பிள்ளைகளுக்கு உதவ விரும்பும் பெற்றோர்களுக்கு 101 ஐடியாக்கள் என்ற தலைப்பில் புதுகைத் தென்றல் அவர்கள் போட்ட பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு.
1. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.
3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.
4. நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கிருந்து புத்தகம் எடுத்து வீட்டில் படித்துவிட்டு திரும்ப ஒப்படைக்கும் முறைக்கு பழக்கப்படுத்துங்கள்.
5. தினமும் சிறிது நேரமாவது குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படியுங்கள்.
6. குழந்தை உடைகளைத் தானே அணிந்துகொள்ள தேவையான நேரத்தை அளியுங்கள்.
7. தேவையான நேரம் உறக்கம் கொள்ள அனுமதியுங்கள்.
8. குழந்தைகளுக்குத் தனியான ஒரு அலமாரி ஒதுக்குங்கள். அவர்களது பொருட்களை அங்கு வைத்து பராமரிக்கப் பழக்குங்கள்.
9. குழந்தையின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வலியுறுத்துங்கள்.
10. வீட்டில் சிறு தோட்டத்தை அவர்களுக்காக கொடுங்கள் அல்லது சில தொட்டிச் செடிகளையாவது கொடுங்கள். செடிகளை வளர்த்து அனுபவம் பெறட்டும்.
11. தினமும் குழந்தைகளுடன் சிறு நடை (walking) செல்லுங்கள். அவர்கள் வேகத்துக்கு மெதுவாக நடக்கவேண்டும். அப்பொழுது சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்லுங்கள்.
12. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
13. குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் நீங்களும் உடன் பாருங்கள். பின் என்ன பார்த்தீர்கள் என்பது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.
14. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என பழக்குங்கள்.
15. அடிக்கடி குழந்தைகளைக் கொங்சுங்கள்.
தொடரும்,
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
vandhaan vadivelan
1 year ago
6 comments:
nice advices doctor
:)
இதை நானும் பதிவா போட்டிருந்தேன்.
மீள் பதிவுன்னு வெச்சுக்கலாம்.
புதுகைத் தென்றல் அவர்கலுக்கு,
நீங்கள் மொழிபெயர்க்க நேரமில்லை என விட்டு விட்டீர்கள். பயனுள்ள தகவல் என்பதால் நான் மொழிபெயர்க்கிறேன். தொடர்ந்து அனைத்து ஆலோசனைகளையும் மொழிபெயர்க்க உள்ளேன். நீங்கள் போட்ட பதிவின் தொடர்ச்சிதான்.
நல்ல யோசனைகள். இந்த டி.வி பார்க்கறதை மட்டும் எப்படி கட்டுப்படுத்துவது என்று யாராவது யோசனை சொல்லுங்களேன்....எங்கள் வீட்டில் சுட்டி/போகோ தான் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அமுதா அவர்கள் மனதைத் திடப்படுத்திக்கொள்ளவேண்டும். தொலைக்காட்சி பெட்டி பழுது என்று சொல்லி தெரியாமல் வைப்பதே சிறந்த வழி. (புது டிவி கேட்டால்!)
நல்ல யோசனைகள். தொடரட்டும் விசயக்குமார், வாழ்த்துக்கள்.
Post a Comment