இப்பல்லாம் குழந்தைகள் சொல்லும் டயலாக்," நாங்க ரொம்ப பிஸி"
ஸ்கூல் தவிர பாட்டு, பரதம், அது இதுன்னு பிரதம மந்திரிய விட ரொம்ப பிஸி ஷெட்யூல் தான்.
இது நல்லதான்னு கேட்டா? யோசிக்காம இல்லைன்னே சொல்லலாம்.
"GIVE YOUR CHILD SOME TIME TO BE IDLE" அப்படிங்கற கட்டுரையை படிச்சேன்.
அதுல எழுத்தாளர் என்ன சொல்லியிருக்கார்னா!,
"பாவங்க இந்த குழந்தைங்க. எதையும் பொறுமையா ரசிக்க, பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து சந்தோஷப்பட, நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ, பூனைக்குட்டியோட விளையாட," இப்படி எந்த ரசனையும் இல்லாமலேப் போகுது அவங்க குழந்தைப் பருவம்.
"சும்மா" இருக்கவும் (Being idle) கத்துக்கொடுக்கணும் அப்படின்னு மனநல மருத்துவர்கள் சொல்றாங்க.
அப்பத்தான் குழந்தைகள் சின்னச் சின்ன சந்தோஷங்களின் இனிப்பை சுவைத்து மகிழ கத்துக்குவாங்களாம்.( பட்டாம்பூச்சி பிடிக்கிறது, இயற்கையை ரசிக்கிறது.......இப்படிச் சின்ன சின்ன சந்தோஷங்கள்). "தன்னைத் தான்" உணர்வதற்க்கு குழந்தைகல் கொஞ்ச நேரமாவது "சும்மா" இருக்கணும்".
எதுவும் செய்யாம கொஞ்ச நேரம் சும்மா இருப்பதனாலேயே அவர்களின் மூளை அதிகமாக உபயோகிக்கும் ஆற்றல் உடையவர்களாக ஆக சாத்தியம் இருக்காம்.
ஆகவே பெற்றோர்களே! குழந்தைகளை சும்மா இருக்க விடுங்க.
புதுகைத் தென்றல்.
vandhaan vadivelan
1 year ago
15 comments:
நன்றி ஆன்ட்டி இத இத இத தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம். நல்லா இம்சைக்கு பாடம் எடுக்கறிங்க...
வா பவன் கண்ணா,
குழந்தைகள் விரும்புக் பெற்றோரா இருக்கணும் என்பதுதானே ஒவ்வொருத்தரோட ஆசையும்.
.
சரியாகச் சொன்னீர்கள்..உண்மையிலேயே
சும்மா இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
இங்கயும் புள்ளியா?
ஆண்டவனே!!!!!
வாங்க பாசமலர்,
கருத்துக்கு நன்றி.
சும்மா இருக்க விட நான் ரெடி...ஆனால் பெரும்பாலும் அது புயலுக்கு முந்தைய அமைதியாகவல்லவா இருக்கிறது...
சத்தமில்லாம சும்மா இருக்காய்ங்கன்னாலே ஆடுத்து பெரிசா ஏதோ நடக்கப்போகுதுன்னு நம்பிக்கையா இருக்கலாம்...நம்ம பயலுக இன்னிக்கு வரைக்கும் என் நம்பிக்கையை ஏமாத்தல...ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
நீங்க சொல்றது ரொம்ப சரி
இரண்டாம் சொக்கன்.
இரண்டாம் சொக்கன் said...
சும்மா இருக்க விட நான் ரெடி...ஆனால் பெரும்பாலும் அது புயலுக்கு முந்தைய அமைதியாகவல்லவா இருக்கிறது...
அட அட அட சூப்பரு, சரியா சொன்னிங்க, சத்தமில்லாம இருந்தா நமக்கு பெரியா ஆப்பா ரெடி ஆகுதுன்னு அர்த்தம்.
நம்ம பய இன்னிக்கு வரைக்கும் என் நம்பிக்கையை ஏமாத்தல...ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
புதுகைத் தென்றல் said...
நீங்க சொல்றது ரொம்ப சரி
இரண்டாம் சொக்கன்.
ஆகா அங்கயும் சேம் பிளட் தானா.... எல்லா குட்டீஸ்ம் ஒரே மாதிரி தான் இருக்காங்க...
இந்த காலத்து பசங்க காஸ்ட்லி பொருள்களா பாத்து தான் ஆப்பு வைக்கராங்க... எங்க குட்டி இம்சைக்கு செல் போன், காமிரா, எம்பி3, டிவிடி, கம்ப்பியூட்டர் இது மேல தான் கண்ணு, கொஞ்சம் அசந்தா போதும்...
என்னங்க..!
நிறைய படிக்கிறீங்க!
நல்லா எழுதுறீங்க!
பதிவா விட்டு விளாசுறீங்க..!
புதுகைப்பதிவர் மாமணி ன்னு பட்டம் குடுத்துறலாமா?
வாங்க இம்சை,
அதெல்லாம் கைக்கு எட்டாம வெச்சுடுங்க.
எங்க வீட்டுல ரெண்டு பேரும் டாம் & ஜெர்ரி மாதிரி இருப்பாங்க. அதனால் எப்ப அடிச்சுப்பாங்க, எப்ப கொஞ்சிப்பாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. அந்த டென்ஷனோடத்தான் நானும் இருப்பேன்.
ரெண்டு பேரும் ரொம்ப அன்பானவங்கதான்.
சுரேகா,
பட்டெல்லாம் வேணாம். (ஏற்கனவே சாமான்யன் பட்டமா கொடுத்திருக்காரு. தலைவலியா இருக்கு. அதாவது பாரம் தாங்கம)
ஆமாங்க என் பிளாக்கில் பதிவுப்போட பெரிசா ஹோம்வொர்க் தேவையில்லை.
ஆனா இங்க எனக்கு நிறைய படிக்கிறது, மொழிமாற்றம் பண்றதுன்னு ஒரே வேலை. ஆனா நானும் நிறைய கத்துக்க முடியுது.
அதான் கொஞ்சம் பிசி.
என்னென்னவோ பெரிய பெரிய மேட்டர் எல்லாம் டிஸ்கஸ் பண்றீங்க ஒண்ணும் புரியலை!!
//
Baby Pavan said...
நன்றி ஆன்ட்டி இத இத இத தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம். நல்லா இம்சைக்கு பாடம் எடுக்கறிங்க...
//
ROTFL
Post a Comment