இதுவும் ஒரு சின்ன அட்வைஸ் பதிவு. கண்டிப்பா பயமுறுத்த அல்ல. எங்க குட்டி இம்சைக்கு அம்மா வயிற்றில் இருக்கும் போது பாட்டு கேட்டு ஆட்டம் போட ரொம்ப பிடிக்கும்.
அவனுக்கு ரொம்ப பிடித்த பாட்டு தீப்பிடிக்க தீப்பிடிக்க .... இந்த பாட்டு போட்டா அவரோட ஆட்டம் எங்களால உணர முடியும், அதனால தினமும் இரவு ஒரு முறையாவது அந்த பாட்டுக்கு ஆட்டம் போடுவாரு.
அன்று Mar 21 2006 இரவு 10:30க்கு வழக்கம் போல பாட்டு போட்டு அவரோட ஆட்டத்தை ரசித்துகொண்டு இருந்தோம், ஆனால் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் ஆட்டம் அதிகமா இருந்தது. அன்று இரவு முழுக்க ஆட்டம் தொடர்ந்தது. காலை 4 மணிக்கு களைத்து போய் அய்யா ஆட்டத்தை நிறுத்திவிட்டார்.
நாங்கள் எதற்கும் ஒரு முறை செக் பண்ணலாம் என்று மருத்துவமனை சென்றோம், அப்போ தான் தெரிந்தது cord was around his neck and tight அதனால் தான் ஆட்டம் அதிகமா இருந்தது.
டாக்டர் சொன்னாங்க 30 வாரம் ஆனபிறகு குழந்தை movements அதிகம் இருக்கும் ஆனா அம்மா வயிற்றில் இடம் போதாது அதனால் இப்படி ஆக சான்ஸ் இருக்கு, நார்மலா அதுவா சரி ஆயிடும், ஆனா பெற்றோர்கள் குழந்தையின் movements track பண்ணுவது ரொம்ப நல்லது என்றார்.
இது போல குழந்தையின் ஆட்டம் அதிகம் இருந்தால்/குறைவா இருந்தால் உடனே டாக்டரிடம் கன்சல்ட் பண்ணுவது மிக மிக அவசியம்.
முடிவு சுபம் குட்டி பவன் Mar 22 2006 மாலை 4:10 க்கு பிறந்தார். இனிமே தான் குட்டி இம்சையின் ஆட்டம் ஆரம்பம்.
vandhaan vadivelan
1 year ago
2 comments:
நேற்றுதான் எனது இளைய மகள் அம்ருதாவின் 8ஆவதுபிறந்த நாளைக் கொண்டாடினோம்.
டெலிவரிக்கு 15 நாள் முன்பே மூவ்மென்ட்ஸ் சரியில்லை என்று அட்மிட் ஆகியிருந்தேன். கொஞ்சம் நார்மலான மூவ்மென்ட்ஸ் வந்த உடன் அடுத்த நாளே வீட்டிற்கு வந்தேன்.
ஆனாலும் ஜனவரி 19 கொஞ்சம் டென்ஷனாகவே போனது. சரியாக வலி வரவில்லை. குழந்தையின் ஹார்ட் பீட் சரியில்லை,சிசேரியன் தான் என்று சொல்லி ஆபரேஷன் தியேட்டர் போனபிறகு, (அனஷ்தீஷியா கொடுக்கும் டாக்டர் வர ஆன தாமதகாலத்தில்- 5 நிமிஷம்) வலி அதிகமாகி நார்மல் டெலிவரியில் பிறந்தாள் அம்ருதா. கழுத்தில் கொடி சுற்றிக் கொண்டதனால் மூச்சுவிட சிரமபட்டுக் கொண்டு, வெளி வரமுடியாதனால் பிரசவமும் கொஞ்சம் கஷ்டமானது. (லாகவமாக கழுத்தில் சுற்றியிருக்கும் கொடியை கட் செய்து பிரசவம் பார்த்த என் அத்தை டாக்டர்.விசாலக்ஷி நாகராஜூவைத்தான் பாராட்டவேண்டும்).
புதுகைத் தென்றல்
நல்ல அருமையான செய்தி, நீங்க சொல்லியிருப்பது போல, தாய் தந்தை ஆக இருக்கும் எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம்.
பயம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் மூவ்மண்ட்ஸ் பத்தின கவனமுடன் இருக்கவேண்டும்.
Post a Comment