குறும்புக்காரக் குழந்தைகள் நமது பார்வையில் வால் குழந்தைகள், அடங்காபிடாரிகள், முந்திரிக்கொட்டைகள், சொல்பேச்சு கேளாதோர், உருப்படாதது.....
ரஷ்ய ஆசிரியர் அமனஷ்வீலி அவர்களின் பார்வையில்:
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக்கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழக க் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன.
குறும்புக்காரக் குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள். இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும், மற்றியமைக்கவும் விழைகின்றனர்.
குழந்தைகளின் குறும்புகள்- வாழ்க்கையின்மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.
குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள். குறும்புக்காரக் குழந்தைகளை தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.
குழந்தைகளைப் பற்றிய உங்களது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
இது ‘குழந்தைகளின் எதிர்காலம்’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்.ஷ.அமனஷ்வீலி.
குறள் வழிக்கதைகள்
5 years ago
5 comments:
குறும்புக்காரக்குழந்தைகள் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க!!
குறும்புக்காரக் குழந்தைகளை அடித்து ஒடுக்க வேண்டாம்!!
நல்ல மேட்டர் சொல்லிருக்கீங்க... என் தங்கை மகன் கார்த்திக் மிக மிக குறும்புக்காரன்... ஆனால் பொழிலனை விட அதிகம் எல்லாரிடமும் பழகிவிடுவான்!
அவனும் பொழிலனைப் போலவே பல புத்திசாலித்தனமான குறும்புகளுக்கு சொந்தக்காரன்! :)
அருமை,
ஹைபராக்டிவ் வகைகுழந்தைகளை பற்றியும் அவர்களை கையாளும் முறைகளைப்பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்.
கருத்துக்களுக்கு நன்றி
பதிவுகள் தொடரும்
Post a Comment