16. குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு தினசரி செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.
17. குழந்தைகளின் பள்ளியில் நடக்கக்கூடிய அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.
18. குழந்தையின் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
19. குழந்தைகளுடன் பேசும்பொழுது தெளிவான உச்சரிப்பில் பேச வேண்டும்.
20. குழந்தைகளிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள். (குழந்தைகள்தானே என்ற அசட்டை வேண்டாம்).
21. புதுப் புது வார்த்தைகளையும், பேசும்பொழுது பலவித முக பாவனைகளையும் அறிமுகப்படுத்துங்கள்.
22. குழந்தைகளிடம் பேசும்பொழுது முடிந்தவரை அவர்கள் உயரத்திற்கு குனிந்து பேசுங்கள்.
23. குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசுங்கள்.
24. அடிக்கடி குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடுங்கள்.
25. குழந்தைகளின் நேரம் முழுவதையும் என்ன செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செயாதீர்கள். சில நேரம் அவர்களாக விளையாட விடுங்கள் அதுவும் அவர்கள் விரும்பும் நேரத்தில்.
26. சாலை பாதுகாப்புப் பற்றிய விதிகளை சலையில் செல்லும்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துங்கள்.
27. வீட்டில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களைப் (கத்தி, தீப்பெட்டி, நெருப்பு) பற்றி சொல்லிக்கொடுங்கள்.
28. குழந்தைகளுக்கு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
29. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் எண்ணச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு முட்டை வாங்கி வந்தால் எத்தனை முட்டை உள்ளது என எண்ண சொல்லலாம்.
30. குடும்பத்தில் நடந்த சுவாரசியமான விசயங்களைக் கதையாகச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு அப்பா சின்னப் பையனாக இருந்தபோது (தற்புகழ்ச்சிக்காக பொய்யெல்லாம் வேண்டாம்)
தொடரும்,
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
vandhaan vadivelan
1 year ago
7 comments:
விசயக்குமார்,
உங்கள் பதிவுகள் முன்னமே சொன்னது மாதிரி thoughtfulஆக இருக்கின்றன.
ட்விட்டரில் இணைத்துள்ளேன் - http://twitter.com/venkatramanan/statuses/902460988 & http://twitter.com/venkatramanan/statuses/902461066 பார்ப்போம், மக்கள் கவனிப்பார்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
வெங்கட்ரமணன் அவர்களுக்கு நன்றி
நல்ல யோசனைகளை பலரும் அறிய எடுத்து அளித்திருப்பது பாராட்டுக்குரியது விசயக்குமார்.
நன்றி ராமலஷ்மி அவர்களே
//posted by விசயக்குமார் //
உங்களுக்கு பேர் கரெக்டாத்தான் வெச்சிருக்காங்க. போஸ்ட்ல நிறைய பயனுள்ள "விசயம்" இருக்கு. நன்றி..
வெண்பூ அவர்களுக்கும் எனது நன்றி.
http://valluvam-rohini.blogspot.com/2007/12/blog-post_1696.html#links
குழந்தை வளர்ப்பு பற்றிய என் கருத்தை இந்த லிங்க்கில் வாசித்து தங்கள் மேலான கருத்தைக் கூறுங்கள்
Post a Comment