவை பாடத்தை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக செய்முறைகளினால் வகுப்பிலேயே புரிந்துக்கொள்ளக்கூடிய முறை//
புதுகை தென்றல் சொன்ன மாதிரி அவங்கல்லாம் மாறிட்டாங்க. இங்க (ஆஸ்திரலியா) மகள் படிக்கிற பள்ளியில பாடப் புத்தகங்களே கிடையாது. வகுப்புல அவங்க சொல்லிக் கொடுக்கறதும், நோட்சும் மட்டும்தான். டெர்ம் ஆரம்பிக்கும்போது, என்ன சொல்லி தரப் போறோம்னு (silabus மாதிரி) குடுக்கறாங்க. விருப்பமிருந்தால், parents அதிகமா சொல்லித் தரலாம்.
ஹோம் வொர்க், வாரத்துக்கு ஒன்னு. அதுவும் பொது அறிவு தொடர்பானவை. மூணு சாய்ஸ் கொடுத்து, அதுல விரும்பினதை தேர்ந்தெடுக்க சொல்லறாங்க. வருட ஆரம்பத்துல, ஹோம் வொர்க் பத்தி parents என்ன நினைக்கிறாங்கன்னு சர்வேயும் எடுக்கிறாங்க.
நம்ம ஊருக்கு திரும்பி போலாமான்னு பேச்சு வரும்போது மக வேண்டவே வேண்டாம்னு சொல்வா. காரணம், நம்ம ஊர் பள்ளிகளைப் பத்தின பயம். விடுமுறைக்கு வரும்போது, உறவினர் வீட்டு பிள்ளைகளைப் பார்த்ததின் விளைவு.
சித்ரா மனோ
// இது வெள்ளைக்காரன் நமக்கு தந்து விட்டு போயிருக்கும் சாபம்.//
//இது எப்படின்னே எனக்குப்புரியலைங்க வெளிநாட்டுல இருக்கவிங்க பசங்கள இங்க கொண்டுவந்து படிக்க வைக்குறாங்க.ஏன்னு கேட்டா அங்க ஹோம் வொர்க் இல்ல சிலபஸ் ரொம்ப கம்மி ஸ்கூல் பொறுத்தவரை இங்க தான் சிறப்பு கல்லூரின்னா அங்க பெஸ்ட்ன்னு சொல்லுறாங்க
இக்கரைக்கு அக்கறை பச்சை.//
வெள்ளக்காரன், அவங்க நாட்டுல இந்த முறைய மாத்திட்டான்னுதான் சொல்லனும்.
கார்த்திக் வெளி நாட்ல இருக்கற இந்திய பெற்றோர்களைப் பத்தி சொல்லி இருக்கறது நிஜம்தான். இந்த ஒப்பீட்டை அடிக்கடி செய்வாங்க. :-(((( இந்த ஒரு காரணத்துக்காகவே, நாங்க கொஞ்சம் ஒதுங்கி இருக்கறது. நிறைய பேருக்கு 'பிள்ளைகள் படிப்பு' ஒரு obsession ஆகவே இருக்கு. :-((( சிலர்,பிள்ளைகளை ஊருக்கே அனுப்பி படிக்க வைக்கவும் செய்யறாங்க.
நந்து, சிபி சொல்லற nightmare எல்லாம் இவங்களுக்கு வரதில்லையோ? இல்ல, அதுதான் சரின்னு நினைக்கிறாங்களோ?
சித்ரா மனோ
பேரண்ட்ஸ் கிளப்பில் இம்புட்டு கூட்டமா?
எல்லோரும் முன் வைச்சிருக்கற கருத்துக்கள் ஒவ்வொன்றையும் வெச்சு தனித்தனி பதிவே போடலாம்.
இம்புட்டு கருத்துக்களை வெச்சுகிட்டு இம்புட்டு நாளா ஏங்க பதிவு போடலை.
எப்படியோ இந்த ஒரு பதிவு பலரை யோசிக்க வைத்திருக்கிறது.
நம்ம ஊருக்கு திரும்பி போலாமான்னு பேச்சு வரும்போது மக வேண்டவே வேண்டாம்னு சொல்வா.//
உண்மைதாங்க.
என் மகன் தற்போது 7 ஆம் வகுப்பு.
இங்கே சி.பி.எஸ். சி முறையில் படிக்கிறான்.
இதற்கு முந்தைய படிப்புக்கள் இலங்கையில் இண்ட்ர்நேஷனல் பள்ளியில் சுகமாக படித்தவன்.
இரண்டிற்கு பெரிய்......ய வித்தியாசம்.
வெளிநாட்டுக்குச் சென்ற பல பெற்றோகள் இந்தியாவிற்கு கல்வி பயல் அனுப்புவது ஒரே காரணத்திற்காகத்தான்.
அது இந்தியாவில் படிப்புச் செலவு கம்மி.
வெளிநாட்டுக்குச் சென்ற பல பெற்றோகள் இந்தியாவிற்கு கல்வி பயல் அனுப்புவது ஒரே காரணத்திற்காகத்தான்.
அது இந்தியாவில் படிப்புச் செலவு கம்மி.
இதில் பலருக்கு தெரியாத ஒரு விட்யம் இருக்கிறது.
எந்த இந்திய மாணவன்/மாணவி 5 வருடங்கள் (7 ஆம் வகுப்பு முதல் +2 வரை) இந்தியாவில் கல்வி பயில்கிறாரோ அவருக்கு கல்விச்செலவு சாதாரண இந்திய பிரஜைப் போல்.
+2 வரை வெளிநாட்டில் முடித்துவிட்டு மேற்படிப்புக்காக இந்தியா வந்தால் படிப்புச்செலவு டாலர்களில் தான்.
First of all, here is my request to all the educators who are in this noble field, dont come to work just to get paid especially if you are initiating the kids to learn in elementary school level. That is where, the kids need more attention, patience, tolerance from the adult-teacher side; therefore, educate yourself before you enter into their sanctom.
நன்றி தெகா.
சேம் பிளட்டுன்னு சொல்லிகறேன். அதனால் தான் எ.(மாண்டிசோரி ட்ரெயினிங், ஆங்கில இலக்கியம் படிச்சிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்கியே!பலர் உசுப்பேத்தினாலும்)ந்த பள்ளிக்கும் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறேன்.
எனது கனவுப் பள்ளியைத் துவக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
மொத்தத்துல ஒரே விச்யம் பெற்றோ்ர்களுக்கு சொல்லிக்க ஆசைப்படுறேன்.
தற்போதுள்ள் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு இருக்கும் கல்விச்சுமை அதிகம். நந்து கூறியிருப்பது போல் மனதள்வில் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே அவர்களின் ஸ்ட்ரெஸைக் குறைத்து அவர்களுக்கும் ஸ்ட்ரெஸ், பியர் பிரஷ்ர் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
பிள்ளைகளுக்கு உதவியாய் இருங்கள்.
இப்போது இருக்கும் கல்வித்திட்டதில் கரைத்து குடிக்கத் தெரிந்தவனுக்கு மதிப்பெண். எல்லோருக்கும் மனனம் செய்யும் திறமை இருக்காது. அப்படி பட்டவன் ஃபெயில்.
மாணவன் புரிந்து கொண்டானா என்று சோதிக்கத்தான் டெஸ்ட். அதிலும் எழுத்து தான். கரைத்து குடித்ததை வாந்தி எடுக்கத் தெரிந்தால் பாஸாகிவி்டுகிறாம்.
நம் கல்வி முறையை கடாசுவதைத் தவிர வேறு வழியே இல்லை. பல கல்வியாளர்கள் பரிந்துரை செய்த பின்னும் நோ சேஞ்ச்.
ஏதாவது செய்யணும் பாஸ் என்று எல்லோரும் சேர்ந்து இதுக்கு ஏதாவது செய்ய முடியுமா? யோசிங்க.
வரும் தலைமுறைகளாவது தப்பிக்கட்டும்.
அடுத்த பதிவும் ஹோம் வொர்க் பத்தினதுதான்.
அங்கயும் சந்திப்போம்
பிள்ளைகள் சின்னதாக இருக்கும் பொழுது கொடுக்கப்படும், ப்ராஜெக்ட் வொர்க் பெற்றோருக்கு தான் வேலை என்றாலும், நாம் அவர்களுக்கு "creativity" கற்றுக் கொடுக்க நல்ல வாய்ப்பு. பெரிய க்ளாஸ் செல்ல செல்ல, அவர்களாகவே தங்கள் கைத்திறனைக் காட்டுவார்கள். பள்ளிப் பாடத்தையே கேள்வி-பதிலாக மனப்பாடம் பண்ணக் கொடுக்காது, இந்த மாதிரி தானாகக் கற்று செய்ய வைத்தால் , சுயமாக யோசிக்கும் திறனும் அதிகமாகும். ஆனால் சில பெற்றோர் இதை விரும்புவதில்லை. ஹோம்வொர்க் கொடுத்தால் தான் இவன்/இவள் படிக்கிறான்/படிக்கிறாள் என்கிறார்கள். நம் பள்ளித்திட்டத்தில் மாற்றம் வரும் வரை, பெற்றோர் இப்படித்தான் இருப்பார்கள். சிலபஸ் முடிக்க வேண்டிய க்ட்டாயத்தில் இருக்கும் ஆசிரியரால் எல்லா குழந்தைகளும் புரிந்து படிக்கின்றனவா என்று பார்க்க முடிவதில்லை. எனக்கு , பிள்ளைகளுக்கு ஹோம்வொர்க் கொடுத்து பிழிவது பிடிக்காதது. எங்கள் ஊர்ப்பக்கம், இன்னும் பள்ளிகளில் உணவு இடைவேளையின் பொழுது கூட ஹோம்வொர்க் தரப்படுகிறது. கிட்ட தட்ட இரவு 10 மணி வரை ஹோம்வொர்க் இருக்கும். லீவ் எடுப்பது சிம்ம சொப்பனம். இத்னாலேயே எனக்கு ஹோம்வொர்க் பிடிக்கது. நல்ல வேளையாக என் பிள்ளைகள் ஸ்கூலிலும் ஹோம்வொர்க் கிடையாது. ஹோம்வொர்க் என்பது பள்ளிப்பாடத்தை அவர்கள் ஒரு செயல் முறை போல் கற்றுக் கொள்ள வசதியாக் இருந்தால் குழந்தைகளும் படித்ததை புரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு என்னைப் போல் என் மகளுக்கும் பிடிக்காத்து "Social studies". என்றாலும் மாநிலங்கள் பற்றி அவர்கள் "booklet" செய்தார்கள். பின் ஒரு நாள், மாநில சிறப்புகளை ஒரு கண்காட்சி போல் செய்ததில் படிக்க பிடிக்காத பல விஷயங்கள் அவளுக்கு மனப்பாடம் ஆயிற்று.
