டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.
பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம்
உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனே
எல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.
Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில்
கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்
நிறைய இருக்காம்.!
இது மிக முக்கியம்:
நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவை
எரித்துக்காட்டினார்கள். இதில் பிளாஸ்டிக் உருகுவது தெரிந்தது.
ஆதாரம்: டீவி 9, டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இந்த மாதிரி பாக்கெட்டுகளில் வரும் எந்த வித
உணவுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு
வாங்கிக் கொடுக்காதீர்கள். (இதையெல்லாம் படிச்சிட்டும்
பெரியவங்க வாங்கி சாப்பிடுவாங்களா? என்ன?)
மெந்தோஸ்:
பெப்ஸி/ கோக் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு இதை வாயில் போட்டால்
சிவலோக ப்ராப்திதானாம். சயனைடாக மாறிவிடுகிறதாம்.
ஜாக்கிரதை.
சிலருக்கு அதென்னவோ ஒரு மைண்ட் செட். காலையில் குளிச்சதும்
காதை கொடைஞ்சே ஆகணும். தேவையே இல்லீங்க.
காதுகளில் குறும்பு சேரும்போது மட்டும் பட்ஸ் கொண்டு
சுத்தம் செஞ்சா போதும்.
இயர் பட்ஸ் வாங்கும்போது ரொம்ப கவனம் தேவை:
ரோடோரத்தில் சீப்பா கிடைக்குதுன்னு வாங்கினீங்கன்னா
Herpes Zoster Oticus
(a viral infection of the inner, middle, and external ear)
இந்த நோய்க்கு நீங்கதாங்க முதல் விருந்தாளி.
ரோட்டோரோத்தில் விலை குறைவாக விற்கப்படும்
பட்ஸ்கள் மருத்துவமனைக் கழிவு பஞ்சுகளை
சேகரித்து சுத்தம் செய்து, ப்ளீச் செய்து பட்ஸ்
தயாரித்து விற்கிறார்கள். இதனால்தான் மேலே
சொன்ன புது வியாதி வருமாம்.
அப்படியே உங்களுக்கு காது குடைஞ்சே ஆகணும்னா
கண்டிப்பா ப்ராண்டட் பட்ஸ்களை வாங்குங்க.
அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லோத்துக்கும்
இந்த விசயத்தை சொல்லுங்க.
இமெயில் மூலமா கிடைச்ச விசயம் இது.
இதை நான் நம்பாம இருந்தப்பத்தான் டீவியில்
பாத்தேன். உடன் பதிவா போட்டுட்டேன்.
இதையும் படிங்க:
Message From Gautham Mukkavilli - Managing Director FritoLay India
குறள் வழிக்கதைகள்
5 years ago
38 comments:
நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவை
எரித்துக்காட்டினார்கள். இதில் பிளாஸ்டிக் உருகுவது தெரிந்தது.
ஆதாரம்: டீவி 9, டைம்ஸ் ஆஃப் இந்தியா.
Link please
email than iruku forward seyyaren
நல்ல தகவல். இந்த பட்ஸ் மேட்டர் ஏற்கனவே எஸெமெஸ்ல வந்தது. படு பயங்கரம்.
நல்ல தகவல்களுக்கு நன்றி தென்றல்.
வாங்க பரிசல்,
வருகைக்கு நன்றி.
உங்க வருகைக்கும் மிக்க நன்றி
ராமலக்ஷ்மி.
யம்மாடீஈஈஈஈஈ!!!!!
இந்த ear buds மேட்டர் எனக்கு தெரியாது. ஆனா பயங்கரமாத் தான் இருக்கு... ஹ்ம்ம்ம்... தகவலுக்கு நன்றி.
சிப்ஸ்,குர்குரே போன்ற பாக்கெட்டுகளில் ,குழந்தைகள் சாப்பிட ஏற்றது இல்லை என்பது போன்ற வாசகம் சேர்க்க வேண்டும் என்ற விதி உள்ளது என்பதை எங்கோ
படித்த ஞாபகம்
பட்ஸ் விசயம் எனக்கு புதிது.. தென்றல்.
வாங்க நானானி,
இமெயிலில் படிச்சப்ப, டீவில பாத்தப்போ நானும் மலைச்சுப் போயிட்டேன்.
வாங்க ட்ரூத்,
நமக்குத் தெரிஞ்சதை நண்பர்களிடம் பகிர்ந்துக்கலாம்னுதான் பதிவே எழுதினேன்.
வருகைக்கும் நன்றி.
