பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பரிட்சையில் தோற்றவர்களின் மனதை மயிலிறகால்
வருடும் நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை
படித்திராதவர்கள் தயவு செய்து படித்து விடுங்கள்.

தேர்வில் தோற்றவர்களுக்கு

தேர்வில் தோற்றவர்களை திட்டுவது,
புரட்டி எடுப்பது(அடிதான்), அடுத்த வரும் வருடங்களில்
மதிக்காமலேயே இருப்பது இவைகள் தான் நடக்கும்.
தோல்வி தந்த வலிகளைத் தவிர ஒன்றுக்கும் உதவாதவனாக
நடத்தப்படும்போது வரும் வலிகள் அதிகம்.


தேர்வில் தோற்பதற்கு சரியாக படிக்காமல்
இருப்பது மட்டும் காரணம் இல்லை.

நான் +2 படித்த பொழுது +1 & +2 இரண்டு வருடங்களும்
ஆங்கிலத்தில் 200க்கு 195 தான். வேண்டுமென்றே
என் டீச்சரி அந்த 5 மார்க் குறைத்து போட்டு வைப்பார்கள்.
இரண்டு வருடமும் நான் தான் பள்ளியிலேயே ஆங்கிலத்தில்
அதிக மதிப்பெண் என்பதற்காக பரிசு கூட வாங்கியிருக்கிறேன்.

பப்ளிக் பரிட்சையில் நான் ஆங்கிலத்தில் எங்கள் ஊரிலேயே
முதலாவதாக வருவேன் என்று எங்கள் டீச்சருக்குள்ளேயே
பெட்டிங் எல்லாம் நடந்தது!!! ஆனால் ரிசல்ட் வந்த போது
செம அதிர்ச்சி. நான் 126 தான் எடுத்திருந்தேன். எங்கள்
பள்ளி மாணவி என்னை விட 50 மார்க் அதிகம் எடுத்திருந்தாள்.
அந்த பொண்ணா சான்சே இல்லையே!! என்று டீச்சர்களும்
சொன்னார்கள்.

அம்மா தான் கல்வித்துறையில் இருக்காங்களே.
யார் யாரையோ பிடித்து என் பேப்பரை மறுபரிட்சார்த்தர்த்துக்கு
ஏற்பாடு செய்து பார்த்தால் என் பேப்பரில் என் கையெழுத்தே
இல்லையாம்!!! என் பேப்பரை விலைக்கொடுத்து வாங்கி
வேலை நடந்ததை கண்டுபிடித்து எடுத்த பிறகுதான் என்
மன அழுத்தம் குறைந்தது.

இது சாத்தியமா என்று கேட்காதீர்கள். மிக சத்தியமாக
சாத்தியம்.

இதைத் தவிரவும் மதிப்பெண் குறையவோ, தோல்வி
அடைவதற்கோ இருக்கும் பொதுவான காரணங்கள்
சிலவற்றை பார்ப்போம்:

1. அதிக எண்ணிக்கையில் தாள்களை திருத்துவதாலும்
அவர்களுக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸாலும் ஆசிரியர்கள்
கவனக்குறைவாக இருத்தல்.

2. அவசரத்தில் எழுதுவதால் கையெழுத்து புரியாமல்
இருந்தால் அந்த பேப்பருக்கு மதிப்பெண் கிடைப்பது அரிது.

3. பரிட்சைக்கு படிக்கும் பிள்ளைகளுக்கு சரியான
சூழ்நிலையை தரவேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள்,
எப்போதும் சீரியல் பார்ப்பதை அம்மாக்கள் விட்டுக்கொடுக்க
வேண்டும்.

4. இப்படி சொல்கையில் இன்னொரு கஷ்டமும் இருக்கு.
எனது உறவில் ஒரு பையன் +2 படிக்கிறான் என்பதற்காக
கேபிள் கனெக்‌ஷன் கட், இண்டர்நெட் கட், வெளியே
போகக்கூடாது என ஏகப்பட்ட நோக்கள். பாவம்
அதிகம் டென்ஷனாகி பயலுக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் அவதிப்பட்டான்.

5. 10 மற்றும் +2 பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு
பள்ளியில் தரப்படும் ஸ்ட்ரெஸ் அதிகம். அந்த நிலையில்
வீட்டிலும் அவனுக்கு ரிலாக்ஸாக்கிக்கொள்ள வாய்ப்பில்லை.
வெளியே சென்று விளையாடவும் கூடாது எனும் பொழுது
அந்த மன அழுத்தமே படித்ததை கூட சரியாக எழுத
முடியாமல் ஆக்கிவிடுகிறது.

6. என்னுடைய இந்தப் பதிவையும் படித்து பாருங்கள்.

7. பெண், கார், போதை, சிகரெட் என எது கேட்டாலும் சரி
ஆனால் எனக்கு 90க்கு மேல் மார்க் மட்டும் கொண்டுவா என்று
ஒரு தந்தை கேட்டதாக ஒரு புத்தகத்தில் படித்த போது
அதிர்ந்தேன். (சத்தியமாக இந்த வார்த்தைகள் படித்தவை.
என் கற்பனை அல்ல)

8. போஷாக்கான உணவுகள், ரிலாக்ஸாக்கிகொண்டு படிக்கும்
வகையில் டைம் டேபிள் போட்டுக்கொண்டு நிம்மதியான
தூக்கம் என பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

9. அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதை விட
பெற்றோராக நம் சப்போர்ட் மிக முக்கியம். நானிருக்கிறேன்
என்ற தைரிய வார்த்தை தரும் 100 பாட்டில் குளுகோஸின்
சக்தியை.