/* ஏதாவது செய்யணும் பாஸ் என்று எல்லோரும் சேர்ந்து இதுக்கு ஏதாவது செய்ய முடியுமா? யோசிங்க. */
வழிமொழிகிறேன். நம் பள்ளித்திட்டம் மாறினால் நன்றாக இருக்கும்.
ம்ம்ம் எல்லோரும் பதில் எழுதியாச்சா?அதுக்குத்தான் காத்துக் கொண்டு இருந்தேன்.
இப்போ என் பதில்....
எல்லோரும் பெற்றோர் பக்கமிருந்து யோசித்திருக்கிறீர்கள்.கொஞ்சம் ஆசிரியர்கள் பக்கமும் கொஞ்சம் யோசிக்கலாமா?
1.ஒவ்வொரு வகுப்பிலும் வேறு வேறு இயல்பிலுள்ள குழந்தைகள் இருப்பார்கள்.சில சீக்கிரம் புரிந்து கொள்ளும்,சில கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்,சில குழந்தைகளுக்கு உதவி(additional support )தேவைப் படலாம்..இதற்காகத்தான் டியூஷன் முறை வந்தது.எல்லாக் குழந்தகளுக்குமே ஆரம்பக் காலப் படிப்புக்குத் தேவை.அதற்குப் பெற்றோர்கள் உதவியே போதுமானது..ஆனால் அவர்களுக்கு நேரம் இருந்தால்தானே? இதைப் பெற்றோர்கள் தவறாகப் புரிந்து கொண்டு டியூஷன் அனுப்ப ஆரம்பித்தார்கள்.....கடமை முடிந்தது....நிறைய பெற்றோர்கள் இவ்வ்ளோ செலவு செய்து படிக்க வைக்கிறோம் டியூஷன் அனுப்பறோம் ....இதை விட என்ன செய்ய என்று புலம்புவார்கள்...
2.வீட்டுப் பாடம் அன்றையப் பாடங்களை ஒருமுறைத் திருப்பிப் பார்த்துக் கொள்வதற்கு.இதை சில ஆசிரியர்கள் தவறாகப் புரிந்து கொண்டு தலைக்கு மேல் கொடுப்பதை ஒத்துக் கொள்கிறேன்......வருட விடுமுறை முடிந்து முதல் நாள் வீ.பா. கொடுக்கவில்லையென்று complaint செய்யும் பெற்றோர்கள் உண்டு..கொஞ்சமா வீ.பா. கொடுக்கிறீங்க...உடனே முடித்து விட்டு டி.வி பார்க்கிறான் என் complaint செய்யும் பெற்றோர்கள் உண்டு......டி.வி. வீட்டில் ஓடுவதால்தானே பார்க்கிறான்? ரிமோட் உங்கள் கையில்தானே?
3.ஏறக்குறைய 180 நாட்கள் (working days).இப்போதைய சிலபஸ் பற்றி உங்களுக்கே தெரியும்..ஆக்டிவிடீஸ் பற்றி தெரியும் .அத்தனையும் இதற்குள் முடிக்க வேண்டும்....குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்,எழுத வைக்க வேண்டும்,படிக்க வைக்க வேண்டும்,மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும்...தீ வைத்துக் கொளுத்தத் தயாராயிருக்கும் பெற்றோர்களைச் சமாளிக்க வேண்டும்.......
4.நர்சரியில் குழந்தையைச் சேர்க்கும் பெற்றோர்கள் கேட்கும் கேள்விகள் சில....
போர்ட் ரிசல்ட் எப்பிடி?
எத்தனை ஸ்டேட் ரேங்க்?
9ம் வகுப்பில் பத்தாவது வகுப்பு சிலபஸ் சொல்லிக் கொடுப்பீங்களா?
ப்ராஜக்ட் உண்டா?
வீ. பா எவ்வ்ளோ கொடுப்பீங்க?
டூர் கூட்டிட்டுப் போவீங்களா?
5.சிறு தண்டனைகள் கூட அனுமதியில்லை,அதற்காக தண்டனைகள் கொடுக்கலாம் என்பதல்ல.....குழந்தைகள் ஆசிரியர்களை ....நீங்கள் அடித்தால் மீடியா கூப்பிட்டுருவோம்னு மிரட்டிய சம்பவங்களும் உண்டு....பெற்றோர்கள் "நீங்க ஒண்ணும் வேல்யூஸ் சொல்லிக் கொடுக்க வேண்டாம்..பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுங்க" அப்பிடின்னு சொன்ன அனுபவங்களும் உண்டு.
நந்து f/o நிலா said...
//இந்த வார்த்தைகளுக்கு என்னை எல்லாரும் மன்னிக்கவும்
"ஸ்கூல்ல என்ன ....... புடுங்கறீங்க"//
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நாம் தரும் மரியாதை இதுதான்....நாம் எப்படி என்னத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்???
நந்து f/o நிலா said...
//ஹோம் வொர்க் கொடுக்கற ஸ்கூல் எல்லாத்தையும் புள்ளைங்கள வெளில வர சொல்லிட்டு தீ வெச்சு கொளுத்தனும்.//
எல்லா வேலைகளிலும் சில ப்ரெஷ்ஷர்கள் உண்டு.....பிரச்னைகளும்அதற்காகத் தீ வைத்துக் கொளுத்துவதா?
வருத்தத்துடன்,
அன்புடன் அருணா
எ
லீவுல holiday homework கொடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் போடனும். பாவங்க புள்ளைங்க...
லீவுல holiday homework கொடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் போடனும். பாவங்க புள்ளைங்க...//
லீவுல சம்மர் கேம்ப், போன்ற கொடுமைகளுக்கும் பி்ள்ளைகளை அனுப்பாம இருக்கணும்னு சட்டம் போடாட்டியும் பெத்தவங்க தனக்குத்தானே சட்டம் போட்டுக்கணும்.
இராகவன் தங்கள் வருகைக்கும் கருத்திர்கும் மிக்க நன்றி.
அருணா கோபத்தை முழுசுமா அடக்கி வார்த்தைகள கையாண்டிருக்கீங்க.என்னால அப்படி செய்ய முடியல.
நேத்து நடந்த இரண்டு சம்பவங்களின் பாதிப்பிலிருந்து எழுதியதால் வந்த கோபம் வார்த்தைகளில் காட்டத்தை காட்டிவிட்டது.
முதல் சம்பவம் வழக்கமாக ஸ்டேட் ரேங்க் வாங்கும் ஸ்கூலில் படித்த பையன் சைக்யாட்ரிஸ்டிடம் ட்ரிட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சம்பவம். இன்னும் 5 வருடங்களுக்காவது அவன் ஸ்கூல் சம்பந்தபட்ட எதையும் செய்ய கூடாது என்று சைக்யாட்ரிஸ்ட் சொல்லி விட்டார் என அந்த பையனின் உறவினர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், அம்மாதிரி பள்ளிகளில் கிட்டதட்ட 10% குழந்தைகளுக்கு இது போன்ற நிலமைக்கு கூடவோ குறைச்சலாகவோ நேர்கிறது என்றும் சொன்னார்.
இதை ஓரளவு அந்த கல்வி நிலையங்களுடன் தொடர்பு இருப்பதால் அறிய முடிந்தது.
இரண்டாவது மாண்டிசோரி சிஸ்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்கூலில் பெற்றோர் போய் அத செய் இத செய் என்று சொல்லி அதை வழக்கமான மெண்டலாக்கும் ஸ்கூல் போல ஆக்கும் முயற்சி.
//சரி வாத்தியாருங்க பண்றது தப்பு, பேரெண்ட்ஸ் பண்றதும் தப்பு. அப யார்தாண்டா ரைட்டு?
தெரியலீங்க.//
இதையும் சொல்லி இருந்தேன். பெற்றோர்,ஆசிரியர் இருவரையுமே குற்றம் சொல்லி இருந்தேன்.
ஒரு வியாபாரியான எனக்கு ப்ராக்டிகல் சிச்சுவேஷன்லாம் புரியாமலா இருக்கும்?
அவரவர் நியாயம் அவரவருக்கு. பிழைத்தாகனும். நிதர்சனம் புரிகிறது.வேற வழியே இல்லை.
ஏறி மிதித்துக்கொண்டு போய்த்தான் ஆகனும்.
ஏறி மிதிக்க வாத்தியார்கிட்ட திருப்பி கேள்வி கேட்க கூட பயப்படும் அப்பாவி பச்ச புள்ளைங்கதான் கிடைத்தார்களா?
சார் இது தப்பு அப்படீன்னு வாத்தியார்கிட்ட எந்த புள்ளையாச்சும் சொல்ல முடியுமா? சொல்லிட்டுத்தான் தர்ம அடி வாங்காம இருக்க முடியுமா?(நான் வாங்கி இருகேன்)
பெற்றோர்களில் அறிவு படைத்தவர்,படைக்காதவர், தீவைத்தி கொழுத்தும் வன்முறையாளர், சைக்கோ என ஆயிரம் வகையானவர் இருக்கலாம், வெவரமே புரியாமல் பேசலாம்
ஆனால் ஆசிரியரின் பங்கு அப்படியா?பெற்றோரை விட இரண்டு பங்கு அவர்களுக்கு இதில் பொறுப்பு அதிகமென்றுதான் நான் நினைக்கிறேன்.
