பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு காட்சி.

அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க
ஜெனிலியா ”க்ரீச்” என்ற சப்தத்துடன் நாற்காலியை
இழுத்து உட்காருவார்.

அப்போது அங்கே இருக்கும் அனைவரின் முகத்தையும்
ஒருமுறை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

ஆமாம். நாராசமாக இருக்கும். இது நாகரீகமான
முறை அல்ல.

மாண்டிசோரி கல்வியில் 2 1/2 வயது குழந்தைக்கே
நாங்கள் நாற்காலியை எப்படி எடுக்க வேண்டும்
என்று கற்றுக்கொடுத்து விடுவோம்.

நாற்காலியை இழுக்காமல் இப்படி தூக்கி
வைப்பதுதான் சரியான முறை.
இரு கைகளாளும் இந்தக் குழந்தை எப்படி
பேலன்ஸ் செய்கிறது பாருங்கள்.


நாமும் இம்முறையை பின்பற்றி நாற்காலியை
இழுக்காமல் தூக்கி வைப்பது மிக முக்கியம்.

நம்மை பார்த்துதானே பிள்ளை கற்கிறது??

சரி இதனால் குழந்தை என்ன கற்கிறது என்று
பார்ப்போம்.

க்ரீச் சத்தத்துடன் நாற்காலியை இழுக்காமல்
அழகாக தூக்க பழகும்.

கால்களின் பலத்தால் முறையாக நடக்க பழகுகிறது.

கைகளுக்கு, சதைக்கு பளு தூக்கும் பயிற்சி

கண் பார்த்து கை செய்யும் பயிற்சி

தனித்தன்மை, தன்னால் தனியாக செய்யமுடியும்’எனும்
தன்னம்பிக்கை.
சுற்றுபுறத்தை பற்றிய அக்கறை(சத்தம் எழுப்பாமல் இருத்தல்)

கவனமாக இருத்தல்

நாற்காலியை முறையாக கையாளக் கற்பதில் எத்தனை
கற்றல் நடக்கிறது பாருங்கள்!!!

11 comments:

மாண்டிசோரி கல்வியில் 2 1/2 வயது குழந்தைக்கே
நாங்கள் நாற்காலியை எப்படி எடுக்க வேண்டும்
என்று கற்றுக்கொடுத்து விடுவோம்.
///

அப்படியா! பரவாயில்லையே!!

நாற்காலியை இழுக்காமல் இப்படி தூக்கி
வைப்பதுதான் சரியான முறை.
இரு கைகளாளும் இந்தக் குழந்தை எப்படி
பேலன்ஸ் செய்கிறது பாருங்கள்.///

இதெல்லாமும் கத்துக்குடுக்கிறீங்களா?

க்ரீச் சத்தத்துடன் நாற்காலியை இழுக்காமல்
அழகாக தூக்க பழகும்.

கால்களின் பலத்தால் முறையாக நடக்க பழகுகிறது.

கைகளுக்கு, சதைக்கு பளு தூக்கும் பயிற்சி

கண் பார்த்து கை செய்யும் பயிற்சி

தனித்தன்மை, தன்னால் தனியாக செய்யமுடியும்’எனும்
தன்னம்பிக்கை.
///

சின்ன விசயம் !!! இவ்வளவு பயன்களா?

அட பரவாயில்லையே
சில பெரியவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கமே

சிறு வயது முதலே நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டியது நம் கடமை.. நல்ல விஷயத்தை எளிமையாக சொல்லி உள்ளீர்கள்.. வாழ்த்துகள்..

நல்ல செய்தி!

வாங்க தேவா,

மாண்டிசோரி முறைக்கல்வி அத்தகைய சி்றப்பு மிக்கது

சின்ன விசயம் !!! இவ்வளவு பயன்களா?//

ஆமாம், இதற்கு முந்தைய பதிவுகளையும் படித்து பாருங்கள் தேவா,

வருகைக்கு மிக்க நன்றி

வாங்க முனைவர் அவர்களே,

முதல் வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் சின்ன வயசுல சரியா கத்துக்கொடுக்காததால சில பெரியவங்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டியதத்தான் இருக்கு

முதல் வருகைக்கு நன்றி
கார்த்திகை பாண்டியன்.

//சிறு வயது முதலே நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டியது நம் கடமை.//

சத்தியமான வார்த்தை

வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி வால்பையன்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்