1. கேட்டதை செய்யுங்கள்
வாரத்தில் ஒரு நாள் தங்களால் இயன்ற நேரம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு விளையாடுதல், (அது உங்களுக்கு பிடிக்காட்டிக் கூட), கதை சொல்லுதல் போன்றவைகள் செய்யலாம்.
தங்களின் கவனத்தை வேறு எதிலும் சிதறாமல் அந்த நேரம் ப்ரத்யேயமாக குழந்தைக்கானதாக இருக்கட்டும்.
(பார்க்குக்கு கூட்டிகிட்டு போயிட்டு,"நீ விளையாடு, நான் இங்கதான்
இருக்கேன்", என்று சொல்லிவிட்டு போன் பேசக்கூடாது)
2. நான் இருக்கிறேன்.
குழந்தை வேறு ஏதோ காரணங்களால் மனவருத்ததில் இருந்தால்( அவங்களுக்கும் விருப்பு,வெறுப்பு, மன உளைச்சல் இதெல்லாம் உண்டு) "கட்டிப்பிடி" வைத்தியம் செய்து, செவிமடுத்திக் கேட்டு நான் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள். இருவரும் அருகாமையை உணர்வீர்கள்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், அது குழந்தைகள் முன் வேண்டாமே?. இந்தச் சண்டை குழந்தையின் மனதில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் மரியாதயை இழப்பீர்கள். அத்துடன் குழந்தையின் மனம் பாதுகாப்பு இல்லாதது போன்ற வெறுமையை உணரும்.
மீறி ஏற்பட்டால் குழந்தையிடம் "சாரி" சொல்லிவிடுங்கள்.
(அப்பால ரூம்ல கூட்டிகிட்டு போய் "பரேட்" நடத்திக்கோங்க)
5.தண்டிக்க ஓடாதீர்கள்
தவறு செய்வது மனித இயல்பு. எனவே ஒரிருமுறை குழந்தை செய்யும் தவறை மன்னியுங்கள்.
குழந்தைகள் தவறு செய்யும்போது (misbehave) உடன் திட்டாமல் "செய்தது தவறு" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து தாங்கள் எதிர்பார்க்கும் "ஒழுங்கான நடவடிக்கைகளை" எடுத்துக் கூறும் ஒரு கலந்துரையாடலை குழந்தையுடன் நடத்துங்கள்.
மீண்டும் சந்திப்போம்
புதுகைத் தென்றல்.
5 comments:
தூள் கிளப்புங்க!
குழந்தைகளை எப்படி சமாளிக்கறது எப்படின்னும் எழுதுங்க!
வாழ்த்துக்கள் !
அதுவும் வருது சுரேகா
வாழ்த்துக்கு நன்றி.
நல்லாச் சொல்லியிருக்கீங்க புதுகை..
வாங்க பாசமலர்,
பின்னூட்டத்திற்கு நன்றி.
வாங்க டெல்பின்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
Post a Comment