சரிங்க நான்(பெற்றோர்)பண்றது தப்பு, டீச்சர்ஸ் பண்றதும் தப்போ ஒருவேளை சரியோ(டீச்சர்ஸ்னா நிர்வாகமும் சேர்த்துத்தான்)
எல்லோருடைய ப்ரச்சனைகளுக்காகவும் இந்த புள்ளைங்கள நாசம் பண்ணனுமா?
புள்ளைங்க சார்பாத்தான் நான் கேள்வி கேட்டேன்.
பாதிக்கப்பட்டவனோ பாதிக்கப்பட்டவன் சார்பாவோ கேள்வி கேட்க்கும்போது கொஞ்சம் காட்டம் அதிகமாகி விடுதுதான். அதற்கு உங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு அப்பனா நான் வீட்டுல வாத்தியாரா இருக்க முடியாது.//
குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர் தாங்க. விரும்பியோ விரும்பாமலோ நீங்களும் ஒரு வாத்தியார் தான்.
//ஒரு அப்பன் புள்ளைக்கு வாழ்க்கையை, மனுசங்களை, நியாய தர்மங்களை மற்றும் ப்ராக்டிகல் உலகத்தைத்தான் சொல்லிதர வேண்டும்//
அதை நீங்க கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டியது. அது உங்க கடமை. வீட்டை விட்டு பி்ள்ளையே பொத்தி பொத்தி வளர்க்காமல் தனியே கடைக்கு போய் வரப் பழக்குவது என்று பெற்றோராக நாம் சொல்லிக்கொடுக்க நிறைய இருக்கு.
ராகவன் சொன்னது போல பலருக்கு
எந்த அப்ளிகேஷனும் எழுதத் தெரியாது. முன்பாவது மணியார்டர் எல்லாம் அனுப்பிகிட்டு இருந்தோம்.
இப்ப எல்லாம் இண்டர்நெட்தான். வங்கிக்கு போகத் தேவையே இல்லை.
எத்தனை பேருக்கு வித்ட்ராயல் பார்ம், அப்புறம் பணம் செலுத்துவதற்கு எல்லாம் எழுத்தத் தெரிய்ம்னு சொல்லுங்க பார்ப்போம்.
அம்புட்டு ஏங்க.
நலம் நலமறி ஆவல்னு ஆரம்பிச்சு
இப்படிக்கு பாட்டி சொல்படி, அப்பா சொல்படின்னு நாம கடிதம் எழுதுவோமே! எழுதி உறவை சேர்த்தோமே அதெல்லாம் சொல்லிக் கொடுக்கறோமா இப்ப??
எங்கப்பாவுக்கு நன்றி சொல்லணும்,
தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியம் போனதும் லீவு எடுத்த்ததுக்கு லீவ் லெட்டர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு வரச்சொன்னாங்க டீச்சர். அப்பாகிட்ட கேட்டா தமிழில் எழு்தத்தெரியும்ல, அதை நீ ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டா. தவறு இருந்தாத் திருத்தித் தர்றேன்னு சொன்னாரு.
ஒரு மொழியில் நம் வளர்ச்சியை தேர்ச்சியைக் காட்டத்தான் கட்டுரை, கடிதம் எழுதப் பழக்குதல்
கட்டு கட்டா பேங்க் அப்ளிகேஷன் பார்க் கொண்டுவந்து வீட்டுல போட்டு எழுதுன்னு எழுதப் பழக்கினார் அப்பா.
இன்றைக்கு எந்தக் கடிதம்னாலும் எழுதுவேன், எந்த அப்ளிகேஷனும் எழுத முடியும். இந்த மாதிரி சொல்லிக் கொடுத்த என் அப்பாவும் எனக்கு ஒரு ஆசிரியர் தானே.
நான் அவரை ஆசிரியர்னு சொன்னது தகப்பன் வாத்தியார் ஆனார். உண்மையில் அப்பா ஒரு வங்கியின் மேனேஜர்.
// மூளைக்குள்ளே நிறையத் திணிக்க வேண்டாம்னுதான் சொல்றேன்! //
வேறவழி இல்லைங்க.
தாரே சமீம் பர் படத்துல வர்றமாதிரி பையன் இருந்த விட்டுட வேண்டியதுதான்.அந்த எடத்துல திணிக்குறமாதிரி ஆயிடும்.
இப்போ சீனாவுல பாத்திங்கன்னா ஆங்கிலம் கிடையாது.ஆங்கிலம் இல்லாம ஐடி டெவலப் பண்ணமுடியாது.பாத்தான் மத்த பாடங்கள்லா 40 எடுத்தா பாஸ்னா ஆங்கிலத்துல மட்டும் 80 எடுத்தாத்தான் பாஸ்னு மாத்துனான் விளைவு ஆங்கில அறிவே இல்லாத நாட்டுல இப்போ இருக்க தலைமுறைங்க கலக்குறாங்க.
உடல் நலமில்லாதா குழந்தைக்கு நாம மாத்திரைய திணிக்குரதில்லையா.அது வளர்ந்த பிறகு தான சாப்பிடுறதில்லையா.அது போலதான் இதுவும்.
எங்க மேல ஆங்கிலத்த திணிக்குராங்கன்னு சீனாக்காரன் நினைச்சிருந்தா இங்க இருக்க சத்தியம் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனகள் அங்க போயிருக்கவே முடியாது.
// பாடத்துலே ஆர்வத்தை உண்டாக்கி ரசிச்சி படிக்க வைக்கணும்! //
நம்மளுது நாடு சின்னதுலானும் மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு.இங்க இவ்ளோதான் முடியும்.பசங்கதான் சாப்பாட்டையும் விளையாட்டையும் இசையையும் ரசிக்குற மாதிரி படிப்பையும் ரசிக்க பழகனும்.
// அரை வருஷம் மட்டும் படிச்சா போதும் என்பதால் 9 வது/+1 சிலபஸ் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததா? அப்படி முக்கியமல்லாத ஒண்ணு எதுக்கு இருக்கணும்? //
இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே நல்லா தெரியும்.நீங்க ஏங்க அந்த மாதிரி பள்ளிகள்ல படிக்க வெக்குறீங்க ஸ்டேட் போட்ல சேக்க வேண்டியதுதானே.
// இந்தக் காலத்துப் பசங்க ரொம்பவே கிளியரா இருக்காங்க! //
அதுதான் எப்படின்னே புரியல.கொஞ்சம் ஏமாந்த நம்மளையே வித்துருவானுங்க.
// நாம வேணா பெருமையா சொல்லிக்கலாம்! சனி ஞாயிறு கூட படிக்க குரூப் ஸ்டடிக்கு போயிடுடறான்னு! அந்த குரூப் ஸ்டடியெல்லாம் எங்கே நடக்கும்னு (அதெ குரூப் ஸ்டடியெல்லாம் போன) எங்களுக்கு நல்லாவே தெரியும்! //
இது கூட இல்லாம எப்படிங்க.உங்க நெஜ்ச தொட்டு சொல்லுங்க நாம போட்ட ஆட்டத்துல ஒரு பாதிகூட இவனுங்க கெடையாது.
// ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம், பாங்க் டி.டி ஃபார்ம் நிரப்ப தெரியாத எந்தனையே பட்டதாரிகளை நாம் காண முடியும். முதுகலை பட்டம் //
ஆமாங்க இது உண்மையிலேய ரொம்ப வேதனையான விசையம் தான்.
இதுக்கும் பள்ளிக்கும் சம்பந்தம் கிடையாது.சின்ன வயசுலயே பசங்கள நீங்க சொல்லுற இடங்களுக்கெல்லாம் பசங்கள பெத்தவிங்கதான் கூட்டிப்போகனும்.இதையெல்லாம் நடைமுறைல சொல்லித்தரனும் இதுக்கலாம் பள்ளிய குத்தம் சொல்லமுடியாது.
// இப்போதுள்ள கல்வி முறையினால், நம் குழைந்தைகள், இழந்தவைகள் மிக மிக அதிகம்.//
இதுக்கு காரணம் யாரு
அரசாங்கம் குழந்தைங்கள 5 வயசுக்கப்புரம்தான் பள்ளியில சேக்கணும்.வீடு இருக்கும் இடத்துல இருந்து ஒரு 5 km சுற்றலவுக்குள்ள இருக்க பள்ளியில்தான் சேக்கணும்.இந்த மாதிரி பல சட்டங்கள வெச்சிருக்கு.இதை யாரு காது கொடுத்து கேக்குறோம்
இன்னைக்கும் ஒன்னாம்வகுப்புல சேக்கனும்னா 5 வயசு ஆனாதான் சேத்துக்குவாங்க.
இதுக்கு மின்னாடி பால்வாடின்னு ஒன்னு இருக்கு அதுக்கு மூணு வயசு.ஒண்ணாம் வகுப்புல சேர பால்வாடி அவசியமில்லை.
ஆனா 1st STD போகனும்னா Pre KG,LKG,UKG இன்னைக்கு அவசியம்.அங்க இரண்டாம் வகுப்புல நடத்துற படிக்குற பாடத்த இங்க LKG லிய ஆரம்பிச்சிடுறாங்க.இப்படி நீங்களே விரும்பி ஏத்துகிட்டு பின்னாடி கியோ முயோன்னு கத்தவும் செய்யுறீங்க.என்னத்த சொல்ல
// "சார்! நேத்து நீங்க அந்த கேள்வியை குறிச்சே குடுக்கலைன்னு"//
:-))
// காரணம், நம்ம ஊர் பள்ளிகளைப் பத்தின பயம். விடுமுறைக்கு வரும்போது, உறவினர் வீட்டு பிள்ளைகளைப் பார்த்ததின் விளைவு.//
இதுக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம்.தப்பா நினைக்கவேணாம்
படிக்க சோம்பேறித்தனம்.அது மட்டும் இல்லை அந்த வயசுல சொந்தங்கள விட நடப்பு கூடப்படிக்குற நட்பு ரொம்ப பெருசா தெரியும் அதை விட்டுட்டு போக முடியாது.அத நெனச்சாலே தூக்கம் வராது
// இந்தியாவிற்கு கல்வி பயல் அனுப்புவது ஒரே காரணத்திற்காகத்தான்.