10. 100 சதவிகிதம், 90 சதவிகித்திற்கு மேல் எடுக்க வேண்டும்,
அதுதான் தனக்கு பெருமை என்று சொல்வதை விடுத்து
குழந்தையால் என்ன செய்ய முடியும்? அவனுடைய தகுதி என்ன?
என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.


//ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..//

இப்படி ஒரு பின்னூட்டம் நர்சிம் அவர்களின் பதிவில்
என்ன செய்யலாம்? உங்க கருத்தையும் சொல்லுங்க.

23 comments:

அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதை விட
பெற்றோராக நம் சப்போர்ட் மிக முக்கியம். நானிருக்கிறேன்
என்ற தைரிய வார்த்தை தரும் 100 பாட்டில் குளுகோஸின்
சக்தியை.


மிக முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னதற்கு நன்றி.

இதை அனைவரும் படிக்க வேண்டும்.

பிள்ளைகளின் மனதை புரிந்துகொள்ள வேண்டும்.

மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க மோனிபுவன் அம்மா,

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

//ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..////

உண்மையிலேயே நல்ல கான்செப்ட் பாஸ்!

நான் படித்து முடித்துவிட்டு அரசு அலுவலக்ம் ஒன்றில் வேலைபார்த்த நாட்களில் உடன் பணியாற்றிய சிலரின் பிள்ளைகளுக்கு எங்கு சேரவேண்டும் எந்த கோர்ஸ் அப்படின்னு எனக்கு தெரிந்த சில விசயங்கள் கூறியமைக்கு இப்பொழுதும் கூட நன்றி கூறிக்கொண்டிருக்கிறார்கள் - நல்ல நிலையில் வேலை கிடைத்த சந்தோஷத்தோடு.....! :))

புதுசா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சி கல்விக்கான தகவல்களை சேகரிக்கலாம். ஆண்டாண்டுகளாக உதவுமே. ஆசிரியர்கள் அல்லது கல்லூரிப் பணியாளர்களிடம் விவரங்கள் வாங்கி சேகரிக்கலாம்.

அருமையான ஐடியா.

சஞ்சய் சொல்வது மிகச்சரி. இது போல் முன்னமே ஏதேனும் ப்ளாக் உள்ளதா, எழுதப்பட்டு இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டு இதை செய்ய வேண்டும்.

அங்கிளின் ஐடியாவை வழிமொழிகிறேன். என்னால் முடிந்த எல்லா வித உதவிகள் கண்டிப்பாக.

அருமையான பதிவு புதுகை!!!
அன்புடன் அருணா

//̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
புதுசா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சி கல்விக்கான தகவல்களை சேகரிக்கலாம். ஆண்டாண்டுகளாக உதவுமே. ஆசிரியர்கள் அல்லது கல்லூரிப் பணியாளர்களிடம் விவரங்கள் வாங்கி சேகரிக்கலாம்.//

என்ன சஞ்செய் அப்பப்போ..நல்ல ஐடீயாக்களை அள்ளித் தெளிக்கிறீங்க!
அன்புடன் அருணா

நர்சிம்மின் பதிவு மிக அருமை. மன தைரியத்தை கொடுக்கும் பதிவு.

சஞ்சய் நல்ல ஐடியா!

நல்ல பதிவு தென்றல்!

சந்தோஷம் பாஸ்

க்ரேட் சஞ்சய்

வாங்க எஸ் கே.

கண்டுபிடிச்சு சொல்றேன்

அங்கிளின் ஐடியாவை வழிமொழிகிறேன். என்னால் முடிந்த எல்லா வித உதவிகள் கண்டிப்பாக.//

:))))))))

அருமையான பதிவு புதுகை//

நன்றி அருணா

ஆமாம் சிவா

நன்றி ராமலக்ஷ்மி

மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.ஒரு பெண்ணாய்/தாயாய் நம்முடய முக்கிய கடமை குடும்பம், குழந்தைகள் தான். அதை விட்டு சிலர் பாகிஸ்தானி கூட சாட் பண்ணுவதும், ஆன்லைன் நண்பர்கள் மோசம் என எழுதுவதும் தேவையில்லா தலைவலிகள்.
பேரண்ட்ஸ் கிளப்புக்கு என் வாழ்த்துக்கள்

ஒரு பிள்ளையை நம் வீட்டருகே இருப்பின் நலம், (CORPORATION SCHOOL) பிடித்து நல்வார்த்தை சொல்லி மேலும் படிக்க செய்யலாம்.நாம் ஒன்று கூடி (என் வீடு ) யார் இல்லமாகிலும் பல முடிவு செய்யலாம்.அவரவர்க்கு முடிந்த வரையில்

காலத்தே வந்த சிறந்த பதிவு!

நன்றி சந்திரா

ஒரு பிள்ளையை நம் வீட்டருகே இருப்பின் நலம், (CORPORATION SCHOOL) பிடித்து நல்வார்த்தை சொல்லி மேலும் படிக்க செய்யலாம்.நாம் ஒன்று கூடி (என் வீடு ) யார் இல்லமாகிலும் பல முடிவு செய்யலாம்.அவரவர்க்கு முடிந்த வரையில்//

அருமையான ஐடியாங்க. நன்றி

நன்றி ஆகாயநதி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்