என்னுடைய நன்பர்(ண்) ராஜேசை இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.பேச்சினூடே எங்கள் குழந்தைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவனுடைய 4 வயது மகனுடைய சேட்டைகளைப் பற்றி மகிழ்வோடும்,பெருமையோடும் சொல்லிக்கொண்டு வந்தவன் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றிச் சொல்லும் போது சற்று வருத்தத்தோடு பேசத்துவங்கினான். அவனுக்கு ஏதேனும் ஓரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் மிகவும் பிடிவாதமும்,அழுகையும் பிடித்து அது கிடைத்தவுடன் தான் சமாதானம் ஆகிறான். அவன் விரும்பியதைக் கொடுக்காமல் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குறிப்பிட்டான்.
என்னுடைய செல்ல மகள் ஓருமுறை அவள் விரும்பிய ஓன்றைக் கேட்டு அழத்துவங்கிய போது அதைக்குடுத்து சமாதானம் செய்யலாம் என யோசித்தேன். அப்போது எனது மனைவி கூறிய வார்த்தைகள் வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் என் நினைவில் உள்ளது..... "இன்று இந்த அழுகைக்காக இதை செய்தால் அழுதால் எதுவும் நடந்துவிடும் என்ற எண்ணம் அவளுக்கு ஆழமாகப் பதிந்துவிடும்" எனவே கண்டுக்காம விடுங்க. அப்படி ஓரிரு முறை நாங்கள் அவள் அழுகையை சகித்துக் கொண்டு கண்டு கொள்ளாமல் போக இப்போது அவள் நிறைவேறாத எந்த விருப்பங்களுக்காகவும் அழுவதோ ஆர்ப்பாட்டம் செய்வதோ இல்லவே இல்லை. அதேபோல் குழந்தை கேட்கின்ற எந்த விஷயத்தையும் உடனடியாக நிறைவேற்றுகின்ற நிலையில் இறைவன் வைத்த போதும் இன்னோரு பழக்கமும் வைத்து இருக்கிறேன். அவள் ஏதேனும் அவளுக்குத் தேவை எனக்கூறினால் அப்பாவுக்கு சம்பளம் ஓன்னாம் தேதிதான் கிடைக்கும்,எனவே அப்போது வாங்கித் தருகிறேன் எனச் சொல்லிவிடுவேன். இதனால் அவளுக்கு உண்மையிலேயே என்ன தேவையோ அது மட்டுமே அவளுக்கு ஓன்னாம் தேதி வரை நினைவில் இருக்கின்றது.மூன்று நான்கு விஷயங்களாக சொன்னால் ஓருவேளை எதுவும் நடக்காமல் போய்விடுமோ என நினைத்தே பெரும்பாலும் அவளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கிறாள். இதோ இப்பொழுது எனது இரண்டாம் மகளும் பிறந்து விட்டாள். அவளுக்கும் இதே ஃபார்முலாதான் :))
23 comments:
அண்ணா,
இங்க அண்ணண் பொண்ணும் அப்டிதான்னே செய்யுது, எது வேணும்ணாலும் அழுவுது. ஆனா கண்டுக்காம விட்டா அழுது அழுதே உடம்பு சரியில்லாம போயிடுது. அரை மணி நேரம் கூட விடாம அழுவுது. அதான் என்ன செய்யிறதுன்னு புரியல.
50 ஆவது பதிவை போட்ட அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்.
ஆமாம் அப்துல்லா,
உங்க தங்ஸ் சொல்வது சரி. அடம்பிடித்து அழுதால் கண்டுக்காமல் விட்டு விடுவதுதான் நல்லது.
ஜோசப்,
”பாலானாம் ரோதனம் பலம்” அதாவது பிள்ளைகள் அழுவதால் அவர்களது சுவாசப் பை விரிந்து நன்கு வேலை செய்யும் என்பார்கள்.
தாங்கள் கூறியிருப்பது போல் பிரச்சினையிருந்தால் குழந்தை மருத்துவரை அணுகுவது சிறந்தது.
அடம் பிடிக்கும் பாப்பா (மங்களுர் சிவா அல்ல )"
சிவா தம்பி பாவம். :)
நல்ல ஃபார்முலா...
என் பையனுக்கு நாங்க இப்படித்தான் செஞ்சோம். இப்ப அவன் அடம் பண்ணறத விட்டுட்டான். ஆனா பொண்ணுக்கு இப்பதான் ஆரம்பிச்சு இருக்கோம். முதல்ல அரை மணி நேரம் அழுதுட்டு இருந்தவ இப்ப கால் மணி நேரம்தான் அழுகரா. இன்னும் கொஞ்ச நாள்ள அவளும் புரிஞ்சுக்குவான்னு நினைக்கிறோம்.