அது இந்தியாவில் படிப்புச் செலவு கம்மி.//
நம் மக்கள் அங்க இருக்கவங்கதான் இதுக்கு பதில் சொல்லணும்.
நம்ம பசங்க அங்க தனியார் பள்ளிகல்லையா படிக்குறாங்க.தனியார் பள்ளிகளுக்கு சமமானா வசதிகளுடைய அரசு பள்ளிகள்ளதான படிக்குறாங்க.அந்த வசதிகளோட கணக்கிடும்(விளையாட்டு,கழிப்பறை,கணினி...) போது இங்க இருக்க அதிக பீஸ் வாங்குற தனியார் பள்ளிகள் கிட்ட கூட வரமுடியாது. அப்படி இருந்தும் இங்க ஏன் அனுப்புறாங்க காரணம் நம்ம கல்விமுறைய அவங்க விரும்புரதுதான்.
உங்களோட ஒவ்வொரு வார்த்தைகளையும் மறுமொழிகிறேன் கார்த்திக்.
அன்புடன் அருணா
அருணா மற்றும் கார்த்திக்,
நானும் சரி, நந்துவும் சரி! பள்ளிகளையோ, ஆசிரியர்களையோ மட்டும் குத்தம் சொல்லலை!
நம்ம கல்வித்திட்டம் அப்படி இருக்குன்னு சொல்றோம்!
அதிக மதிப்பெண்கள், நல்ல ரிசல்ட் கொடுக்குற பள்ளிகள் மட்டுமே கௌரவம்னு எவ்ளோ பணம் செலவானாலும் பரவாயில்லைனு நினைக்கிற பெற்றோர்களையும், அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் கல்வி (வியாபார) குழுமங்களையும்தான் சாடுகிறோம்!
பெற்றோர்களுக்கு அவங்க போட்ட காசை எடுத்தாகணும்!
பள்ளிக் கூடங்களுகு வாங்குன காசுக்கு (எப்படியாச்சும் கவனிக்க எப்படியாச்சும்) ரிசல்ட் கொடுத்தாகணும், மற்ற கல்வி நிறுவனங்களை விடவும் அதிக ரிசல்ட் கொடுத்தாகணும்.
கல்வி நிறுவனங்களோட நிர்வாகம் கொடுக்குற பிரஷர் ஆசிரியர்களுக்கு, கிளாஸ்ல ரிசல்ட் சரியில்லைன்னா அடுத்த மாசமே அவங்க வேலைக்கு கல்தா!
அப்புறம் அவங்க பிரஷரை எங்கே போயி கொட்டுவாங்க!
விளைவு!
பெற்றோர்கள் சைடுலேர்ந்தும் குழந்தைகளுக்கு பிரஷர், பள்ளிக்கூடத்துலயும் குழந்தைகளுக்கு பிரஷர்! அளவுக்கதிமான சிலபஸ்!
பலமுனைத் தாக்குதல்லே பாதிக்கப் படுறது குழந்தைகள்தான்! குழந்தைகள் மட்டும்தான்!
கஷ்டப் படுத்துறது எதுக்காக! பின்னாடி நல்லா சம்பாரிக்கணும்னுதானே! அப்படின்னு ஒரு சப்பைக் கட்டு வாதம் வைக்கலாம்!
அது ஒரு வேதனைக்குரிய சமூகச் சீரழிவுன்னே சொல்லலாம்! இன்வெஸ்ட் பண்ணுறது குழந்தைகள் கல்வில! நீண்ட கால இன்வெஸ்ட்மெண்ட் தர லாபம் - "கேம்பஸ் இண்டர்வியூலயே நிறைய சம்பளத்தோடு வேலை, ஆன்சைட் ஆப்பர்சுனிட்டீஸ், நல்ல டௌரி(இப்ப இதெல்லாம் சத்தியமா இல்லைன்னு யாராச்சும் கெளம்பீடப் போறீங்க)யோட வசதியான வீட்டுப் பொண்ணு அல்லது லட்சாதிபதி அமெரிக்க மாப்பிள்ளை,....!" இப்படி எத்தனையோ.....
ஒரு தொழில்னா முதலீடு, தொழிற்சாலை, தொழிலாளர்கள் இதெல்லாம் இருக்கணும்!
முதலீடு - செலவு பண்ணுற பணம்
தொழிற்சாலை - பள்ளிக் கூடங்களும், டியூஷன்களும்
அப்போ தொழிலாளர்கள் யாருன்னு நினைக்கிறீங்க!
சாட்சாத் - பிள்ளைங்கதான்!
பெத்தவங்க போட்ட காசுக்கு உழைச்சி முதலீட்டோட லாபத்தையும் சம்பாரிச்சி கொடுத்தாகணும்!
இதனால அவங்க இழக்குறது என்ன?
அவங்களோட விளையாட்டுக்களுக்கான நேரம், ஹோம்வொர்க், டியூஷன்லாம் போயிட்டு வரதால பெத்தவங்ககிட்டே கூட செலவழிக்க முடியாத நேரம்,
படைப்பாற்றல், தனித்திறமைகளை வளர்த்துக்க முடியாமை (ஸ்கூல்ல குடுக்குற புராஜெக்ட் கடமைக்கு செய்யுறது, அதை ஒட்டிகிட்டு வா, இதை செஞ்சிகிட்டு வான்னு சொல்லி அனுப்புறது)
குழந்தைகளுக்குன்னு கொஞ்சம் ஆசைகள் இருக்கும், கனவுகள் இருக்கும், அவங்க உலகம் எப்படி இருக்கும் - இதைப்பத்தியெல்லாம் நாம(பள்ளிக்கூடமும், பெத்தவங்களும் சேர்த்துத்தான் கார்த்திக் சார் மற்றும் அருணா மேடம்)னு நினைச்சிப் பார்க்கிறோமா?
பாவம்யா அவங்க! குழந்தைகளா இருக்க வேண்டிய நேரத்துல குழந்தைகளாவே இருக்க விடுங்க! அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியதை அந்தந்த வயசுல அனுபவிக்கணும்! (இந்த காம்படீசன் உலகத்துல போட்டி போடணும்னு சொல்லாதீங்க! எல்லாத்தையும் அனுபவிச்சிகிட்டே போட்டி போடணும்! அதான் ரியல் ஸ்டஃப், எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சி மார்க் வாங்க வெக்குறது போங்கு ஆட்டம், ஆனா எல்லாரும் போங்கு ஆட்டம்தான் ஆட வைக்கிறோம்)
இப்படி கஷ்டப்படுத்தி சம்பாதிக்க வைக்குறதுக்கு பேசாம குழந்தைகளாவே வேலைக்கு அனுப்பிடலாம், ஆரம்பத்துலேர்ந்தே சம்பாதிச்சி கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க! (இதை வேதனையோடதான் சொல்ல வேண்டி இருக்கு)
ஏன்னா அவங்களுக்குக் கூட விளையாட கொஞ்சம் நேரம் கிடைக்குது! லீவு கிடைச்சாலிம் ஹோம் வொர்க் பிரஷர் இருக்குறதில்லை!
:(
மறுபடி சொல்றேன்! பலமுனைத் தாக்குதல்லே பாதிக்கப் படுறது குழந்தைகளும், அவங்க குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக் கூடிய குறும்புத்தனங்களும்தான்!
கண்ணை வித்துட்டு அழகா ஆடம்பரமா ஓவியங்கள் வாஅங்கி மாட்டி வெக்கிறதுலே பிரயோஜனம் இல்லை!
நாமக்கல் சிபி said...
//நானும் சரி, நந்துவும் சரி! பள்ளிகளையோ, ஆசிரியர்களையோ மட்டும் குத்தம் சொல்லலை! //
பெற்றோர்களையும் சொல்லுங்க......
//குழந்தைகளுக்குன்னு கொஞ்சம் ஆசைகள் இருக்கும், கனவுகள் இருக்கும், அவங்க உலகம் எப்படி இருக்கும் - இதைப்பத்தியெல்லாம் நாம(பள்ளிக்கூடமும், பெத்தவங்களும் சேர்த்துத்தான் கார்த்திக் சார் மற்றும் அருணா மேடம்)னு நினைச்சிப் பார்க்கிறோமா?பாவம்யா அவங்க! குழந்தைகளா இருக்க வேண்டிய நேரத்துல குழந்தைகளாவே இருக்க விடுங்க! அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியதை அந்தந்த வயசுல அனுபவிக்கணும்! (இந்த காம்படீசன் உலகத்துல போட்டி போடணும்னு சொல்லாதீங்க! எல்லாத்தையும் அனுபவிச்சிகிட்டே போட்டி போடணும்!
சிபி சார்,
முதல்ல நான் பெற்றோர்...அப்புறம்தான் ஸ்கூல் வைஸ் ப்ரின்ஸிபல்.....நாங்களும் நன்றாகவே நினைத்துப் பார்க்கிறோம்....எங்கள் கைகளும் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன....கல்வித் திட்டம் அப்படி...ஆனாலும் இந்தக் குழந்தைகளின் கனவுகளைக் கலையாமல் பார்த்துக்கறதுலே பெற்றோர் நினைத்தால் முடியும் .....உதவலாம்....எல்லாக் குழந்தைகளும் முதல் ரேங்க் வாங்க முடியாது..மார்க் பின்னாலே ஓட வைக்காதீங்க....அடுத்த குழந்தையை மாதிரிப் படிக்கச் சொல்லாதீங்க....அந்த ஓட்டத்துலெதான் அந்தக் கோச்சிங்க் ...இந்தக் கோச்சிங்க்னு விரட்டுறது...அதே ஓட்டத்துலேதான் குழந்தைத் தனத்தை இழப்பது....
வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வதற்குத்தான் ,கிரியேட்டிவிட்டியை வளர்ப்பதற்குத்தான் பலவிதப் போட்டிகள்,ப்ராஜெக்ட்....அதிலேயும் என் பிள்ளைதான் முதலில் வரணும் என்னும் ஓட்டம் பெற்றோர்களுக்கு அதிகம்.......ம்ம்ம்ம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....
அன்புடன் அருணா
//நம்ம கல்விமுறைய அவங்க விரும்புரதுதான்.// ஆஹா, அட்லான்டிக்கு கடலுக்கு அந்த பக்கம் குந்திகிட்டு என் பதிவுல நான் கூவுறதும் அது தான்! ஆனால், எனக்குத் தெரிந்து மேற்கல்விக்காக இந்தியாவுக்கு அனுப்புறவங்க பொருளாதாரக் காரணங்களுக்காகத் தான் அனுப்புறாங்க. ஐஐடி, ஜிப்மர் போன்றவை தவிர்த்து.
என்னைப் பொறுத்த வரை, பெற்றோரின் ஊக்கம் / பங்களிப்பு தான் குழந்தைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
//அதிக மதிப்பெண்கள், நல்ல ரிசல்ட் கொடுக்குற பள்ளிகள் மட்டுமே கௌரவம்னு எவ்ளோ பணம் செலவானாலும் பரவாயில்லைனு நினைக்கிற பெற்றோர்களையும், அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் கல்வி (வியாபார) குழுமங்களையும்தான் சாடுகிறோம்!// இதுக்கு பெரிய ரிப்பீட்டு. உலகளாவிய பிரச்னைங்க இது. அமெரிக்காவிலும், தனியார் பள்ளிகளில் போடுவதை கௌரவமாக நினைப்பவர்கள் உண்டு. இதில், கிறித்துவக் கல்வி தரும் தனியார் பள்ளிகள் முதலிடம் (மதம் காரணம்#1).
//முதல்ல நான் பெற்றோர்...அப்புறம்தான் ஸ்கூல் வைஸ் ப்ரின்ஸிபல்.....நாங்களும் நன்றாகவே நினைத்துப் பார்க்கிறோம்....எங்கள் கைகளும் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன....கல்வித் திட்டம் அப்படி...//
அருணா மேடம்,
அதையேதான் நாங்களும் சொல்றோம்!
கல்வித்திட்டம் சரியில்லைன்னு நாங்க சொல்றதைக் காட்டிலும் கல்வித் துறையில இருக்குறவங்களே சொன்னா இன்னும் வலிமையா இருக்கும்! சுலபமா ரீச் ஆகும் - ஆகவேண்டிய இடத்துக்கு!
ஒரு வைஸ் பிரின்ஸிபாலா (தனியார் பள்ளின்னா உங்களாலயும் ஒண்ணும் முடியாதுதான்) உங்க கருத்தை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போகலாம்!
அதெல்லாம் சரி! மனசாட்சிப் படி சொல்லுங்க!
உங்க பள்ளியில எம்.ஐ, பி.டி பீரியெட்னெல்லாம் ஒண்ணு இருக்கா? (டைம் டேபிளில் மட்டும் அல்ல)
அருணா மேடம் உங்ககிட்டே இன்னும் சில கேள்விகள்!
1.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண்கள் இடுகிறார்கள்!
எப்பவாச்சும் ஆசிரியர்கள் எப்படின்னு மாணவர்களிடம் கேட்டிருக்கீங்களா?(கேட்டிருக்கீங்களா என்றால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் பள்ளி நிர்வாகத்தில் வேறு எவரேனும் கூட)
2.குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்கும் அதே வேளையில் அவர்கள் அதிகபட்சமாய் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பாடங்களைப் பற்றி அங்கே ஓரிரு வார்த்தைகள் என்கரேஜ் செய்யும் விதமாக பேசுவீர்களா?/பேஎசியதுண்டா? (ஏன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பசங்களை நிக்க வெச்சி கிளளப் பண்ணுவோம்னெல்லாம் சொல்லக் கூடாது)
3. எப்பாவாவது எந்தப் பாடம் உங்களுக்கு பிடித்தது? எதெல்லாம் பிடிக்கலை? ஏன்? போன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்ததுண்டா?
4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?
5.பாடத்தைத் தவிர மாணவர்கள் வேற ஏதாவது பேச வகுப்பில் அனுமதிப்பதுண்டா? (தினசரி செய்தி/பொது அறிவு இப்படி அவர்கள் விருப்பம் போல்)
6. அது போல அவர்களாக முன்வந்து செய்கிறார்களா? (முதல் முறை மட்டும் நீங்கள் சொல்லி ஆரம்பித்த பிறகு) அல்லது தினமும்/வாரம் ஒரு மாணவன் என்று நீங்களாகவே தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வீர்களா?
7. வகுப்பறையில் எப்போதேனும் மாணவர்களுக்கு பாட்டுப் பாட அனுமதித்ததுண்டா? (ஹேப்பி பர்த்டே அல்ல)
8. வகுப்பிற்குள் ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்களா? அல்லது அதற்கு முன்பே அமைதியாக இருக்கிறார்களா?
9. எப்போதேனும் எந்த வகுப்பிலிருந்தேனும் கொல்லென்று அனைத்து மாணவர்களும் சிரிக்கும் சப்தம் கேட்டதுண்டா?
10. மாணவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கேட்டறிந்ததுண்டா?
11. மாணவர்கள் எவரேனும் கதை/கவிதை என்று எழுதுகிறார்களா என்று கவனித்ததுண்டா? (தமிழ் இரண்டாம் தாளில்) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவர்களாகவே (உரையில் இல்லாத) கதை/கவிதை எழுதி இருந்தால் அது குறித்து அவர்களை ஊக்கப் படுத்தியதுண்டா? (படிச்சிப் பார்த்து திருத்தினாத்தானே என்கிறீர்கள் என்றால் இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டாம் :))
12. என்.சி.சி/என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகளில் 10,12 ம் வகுப்பு மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்வது உண்டா?
13. சினிமா/தொலைக்காட்சி/ பொதுநிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்க மாணவர்களை எப்போதேனும் அனுமதிப்பதுண்டா?
14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரைடாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும் உண்டா?
15. மாணவர்களின் பொது அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?
ஆஹா, விவாதம் இன்னும் போயிட்டிருக்கா? நேத்து பின்னூட்டம் போட்டத்துக்கு அப்பறம், இதப் பத்தி யோசிச்சுகிட்டு இருந்தப்போ ஆசிரியர்கள் பார்வை என்னவா இருக்கும்னு. அருணாவும் அவங்களோட கருத்துக்கள சொல்லி இருக்காங்க. என் பார்வையில இந்திய ஆசிரியர்களோட வேலைப் பளு ரொம்ப அதிகம். அதிக வீ. பா
குடுக்கறதை அவங்களும் விரும்ப மாட்டாங்கன்னே நினைக்கிறேன்.
இதுல பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் குடுக்கற நெருக்கடி ரொம்பவே அதிகமா இருக்கு. எனக்கு நேரடி அனுபவம் இல்லைன்னாலும், இந்தியால இருக்கற சகோதரி சொன்னது இதுதான், 'விட்டா இந்த பெற்றோர்களே தேர்வும் எழுதிட்டு வந்திருவாங்க. அவ்ளோ டென்ஷன் படறாங்க'. சகோதரிக்கு இந்த கல்வி முறையிலும் சம்மதமில்ல. ஆனா வேற வழியும் இல்ல. அதனால நிறைய மன அழுத்தத்துக்கு உள்ளாகி, சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க.
சித்ரா மனோ
// காரணம், நம்ம ஊர் பள்ளிகளைப் பத்தின பயம். விடுமுறைக்கு வரும்போது, உறவினர் வீட்டு பிள்ளைகளைப் பார்த்ததின் விளைவு.//
//இதுக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம்.தப்பா நினைக்கவேணாம்
படிக்க சோம்பேறித்தனம்.அது மட்டும் இல்லை அந்த வயசுல சொந்தங்கள விட நடப்பு கூடப்படிக்குற நட்பு ரொம்ப பெருசா தெரியும் அதை விட்டுட்டு போக முடியாது.அத நெனச்சாலே தூக்கம் வராது //
கார்த்திக்,
மகளை பொறுத்த வரையில சோம்பேரித்தனமோ, நட்போ காரணமில்ல. இப்ப 5 ஆம் வகுப்பு. .மூணு நாடுகள்ல படிச்சிருக்கா(இது வரையில இந்திய கல்வி திட்டத்துல, இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கல). போற இடங்கள்ல புது நட்ப உண்டாக்கிகறது அவளுக்கு சுலபமாதான் இருக்கு. அவளோட பார்வையில பள்ளியில கிடைக்கிற சுதந்திரம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களோட கண்டிப்பு இதெல்லாம்தான் முக்கியமானதா இருக்கு. மூணு இடத்துல அவளுக்கு பிடிக்காதது சிங்கை பள்ளிகள்தான். கிட்டத்தட்ட இந்திய கல்வி முறை.
//நம் மக்கள் அங்க இருக்கவங்கதான் இதுக்கு பதில் சொல்லணும்.
