நாம் பொதுவாக செய்யும் தவறு பிள்ளைகளை
சமையலறைக்குள் நுழைய வி்டுவதே இல்லை.
ஆனால் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகள்
செய்ய கற்றுக்கொடுப்பது நல்லது.
வீட்டு வேலை செய்து பழகும் பிள்ளைகளுக்கு
கவனம் அதிகமாக இருக்கும். இது அவர்களின்
படிப்பிற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என
கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதோ இந்த குழந்தை செய்வது போல்
கேரட்,வெள்ளரிக்காய் போன்றவற்றிற்கு
தோல் சீவ சொல்லிக்கொடுக்கலாம்.
கைகளை கழுவிக்கொண்டு தோல்சீவியால்
அழகாக சீவ பழக்கலாம்.
சீவிய தோல்களை எடுத்து பதமாக
குப்பைத் தொட்டியில் போடப் பழக்குவதால்
சுத்தத்தை சொல்லி கொடுக்கிறோம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
8 comments:
sari!
சொல்லிக்கொடுப்பது சிறந்தது!!
முதல் இரண்டு புகைப்படங்கள் சரி, இந்த மூன்றாவது புகைப்படம் நம்ம ஊரு போல இருக்கு, அது தாங்க சூப்பர். சூழ்நிலை அழகாக கற்றுக்கொடுத்துவிடும்.
வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்
சொல்லிக்கொடுப்பது சிறந்தது//
ஆமாம் தேவா
இந்த மூன்றாவது புகைப்படம் நம்ம ஊரு போல இருக்கு,//
நல்லா பாருங்க ஆப்பிரிக்க தேசத்து குழந்தை. சூழ்நிலை கற்றுக்கொடுத்துவிடும்னாலும் அந்த சூழ்நிலையை நாமே அமைச்சுக் கொடுக்கறது தப்பில்லையே.
சொல்லிக்கொடுப்பது மிகச்சிறந்ததுதான் அதில் மாற்றுக்கருத்தே இல்லை.நம் நாட்டில் தெருவிலேயே வளரும் குழந்தைகள் போலவே இருக்கும் இந்தக்குழந்தையின் படம் என்னைக்கவர்ந்ததால் அப்படி எழுதினேன்.
நம் நாட்டில் தெருவிலேயே வளரும் குழந்தைகள் போலவே இருக்கும் இந்தக்குழந்தையின் படம் என்னைக்கவர்ந்ததால் அப்படி எழுதினேன்.//
தப்பே இல்லை உமா,
கற்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கித் தரவேண்டும். இது மாண்டிசோரி கல்வி பயிற்சியில் நான் கற்றது
Post a Comment