ஆமாம் பாபு,
பசங்களுக்கு பிடிக்குதுன்னு நிறைய பெற்றோர் வாங்கிக் கொடுத்திடறாங்க.
என் பிள்ளைகளின் பள்ளியில் இந்த மாதிரி ஐயிட்டங்கள் எல்லாவற்றிற்கும் தடாதான்.
ஆமாம் முத்துலெட்சுமி,
எனக்கும் தெரியாமத்தான் இருந்தது.
ஏற்கனவே குழந்தைகளுக்கு இவற்றை தருவதை முடிந்த வரை தவிர்த்து வருகிறோம். இனி முற்றிலும் நிறுத்திட வேண்டியதுதான்..
good
Good and informative post
anbudan aruna
சிப்ஸ்,குர்குரே போன்ற பாக்கெட்டுகளில் ,குழந்தைகள் சாப்பிட ஏற்றது இல்லை.
இதை இல்ல பெற்றோர்களும் கண்டிப்பாக உணரவேண்டும். குழந்தைகளுக்கு உணர்த்தவும் வேண்டும். ஒரு நல்ல அறிவுரை மிக்க வெளிப்பாடு இந்த பதிவு.
நல்லா இருக்கு
எனக்கும் பார்வேர்டட் மெயில்ல வந்துச்சு
இந்த குர்குரே வை நிறையா தடவை சாப்பிட்டிருக்கேனே. அடக்கடவுளே
பயம்மா இருக்கே...
சமீபத்தில் ஆ.வியோ குமுதமோ ஏதோ ஒன்றில் அஜினமோட்டோ விளம்பரம் கண்டேன். 2 பக்கம் மினக்கெட்டு விலாவாரியா விளக்கியிருந்தாங்க எப்படி உணவைச் சுவையூட்டுது என்று. ஆனால் அஜினமோட்டோ carcinogenic.
இந்தியாவில் பால்மா/பிஸ்கற்/சொக்லேட் போன்றவற்றில் தயாரிப்புக்கு எங்கிருந்து மூலப்பொருள் வருது? சீனாவா? மெலமைன் விவகாரம் அங்கே என்ன ஆச்சு?
ஆமாம் வெண்பூ,
குழந்தைகளுக்கு புரியறமாதிரி எடுத்துச் சொன்னா அவங்க ஏத்துப்பாங்க. அதோட வெளியில ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயிருந்து கூட வாங்கி சாப்பிட மாட்டாங்க.
வாங்க டீஜி,
வருகைக்கு நன்றி.
மிக்க நன்றி அருணா.
ஆமாம் ரம்யா,
ஆனா பல பெற்றோர் பிள்ளைகள் விருமறாங்க என்பதற்காகவும், டிபன் டப்பாவில் வெக்க வசதியா இருக்கு என்பதற்காகவும் வாங்கிக் கொடுக்கறாங்க.
பெரிய்வங்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படணும். வீட்டில் இவைகளை வாங்கவே கூடாதுன்னு தீர்மானமா இருந்தாத்தான் சாத்தியம்.
வாங்க ராப்,
எனக்கு ஃபார்வேர்டட் மெயில்தான் வந்துச்சு.
ஆனா அதை டீவியிலே காட்டின பிறகு தான் நம்பினேன்.
வாங்க சின்ன அம்மிணி,
அதுல என்ன இருக்குன்னு நம்ம நாட்டில சரியா போடமாட்டாங்களே அதுதான் பிரச்சனை.
வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தூயா.
ஆமாம் ஷ்ரேயா,
அஜினோமோட்டோவும் பயங்கரமானதுதான்.
இதுல பல பொருட்கள் வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு, நம் நாட்டில் சர்வசாதாரணமாக உப்யோகிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் நீயூஸ்,
சீனா மொபைல்களை நம் அரசு தடை செய்ய விருக்கிறதாம்.
தரம் குறைந்த இவற்றால் உபயோகிப்பாளர்களுக்கு பிரச்சனை வருகிறது என்பதால் அதி விரைவில் இந்தச் சட்டம் வரவிருக்கிறதாம்.
நல்ல உபயோகமான தகவல்கள்...
good work. keep going
வாங்க பாசமலர்,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க டாக்டர் ருத்ரன் சார்,
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
அருமையான பதிவு. நல்ல தகவல்கள். நன்றி.
தகவல்கள் அறிந்ததுதான் என்றாலும் நம்பாமலே இருந்தேன்.
ஆனால் இப்போது உரைக்கிறது உண்மைதான் என்று.
hahahahhah.....
Post a Comment