நம்ம பசங்க அங்க தனியார் பள்ளிகல்லையா படிக்குறாங்க.தனியார் பள்ளிகளுக்கு சமமானா வசதிகளுடைய அரசு பள்ளிகள்ளதான படிக்குறாங்க.அந்த வசதிகளோட கணக்கிடும்(விளையாட்டு,கழிப்பறை,கணினி...) போது இங்க இருக்க அதிக பீஸ் வாங்குற தனியார் பள்ளிகள் கிட்ட கூட வரமுடியாது. அப்படி இருந்தும் இங்க ஏன் அனுப்புறாங்க காரணம் நம்ம கல்விமுறைய அவங்க விரும்புரதுதான்//
இங்கயும் பல இந்திய பேற்றோர்கள் தனியார் பள்ளிகளை விரும்பறாங்க (எங்க பிள்ளைகள் அரசு பள்ளிகள்ளதான் படிக்கிறாங்க). இங்கயும் ரெண்டு பிரிவுகள் இருக்கு.:-))
//இப்போது இருக்கும் கல்வித்திட்டதில் கரைத்து குடிக்கத் தெரிந்தவனுக்கு மதிப்பெண். எல்லோருக்கும் மனனம் செய்யும் திறமை இருக்காது. அப்படி பட்டவன் ஃபெயில்.
மாணவன் புரிந்து கொண்டானா என்று சோதிக்கத்தான் டெஸ்ட். அதிலும் எழுத்து தான். கரைத்து குடித்ததை வாந்தி எடுக்கத் தெரிந்தால் பாஸாகிவி்டுகிறாம்.
நம் கல்வி முறையை கடாசுவதைத் தவிர வேறு வழியே இல்லை. பல கல்வியாளர்கள் பரிந்துரை செய்த பின்னும் நோ சேஞ்ச்.
ஏதாவது செய்யணும் பாஸ் என்று எல்லோரும் சேர்ந்து இதுக்கு ஏதாவது செய்ய முடியுமா? யோசிங்க.
வரும் தலைமுறைகளாவது தப்பிக்கட்டும்.//
மொத்த கல்வித் திட்டத்தை மாத்தலைன்னாலும், பல மாற்றங்களை அவசியம் செய்யணும். இதுதான் என்னோட ஆசை.
சித்ரா மனோ
ஆஹா திருவிளையாடல் நாகேஷ் பாணியில் கேள்வியா கேட்டிருக்கீங்களே சிபி,
உங்க கிட்ட ஒரே கேள்வி. நாளில் 8 மணிநேரமே பள்ளியில் செலவழிக்கிறார்கள் பிள்ளைகள். அதுல உங்க பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுக்கணும், நோட்ஸ் கொடுக்கணும், டெஸ்ட் வெக்கணும், பேப்பர் திருத்தனும், நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதணும், இப்படி அடிக்கி கிட்டே போற அளவுக்கு வேலைகள் இருக்கு.
நீங்க கேக்குற பலதை வீட்டுல சொல்லி கொடுக்கலாம். ஆனா அதைக் கூட பள்ளி்க்கூடத்துலதான் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்றத நான் ஓவர் எதிர் பார்ப்புனு சொல்வேன்.
ஒரு ஆசிரியை தாயைப் போல தன் பிள்ளையை பாத்துக்குறவங்க. உங்க வீட்டுல 1 அல்லது மேக்ஸிமம் 4 பிள்ளைங்க. அங்க வகுப்புல எம்புட்டு பிள்ளைகள் இருப்பாங்க. அந்தப் பிள்ளைகளை சமாளிக்கி்றது கஷ்டம் என்பது அந்த வேலை பாக்கிறவங்களுக்குத்தான் தெரியும்.
பெற்றோரா வீட்டுல நீங்களும் சொல்லிக்கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு.
அறிவை மேம்படுத்திக்கத்தான் பள்ளிகள். ஆசிரியர்கள் அதற்கு உதவுபவர்கள்.
3. எப்பாவாவது எந்தப் பாடம் உங்களுக்கு பிடித்தது? எதெல்லாம் பிடிக்கலை? ஏன்? போன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்ததுண்டா?
இதை வீட்டுல என்னிக்காவது பெத்தவங்க கேட்டிருக்காங்களா?
4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?//
இந்தக் கேள்வியை நானும் ரிப்பீட்டிக்கறேன். ஆனால் நான் கேட்பது பெற்றோர்களை.
5.பாடத்தைத் தவிர மாணவர்கள் வேற ஏதாவது பேச வகுப்பில் அனுமதிப்பதுண்டா? (தினசரி செய்தி/பொது அறிவு இப்படி அவர்கள் விருப்பம் போல்)//
பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்காக ப்ரத்யேக செய்திகள் கொண்ட செய்தித்தாள்கள் வழங்கி அதைப் படிக்க வைக்கும் வேலைகளும் சில பள்ளிகளில் நடக்கின்றன என்பதை அறியத்தருகிறோம்.
6. அது போல அவர்களாக முன்வந்து செய்கிறார்களா? (முதல் முறை மட்டும் நீங்கள் சொல்லி ஆரம்பித்த பிறகு) அல்லது தினமும்/வாரம் ஒரு மாணவன் என்று நீங்களாகவே தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வீர்களா?//
இதெல்லாம் இப்ப பள்ளிக்கூடங்களில் நடக்கிற விஷயம்.
7. வகுப்பறையில் எப்போதேனும் மாணவர்களுக்கு பாட்டுப் பாட அனுமதித்ததுண்டா? (ஹேப்பி பர்த்டே அல்ல)//
பாதிப்பாடத்துக்கு நடுவுல பாட்டு பாட வெக்கிறது எல்லாம் 5 வகுப்புக்கு அப்புறம் முடியாதுங்க சிபி.
டீன் ஏஜ் பசங்களை கண்ட்ரோல் செய்ய ஆசிரியர்கள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க.
டீச்சரைக் கிண்டல் செஞ்சு பேசுவாங்க, பாடுவாங்க.
அதையும் தாங்கிகிட்டுத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுக்கறாங்க.
ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு வாரம் ஆசிரியராக ஏதேனும் ஹயர் கிளாஸுக்கு சிபியை டீச்சரா போடுங்க அருணா. இது என் அன்பு வேண்டுகோள்.
இந்த பேரண்ட்ஸ் கிளப்பின் முக்கிய நோக்கமே டீச்சர் ஃப்ரெண்ட்லி பேரண்ட்ஸ்கள் உருவாக வேண்டும்,
பிள்ளைகளுக்கு பிடித்த பெற்றோர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் நல்ல முறையில் வளர உதவ வேண்டும்.
இதுதான், 'விட்டா இந்த பெற்றோர்களே தேர்வும் எழுதிட்டு வந்திருவாங்க. அவ்ளோ டென்ஷன் படறாங்க'. //
ஆமாங்க அவங்களும் டென்ஷன் பட்டு பசங்களையும் டென்ஷன் படுத்தி கொடுமை அது.
நான் பரிட்சை எழுதும் முன் யேசுதாஸ் பாட்டு கேட்டுட்டுதான் போவேன்.(அதுக்கு அப்பாகிட்ட டோ்ஸ் வாங்குவேன்.) மார்க் பாருஙப்பான்னு தைரியமா சொல்லிட்டு போவேன். பரிட்சை ஹாலுக்கு சென்றும் புக்சை புரட்டிகிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.
ஆஹா ஓஹோ சூப்பர் டூப்பர் மார்க் எடுப்பேன்லா பீ்லா விடமாட்டேன்.
70ற்குள் இருக்கும்.
என் பிள்ளைகளுக்கும் அதே முறைதான். அவங்க படிக்கும்போது கூட மெலிதான் இசை ஓடிக்கிட்டு இருக்கும். நாம் ரிலாக்சா இருந்தாத்தான் படிச்சது நினைவில் இருக்கும்.
பரிட்சைக்கு முன்னாடி பேரண்ட்ஸைக் கூப்பிட்டு கவுங்சிலிங்க் கொடுக்கலாமான்னு கூட தோணும் எனக்கு.
நாம் பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெத்த பேரெடுத்த பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று நினைக்கக்கூடாது. அது மிக முக்கியம்.
அவர்கள் 100% ரிசல்ட் காட்டி அதனால் அந்த பெயர் எடுத்திருப்பார்கள்.
மேலும் அந்த ஓட்டத்தில் ஓட இயன்ற மாணவனே அப்படி பட்ட பள்ளியில் சேர முடியும்.
முறையான பயிற்சி வேண்டுமென்றால் மாணவனுக்கு பயிற்சி கொடுக்கும் பள்ளி எது என்று பார்த்து சேர்க்க வேண்டும்.
எல்லோரும் சேர்க்கறாங்கன்னு நாமளும் போட்டா அது நல்லதில்லை. நம் பிள்ளைகளுக்கு ஒத்துவரக்கூடிய பள்ளியா தேடணும்.
ஹைதராபாத் டிரான்ஸ்பர்னு தெரிஞ்சதும் 2 மாதம் மொத்த ஹைதராபாத்தையும் அலசி கடைசியில் இந்தப் பள்ளியைக் கண்டுபிடித்தேன்.
இப்போ பிள்ளைகளுக்கும் மகி்ழ்ச்சி, அதனால் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
//ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு வாரம் ஆசிரியராக ஏதேனும் ஹயர் கிளாஸுக்கு சிபியை டீச்சரா போடுங்க அருணா. இது என் அன்பு வேண்டுகோள்//
ஆஹா! தாராளமா வாய்ப்பு கொடுங்க! ஒரு நாள் முதல்வர் மாதிரின்னு சொல்லிட்டாங்க! பிறகு எல்லா ஸ்டூடண்ட்ஸும் நானே வாத்தியாரா வரணும்னு ஆசைப் படுவாங்க!
B.E (C.S.E) படிச்சிருக்கேன்! எந்த சப்ஜெக்ட்ல போடப் போறீங்க?
ஹையர் கிளாள்/லோயர் கிளாஸ் எதுவானாலும் பிரச்சினை இல்லை!
//டீன் ஏஜ் பசங்களை கண்ட்ரோல் செய்ய ஆசிரியர்கள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க.
டீச்சரைக் கிண்டல் செஞ்சு பேசுவாங்க, பாடுவாங்க.
அதையும் தாங்கிகிட்டுத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுக்கறாங்க.