கரெக்ட் அப்துல்லா!
//50 ஆவது பதிவை போட்ட அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்.//
அப்படியா? சொல்லவே இல்ல?
நன்றி!நன்றி!நான்றி!
@ஜோசப் உங்களுக்கு பதில் எங்க அக்கா தென்றல் சொல்வாங்க.
@ச்சின்னபையன்,தெய்வசுகந்தி
நன்றி!
@பரிசல்
//சொல்லவே இல்லை//
பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்னு விட்டுட்டேன் ஹி..ஹி..ஹி..
எங்க தல சிவா பேரை பார்த்துட்டு வந்தா...பேரன்ட்ஸ் கிளப்பில் வந்து நிக்குது. நல்ல பதிவு அப்துல்லா. வாழ்த்துக்கள்.
தலைப்பின் உள்குத்து என்னவோ!?!?!?
:))))
பதிவு நல்ல கருத்து மைண்ட்ல வெச்சிக்கிறேன் யூஸ் பண்ணிக்கிறேன்!!!
:)))
சரிதான் அப்துல்லா..பப்புவின் பீடியாட்ரிசியனும் இதையேதான் சொன்னார்,when she startd 'adam"!
அது சரி..இதில் சிவாவுக்கு என்ன..ரோல்..ஒருவேளை ஜெர்மனியில் வேற டெக்னிக்ஸ் இருக்கலாமோ?
//பதிவு நல்ல கருத்து மைண்ட்ல வெச்சிக்கிறேன் யூஸ் பண்ணிக்கிறேன்!!!
:)))//
ரிப்பீட்டு...
வாங்க நிஜமாநல்லவன் அண்ணே!
ரொம்ப நாளா என்னைய மறந்துட்டீங்களே????
வாங்க சிவா அண்ணே!
மங்களூர் சிவா said...
தலைப்பின் உள்குத்து என்னவோ!?!?!?
:))))
அட பயப்படாதீங்க!உள்குத்தெல்லாம் ஓன்னும் இல்ல. ரொம்ப நாளா உங்களை என் கடைப் பக்கம் பார்க்க முடியல. இந்தோ இப்ப வந்துட்டீங்கள்ல!!!!
:))
வாங்க சகோதரி சந்தனமுல்லை!
இதில் சிவாவுக்கு என்ன..ரோல்..ஒருவேளை ஜெர்மனியில் வேற டெக்னிக்ஸ் இருக்கலாமோ?
//
யாரு கண்டா? என்னைக்காவது ஓரு நாள் நமக்கு தெரியாமலா போகப் போகுது :))))
வாங்க ஜீ அண்ணே!
வருகைக்கு மிக்க நன்றி.
எங்க வீட்டிலும் இதே கதைதான்... இரண்டு வயசிலேயே அடம் பிடிப்பது மட்டுமின்றி, கோபமும் வருது. இந்த முறையைக் கடைபிடித்துப் பார்க்கச் சொல்கிறேன்.
எங்கள் தலயை கலாய்க்கும் விதத்தில் தலைப்பு வைத்த அப்துல்லா அண்ணனை வன்மையாக கண்டிக்கிறோம்... ஒரு பெயர் சொல்லவில்லை என்பதால் இப்படியா செய்வது... :))
வாங்க தமிழ்பிரியன் அண்ணே!
//
ஒரு பெயர் சொல்லவில்லை என்பதால் இப்படியா செய்வது... :))
//
ஹி..ஹி..ஹி..
வணக்கம்.
தாங்கள் முன்பே இக்கருத்தினை கூறி இருக்கிறீர்கள்.
எமது 2 வயது மகளிடம் நாங்கள் தொடர்ந்து கடைப் பிடித்துவருகிறோம்.
மிக்க பலன் கிடைத்துள்ளது.
நன்றி.
enakkum engakkavukkum intha mathiriyana oru vazhkai muraiya than engamma palakki vittanga..appa-ku 1st sambalam vantha than engala sweet stall-ku kuttitu povanga....antha masathukulla thavanai padi pommai ellam appo than kidaikkum......vangi kudutha cream biscuit packet, aduthu 30 thethi varaikkum vachuruppom.....one per day-nnu......but ippo en ponnu ala arambichanna.....1 second ennala porukka mudila...ketta udane thukki kuduthuruven..but 1 vayasu kuda agatha pillaikku therinja seyyuthu.....avalkku puriyura vayasula solli tharalamnu irukken.
Post a Comment