வணக்கம் பெரன்ட்ஸ், புது வருசம், பொங்கல் எல்லாம் முடிஞ்சது, குடியரசு தினம் கொண்டாட இருக்கோம். புது வருசம் பிறக்கும் போது புத்தாண்டு சபதம் எடுத்தோமே (வெயிட் குறைக்கனும், சிகரெட் விடனும், டிராபிக் ரூல் பாலோ பண்ணனும் ...) அது என்ன ஆச்சி ?
பெரும்பாலான சமயம் ஜனவரி முடியரதுக்குல்ல நம்ம சபதமும் முடிஞ்சி போயிடுது. சரி வெயிட் குறைக்கரதுக்கும் நல்ல பெற்றோரா குழந்தைய வளர்க்கரதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கரிங்களா ?
நம்ம புத்தாண்டு சபதம் கன்டிநியு பண்ண முடியாட்டி என்ன செய்யரோம். எதாவது சப்பை காரணம் கண்டுபிடிக்கறோம். டிராபிக் ரூல் யாருமே பாலொ பண்ணல நான் மட்டும் ஏன் பண்ணனும், மழை பெய்யுது அதனால எஃசர்சைஸ் பண்ணல, எனக்கு டைம் கிடைக்கல பிச்சி...
நம்ம இப்படி பண்ணரதுல இருந்து என்ன தெரியுது
1. என்னால என்னோட வார்த்தைகளை காப்பாற்ற முடியாது
2. என்னால பிளானிங் சரியா பண்ண முடியாது.
3. எதாவது காரியம் முடிக்க முடியவில்லயா எதாவது சப்பை காரணம் சொல்வது.
4. எந்த சின்ன செயல்லயும் போகஸ் இல்லை.
5. என்னால என்னையே சரியா பாத்துக்க முடியாது. ... இன்னும் பல
நம்ம குழந்தைகள் நம்ம பார்த்து தான் வளர்ராங்க, அவங்களோட ஒவ்வொரு செயலுக்கும் நாம தான் காரணம்.
குசும்பன் நீங்க என்ன நினைக்கரிங்கன்னு தெரியுது (குசும்பனுக்கு கண்டனம் ).
நம்ம குழந்தைகள் நம்ம தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க, நாம தான் அவங்களுக்கு ரோல் மாடல். நாம என்ன பண்ணரோம், பேசரோம். எப்படி நடக்கிறோம். நம்ம பேச்சின் டோன், வார்த்தைகள், பாடி லாங்வேஜ் எல்லாம் உன்னிப்பா பார்க்கறாங்க.
என்ன மாதிரி நிறைய பேரன்ட்ஸ் இப்ப சொல்லரது தன்னோட குழந்தை ரொம்ப குறும்பு, சொல்லரது கேக்கரது இல்ல, வீண் சண்டை, எப்படி அவங்கள திருத்தரது, நம்ம கண்ரோல்ல வைக்கரது ....
திருத்த வேண்டியது அவங்கள இல்ல நாம நம்ம திருத்திக்கனும், மாற்ற வேண்டியது குழந்தைகளை அல்ல நாம தான் மாறனும்.
சரி இப்ப என்ன பண்ணலாம், ரொம்ப சிம்பிள். இன்று முதல் நம்மை நாமே கண்காணிக்க வேண்டும். நாம் வீட்டில், வெளியில் எப்படி நடந்துக்கறோம். நாம் யாரிடமாவது பேசும் போது எப்படி பேசுகிறோம் (டோன், வார்த்தை) என்பதை கவனிக்கனும்.
எப்படி ஆரம்பிக்கலாம். நாம வீட்டில் இருக்கும் 2 மணி நேரம் சூஸ் பண்ணிக்குவோம் அந்த இரண்டு மணி நேரம் நம்மை நாமே வாட்ச் பண்ணுவோம். எத்தனை முறை நெகடிவா எதாவது செயல் பண்ணறோம்னு நோட் பண்ணுவோம். ஒரு வாரத்துக்கு பிறகு டைம் கொஞ்சம் கொஞ்சமா அதிகம் பண்ணிக்கலாம்.
இத நாம பண்ணா, நம்ம நாமே திருத்திக்க முதல் அடி எடுத்தாச்சி. நம்ம குழந்தைகளிடம் உடனே மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது ஆனால் நம்ம இம்பாக்ட் கண்டிப்பா அவங்களிடம் தெரியும்.
சரி இதயும் நம்மால செய்ய முடியலயா, அடுத்த முறை நம்ம குட்டீஸ் கிட்ட எதாவது சின்ன செயல் செய்ய சொல்லி அவங்க பெயில் ஆனா எப்படி நடந்திக்கறோம்னு யோசிங்க.
அவங்க கிட்ட எப்படி அட்வைஸ் பண்ணரோம், இல்ல கத்தரோம். அதை நமக்கு அப்ளை பண்ணுவோம். பிறகு மீண்டும் டிரை பண்ணுவோம் வெற்றி பெறும்வரை. (மொதல்ல என்ன நானே திருத்திக்கனும்)
Remember parenting is not for children alone, it's for parents.
தொடரும்.... இம்சை
பேரன்டிங் ஆரம்பம் - 1
குறள் வழிக்கதைகள்
5 years ago
2 comments:
நல்ல டிப்ஸ்
சரியா சொன்னீங்க இம்சை,
பல வீடுகளில் பெரியவங்க சாப்பிடும்போது, இது ஏன் இப்படி செஞ்ச, எனக்கு இது பிடிக்காது அப்படி இப்படின்னு சொல்றதைக் கேட்டு, குழந்தைகளும் சரியா சாப்பிடாமா, வளர்ந்தும் தன் வீட்டுப் பெரியவர்கள் போலவே இருப்பார்கள்.
Post a Comment