//
அது டீச்சர்ஸ் மாணவர்ளை அணுகும் முறையைப் பொறுத்து இருக்கு! எப்பவுமே சிடுசிடுன்னு பாடத்தை மட்டுமே பேசுற, வகுப்புல துளிக்கூட சத்தம் வரக்கூடாதுன்னு நினைக்கிற டீச்சர்ஸை வேணா பசங்க இப்படி டிரீட் பண்ணி இருப்பாங்க!
எப்பவும் புன்னகையோட, பசங்களோட விட்டுப் பிடிக்கிற டீச்சர்ஸ்கிட்டே எப்பவுமே கண்ணியமாத்தான் நடந்துக்குவாங்க!
எங்க காலேஜ்ல கூட சிடுசிடு மேடம் மேல சாக்பீஸ் எறிஞ்சும் இருக்கோம்!
அதே மாதிரி கைண்டா நடந்துகிட்ட நஃபீசா, விஜயஷெர்லி மேடமையெல்லாம் எங்களோட அம்மாவா, அக்காவா நினைச்சி மரியாதையாகவும் நடத்தி இருக்கோம்!
ஒன் அவர் கிளாஸை பார்த்துக்கச் சொல்லி ஒப்படைச்சா காலேஜ்லயே தன் பொறுப்புல கொடுத்துட்ட மாதிரி ஓவர் பில்டப்பு விட்ட தாமஸ் ஸாரை நாங்க கலாய்ச்ச கலாய்ப்புக்கு அளவே இல்லை!
அதே எங்களோட ஃப்ரெண்ட்லியா இருந்த குமரேசன் சாரை இப்ப பார்த்தாலும் பாசத்தோட ஓடிப்போயி கையைப் பிடிச்சிக்குவோம்!
//பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்காக ப்ரத்யேக செய்திகள் கொண்ட செய்தித்தாள்கள் வழங்கி அதைப் படிக்க வைக்கும் வேலைகளும் சில பள்ளிகளில் நடக்கின்றன என்பதை அறியத்தருகிறோம்.//
சில பள்ளிகளில் என்பது குறிப்பிடத் தக்கது! ஆயினும் அதுவே மகிழ்ச்சியான விஷயம்தான்!
//இந்தக் கேள்வியை நானும் ரிப்பீட்டிக்கறேன். ஆனால் நான் கேட்பது பெற்றோர்களை.
//
என்னோட கேள்விகள் எல்லாமே பெற்றோர்களுக்கும் சேர்த்துத்தான்!
அதான் மூணு வயசானாலே தொல்லை இல்லாம இருந்தா சரின்னு பள்ளிக்கூடத்துல போயி விட்டுடறாங்களே! அப்புறம் அவங்களுக்கு ஏது குழந்தைகளோட பேச, விளையாட நேரம் இருக்கு!
எங்களுக்கு டிப்ளமோல கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் எடுத்த ரொம்ப கண்டிப்பான பி.கே.எஸ் சார் வகுப்பு கடைசி நாளன்னிக்கு எல்லா பசங்ககிட்டயும் அவரே ஃபீட் பேக் கேட்டப்போ பெரும்பாலான(ரொம்ப ரகளை செஞ்சி அவர்கிட்டே அடிவாங்கின பசங்க உட்பட) மாணவர்கள் சொன்னது
"அடுத்த ஜென்மத்துலயும் நாங்க உங்களுக்கு ஸ்டூடண்டா வாய்க்கணும்"னு!
7 வது படிக்குறப்போ எங்களுக்கு கிடைச்ச இன்னொரு டீச்சர் சந்தானலட்சுமி! தங்கமானவங்க!
ஒரு நாள் பசங்க கிளாஸ்ல டீச்சர் இல்லாத நேரம் ரொம்ப சத்தம் போட்டுட்டாங்கன்னு நான் இனிமே உங்க கிளாஸ்க்கு வரலைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க!
ஒட்டு மொத்தமா எல்லாப் பசங்களும் போயி அழுது கிளாஸ்க்கு கூட்டிட்டு வந்தோம்!
டீச்சர்-ஸ்டூடண்ட்ஸ் ரிலேசன்ஷிப்னா இப்படி இருக்கணும்!
அது டீச்சர்ஸ் கையிலதான் இருக்கு!
டீச்சர்ஸ் மனசுல ஸ்டூடண்ட் நிக்கணும்னு அவசியமில்லை! அது முடியவும் முடியாது! (ரொம்ப ரேரா சில பேர் இருப்பாங்க) ஏன்னா வருஷத்துக்கு 60 பேரை ஒரு கிளாஸ்ல சந்திக்கிறாங்க!
ஆனா ஸ்டூடண்ட்ஸ் மனசுல டீச்சர்ஸ் என்னிக்கும் இருக்கணும்! அங்கதான் இருக்கு ஆசிரியர் பணியோட மகத்துவம்!
//டீன் ஏஜ் பசங்களை கண்ட்ரோல் செய்ய ஆசிரியர்கள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க.
டீச்சரைக் கிண்டல் செஞ்சு பேசுவாங்க, பாடுவாங்க.
அதையும் தாங்கிகிட்டுத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுக்கறாங்க.
//
இதுக்கு நான் இன்னொரு காரணமும் சொல்லியாகணும்!
டீச்சர்ஸோட பிஹேவியர், நடை,உடை,பாவனைகள் இதெல்லாமும் கூட இதுக்குக் காரணமா அமையும்!
டிப்ளமோவுல எங்க ஹெச்.ஓ.டி மேடத்தை பார்த்தா எங்களுக்கு அவ்வளவு மரியாதை வரும்!
ஆனா இன்னொரு மேடம்(பேர் சொல்லணுமா என்ன?) இருந்தாங்க!
அவங்களைப் பார்த்தா பசங்க பார்வையே வேற! காரணம் என்னவா இருக்கும்னு நீங்களே ஊகிச்சிக்கலாம்!அந்த மேடம்கிட்டே வழிஞ்சி வழிஞ்சி பேசினா பிராக்டிக்கல்லே நிறைய மார்க் விழும்னு பசங்க பேசி நான் கேட்டிருக்கிறேன். சீனியர் பசங்க எனக்கு குடுத்த டிப்ஸூம் கூட! (அப்புறம் ஏன் கிண்டலடிச்சி பாட மாட்டாங்க)
// நம்ம கல்வித்திட்டம் அப்படி இருக்குன்னு சொல்றோம்! //
நம்ம கல்வித்திட்டம் எப்படி இருக்கு.
வளந்த நாடுகள்ல பாத்திங்கன்னா அவங்கெல்லாம் தங்களோட தாய் மொழிலதான் படிச்சவங்களா இருப்பாங்க.
தமிழ் பள்ளிகள்ல பாத்தீங்கன்னா ரொம்ப எளிமையான பாடத்திட்டம் தான்.மூனாம் வகுப்புலதான் ஆங்கிலமே உள்ளவருது.ஆறாம் வகுப்புல இன்னும் கொஞ்சம் சேத்து தருவாங்க(What is the black coffee?)வேற்று மொழிங்கரதால இப்படி ரொம்ப சுமூத்தான் கொண்டு போவாங்க எட்டாம் வகுப்புல யெஸ்யே ஒன்பதாம் வகுப்புலதான் engilsh & tamil 1st paper,2nd paper வரும் பதினொண்ணாம் வகுப்புலதான் அறிவியலே தனியா பிரியும்.
இதே போல தான் ஸ்டேட் போர்ட் பள்ளிகல்லையும்.இங்க படிக்குற பசங்க பாருங்க எவ்ளோ ஜாலிய இருக்கானுங்க.பள்ளி விட்ட பாருங்க சாயங்காலம் இருட்டுற வரைக்கும் விளையாடிட்டுதான் வருவானுங்க.வீட்டுல பரிச்சை நாட்கள் தவிர்த்து
மத்தனாட்கலேல்லாம் ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கானுங்க.
ஆனா இந்த இங்கிலீஷ் மீடியத்துல படிக்குற பசங்கபாடு இருக்கு.ஆரம்பத்துலியே தமிழ்,ஹிந்தி,இன்னு மத்த மொழிகள்.அப்புறம் அறிவியல அஞ்சு வகையா பிரிச்சு அததுக்கு தனித்தனி ஆசிரியர் வேற இருக்காங்க அவங்க டார்கெட் அச்சீவ் பண்ணியாகனுமே பத்தாததுக்கு இங்கிலீஷ் தமிழ் மேக்ஸ் இதுத எல்லாம் இரண்டு பேப்பர் அந்த பிஞ்சு வயசுல எப்படிங்க இத்தனைய புரிஞ்சுக்க முடியும்.வேற வலி இல்லாம ஹோம் வொர்க் குடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறாங்க.
தமிழ் மற்றும் ஸ்டேட்போர்ட் பாடத்திட்டம் நம்மளுது ரொம்ப எளிமையானதும் கூட.நாம எதைய தேர்ந்தெடுக்கிரோம்கிரதுதான் முக்கியம்.
// பெற்றோர்களுக்கு அவங்க போட்ட காசை எடுத்தாகணும்! //
அது மட்டும் இல்லை பசங்க கூழுக்கு போனவுடனே தாஸ் புஸ்ன்னு ஒரே பீட்டரா விடனும் இல்லனா அவ்ளோதான்.இவங்க கௌரவமே காத்துல போன மாதிரி ரொம்ப பீல் பண்ணுவாங்க.
முக்காவாசிப்பேரு தங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ இப்படித்தான் நினைக்குறாங்க.
// கல்வி நிறுவனங்களோட நிர்வாகம் கொடுக்குற பிரஷர் ஆசிரியர்களுக்கு, கிளாஸ்ல ரிசல்ட் சரியில்லைன்னா அடுத்த மாசமே அவங்க வேலைக்கு கல்தா! அப்புறம் அவங்க பிரஷரை எங்கே போயி கொட்டுவாங்க! //
நந்துணா உங்க கேள்விக்கு தான் பதில் சொல்லிருக்காரு.
// கஷ்டப் படுத்துறது எதுக்காக! பின்னாடி நல்லா சம்பாரிக்கணும்னுதானே! அப்படின்னு ஒரு சப்பைக் கட்டு வாதம் வைக்கலாம்!
அது ஒரு வேதனைக்குரிய சமூகச் சீரழிவுன்னே சொல்லலாம்! //
அப்பட்டமான உண்மை.
// அவங்களோட விளையாட்டுக்களுக்கான நேரம், ஹோம்வொர்க், டியூஷன்லாம் போயிட்டு வரதால பெத்தவங்ககிட்டே கூட செலவழிக்க முடியாத நேரம்,
படைப்பாற்றல், தனித்திறமைகளை வளர்த்துக்க முடியாமை.//
ம்ம்
// குழந்தைகளுக்குன்னு கொஞ்சம் ஆசைகள் இருக்கும், கனவுகள் இருக்கும், அவங்க உலகம் எப்படி இருக்கும் - //
கொஞ்ச நேரம் அதுங்க கூட சேந்து வெளையாடிப்பாத்தாதன அதுக உலகத்துக்குள்ள நாம போக முடியும்.
// .எங்கள் கைகளும் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன....கல்வித் திட்டம் அப்படி...//
VP இது நம்ம நாட்டோட தலைஎழுத்து எல்லாத்துக்கும் அடுத்தவங்கள கைகாட்டுறது.
இப்போ எவ்வளோவோ பள்ளிகள் தங்களுக்குன்னு ஒரு வழிமுறைய பின்பற்றுறாங்க.
என்ன அதுக்குன்னு ஒரு வெல வெச்சிருக்காங்க அவ்ளோதான்
// வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வதற்குத்தான் ,கிரியேட்டிவிட்டியை வளர்ப்பதற்குத்தான் பலவிதப் போட்டிகள்,ப்ராஜெக்ட்....அதிலேயும் என் பிள்ளைதான் முதலில் வரணும் என்னும் ஓட்டம் பெற்றோர்களுக்கு அதிகம்.......ம்ம்ம்ம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....//
ம்ம்ம்
@ சித்ரா மனோ
// மூணு இடத்துல அவளுக்கு பிடிக்காதது சிங்கை பள்ளிகள்தான். கிட்டத்தட்ட இந்திய கல்வி முறை.//
வெளிநாடுகள்ள இருக்குரவுங்கலப்பத்தி நா பேசிருக்கக்கூடதோ ?
நீங்க அனுபவத்துல உணர்ந்து சொல்லுறீங்க அதுல உண்மையிருக்கும்
என்னது வெறும் கேள்விஞானம் தான்.
அதுக்காக வெளிநாட்டுக்கல்விமுறை தான் சிறந்ததுன்னா என்மட்டுல ஏத்துக்க முடியல.
நிறைய இருக்கு...கொஞ்சம் பிஸி....வர்றேன்..வர்றேன்...கொஞ்சம் பொறுங்க....
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
அதெல்லாம் சரி! மனசாட்சிப் படி சொல்லுங்க!
உங்க பள்ளியில எம்.ஐ, பி.டி பீரியெட்னெல்லாம் ஒண்ணு இருக்கா? (டைம் டேபிளில் மட்டும் அல்ல)
என்னங்க சொல்றீங்க...எம்.ஐ,பி.டி,மியுசிக்,டான்ஸ்,ஆர்ட் அண்ட் க்ராஃப்ட்(M.I,P.Ed,Music,Dance,Art and Craft
எல்லாம் இருக்கு...வெறும் டைம் டேபிளில் மட்டும் அல்ல.....அன்புடன் அருணா
புதுகைத் தென்றல் said...
//ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு வாரம் ஆசிரியராக ஏதேனும் ஹயர் கிளாஸுக்கு சிபியை டீச்சரா போடுங்க அருணா. இது என் அன்பு வேண்டுகோள்//
போடலாமே....அதுக்கும் முன்னாலே சிபி சார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிருக்கேன் இங்கே....http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
அன்புடன் அருணா
கார்த்திக்,
//வெளிநாடுகள்ள இருக்குரவுங்கலப்பத்தி நா பேசிருக்கக்கூடதோ ?
நீங்க அனுபவத்துல உணர்ந்து சொல்லுறீங்க அதுல உண்மையிருக்கும்
என்னது வெறும் கேள்விஞானம் தான்.//
:-(((
உண்மையிலேயே, உங்கள மாதிரி வருங்காலப் பெற்றோர்கள் இந்த விவாதத்துல கலந்துகிட்டதே மகிழ்ச்சியா இருக்கு. நாம எல்லாருமே பார்த்தது, கேட்டது, அனுபவத்துல உணர்ந்தது இதையெல்லாம் வச்சுத்தானே கருத்துகள முன் வைக்கிறோம். இதுல சரி, தப்பெல்லாம் கிடையாது. அவரவர்களோட நம்பிக்கைதான்.
//அதுக்காக வெளிநாட்டுக்கல்விமுறை தான் சிறந்ததுன்னா என்மட்டுல ஏத்துக்க முடியல.//
போன பினூட்டங்கள்ள நான் வைத்த கருத்துக்கள் எல்லாம், மகளோட பார்வைகள், எண்ணங்கள் இதை அடிப்படையா வச்சுத்தான். என்னோட கருத்தா,
'மொத்த கல்வித் திட்டத்தை மாத்தலைன்னாலும், பல மாற்றங்களை அவசியம் செய்யணும். இதுதான் என்னோட ஆசை' அப்படின்னும் சொல்லி இருந்தேன்.
வெளிநாட்டு கல்விமுறைல, எனக்கு பிடிச்சது, அவங்க கல்வித் திட்டத்துல பிள்ளைகளோட எதிர்கால நலனை மட்டும் பார்க்காம, நிகழ்கால நலனையும் பார்க்கறதுதான். இந்திய சிலபசோட ஒப்பிடும்போது, இவங்க தரம் குறைந்ததாக இருக்கலாம். ஆனா இவங்களோட மனிதாபிமான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. என்னோட சொந்த அனுபவத்துல இதை உணர்ந்திருக்கேன். எங்களோட இளைய மகள் ஒரு special needs child.தாரே சமின் பர் படத்துல வரத விட இன்னும் கொஞ்சம் சிக்கலான பிரச்னை. இந்த வருஷம் main stream school ல்ல சேத்திருக்கோம். சில இடங்கள்ல இதை நாங்க கனவிலையும் நினைச்சிருக்க முடியாது. இதுக்காக கல்வித்துறை அளித்த/அளிக்கும் உதவிகள் ஏராளம்.
பதிவுக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி. நீங்க வால்பையனோட friend கார்த்திக்கா? பதிவுலகில ரெண்டு, மூணு கார்த்திக் இருக்காங்க. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன். தப்பா எடுத்துக்காதிங்க. :-))
சித்ரா மனோ
புதுகைத் தென்றல், அருணா,
இந்த சந்தர்ப்பத்துல உங்களுக்கும், உங்களை போல அர்ப்பணிப்போட ஆசிரியப் பணியை செய்பவர்களுக்கும் என்னோட மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிச்சிக்கிறேன். படிக்கிற காலத்துல பயங்கலந்த மரியாதைதான் இருந்தது. ஆனா எங்களோட special needs child பள்ளிக்கு போகும்போதுதான் ஆசிரியப் பணியின் மகத்துவமே புரிஞ்சது. மாதா, பிதா, குரு, தெய்வம். இந்த உண்மையை உணர்ந்த தருணங்கள்.
சித்ரா மனோ
//மாதா, பிதா, குரு, தெய்வம். இந்த உண்மையை உணர்ந்த தருணங்கள்.//
என் வகுப்பில் இருந்த ஒரு special needs child அபூர்வாவின் நினைவு வருகிறது....
ரொம்ப நன்றி...மனோ சித்ரா
//எங்களோட இளைய மகள் ஒரு special needs child.தாரே சமின் பர் படத்துல வரத விட இன்னும் கொஞ்சம் சிக்கலான பிரச்னை. இந்த வருஷம் main stream school ல்ல சேத்திருக்கோம். சில இடங்கள்ல இதை நாங்க கனவிலையும் நினைச்சிருக்க முடியாது. இதுக்காக கல்வித்துறை அளித்த/அளிக்கும் உதவிகள் ஏராளம்.//
தாரே சமீம் பர் படம் பாக்கலைனா குழந்தைகளுக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதே தெரியாம போயிருக்கும்.
// நீங்க வால்பையனோட friend கார்த்திக்கா? //
ஆமாங்க.அதே கார்த்தி தான்.
இன்னைக்கு எஸ்ரா அவரோட பதிவ படிக்கும் போது இந்த விவாதம் நினைவுக்கு வந்தது.நேரம் இருக்கவுங்க படிச்சிப்பாருங்க.
ஐயையோ! வயித்தை கலக்குதே ..நான் இனிமே தான் அவ்வ்வ்வ்வ்வ்
என் குழந்தையை இப்போதுள்ள கல்வி முறையில் படிக்க வைக்க விருப்பமில்லை. மாற்றுக் கல்வி சூழல்தரும் பள்ளிகளை பரிந்துரைக்கவும். எனக்கு எதுவும் தோன்றாவிட்டால், அரசுப் பள்ளியை நாடுவதே சிறந்ததென நினைக்கிறேன்.
என் நண்பனின் குழுந்தைக்கான கல்விச் செலுவுகளைப் பார்த்தால் எனக்கு மயக்கம் வருகிறது. Pre kg லயே சீருடை, அடையாள அட்டை, shoes, வீட்டுப் பாடம்... வருடத்துக்கு எழுபதாயிரமாம்.
போங்கடா டேய்.. நான் முதுகலை படிக்கிறதுக்கே அவ்வளவுதான் செலவு ஆச்சு.
Post a Comment