பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

எண்ணெய் கடைக்காரர், பால்காரர், தயிர்க்காரம்மா
ஆகியோர் சிந்தாமல் சிதறாமல் லாவகமாக
வேலை பார்க்கும் அழகே அழகு!!



மாண்டிசோரி கல்வியில் POURING EXERCISE
என்று ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு
பாத்திரத்திற்கு சிந்தாமல் ஊற்றக் கற்றுத் தருவோம்.




இதுல என்ன கற்க இருக்குன்னு கேக்கறீங்களா?

கவனமாக இருந்தால்தானே கீழே சிந்தாமல்
வேலை பார்க்க முடியும்? கவனத்தை
ஒருங்கிணைக்க குழந்தை கற்கிறது.

கண்களுக்கு பயிற்சி.

சின்ஞ்சிறு கைகளுக்கு கொஞ்சமாக
பளு தூக்கும் பயிற்சி

பரிட்சையில் தோற்றவர்களின் மனதை மயிலிறகால்
வருடும் நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை
படித்திராதவர்கள் தயவு செய்து படித்து விடுங்கள்.

தேர்வில் தோற்றவர்களுக்கு

தேர்வில் தோற்றவர்களை திட்டுவது,
புரட்டி எடுப்பது(அடிதான்), அடுத்த வரும் வருடங்களில்
மதிக்காமலேயே இருப்பது இவைகள் தான் நடக்கும்.
தோல்வி தந்த வலிகளைத் தவிர ஒன்றுக்கும் உதவாதவனாக
நடத்தப்படும்போது வரும் வலிகள் அதிகம்.


தேர்வில் தோற்பதற்கு சரியாக படிக்காமல்
இருப்பது மட்டும் காரணம் இல்லை.

நான் +2 படித்த பொழுது +1 & +2 இரண்டு வருடங்களும்
ஆங்கிலத்தில் 200க்கு 195 தான். வேண்டுமென்றே
என் டீச்சரி அந்த 5 மார்க் குறைத்து போட்டு வைப்பார்கள்.
இரண்டு வருடமும் நான் தான் பள்ளியிலேயே ஆங்கிலத்தில்
அதிக மதிப்பெண் என்பதற்காக பரிசு கூட வாங்கியிருக்கிறேன்.

பப்ளிக் பரிட்சையில் நான் ஆங்கிலத்தில் எங்கள் ஊரிலேயே
முதலாவதாக வருவேன் என்று எங்கள் டீச்சருக்குள்ளேயே
பெட்டிங் எல்லாம் நடந்தது!!! ஆனால் ரிசல்ட் வந்த போது
செம அதிர்ச்சி. நான் 126 தான் எடுத்திருந்தேன். எங்கள்
பள்ளி மாணவி என்னை விட 50 மார்க் அதிகம் எடுத்திருந்தாள்.
அந்த பொண்ணா சான்சே இல்லையே!! என்று டீச்சர்களும்
சொன்னார்கள்.

அம்மா தான் கல்வித்துறையில் இருக்காங்களே.
யார் யாரையோ பிடித்து என் பேப்பரை மறுபரிட்சார்த்தர்த்துக்கு
ஏற்பாடு செய்து பார்த்தால் என் பேப்பரில் என் கையெழுத்தே
இல்லையாம்!!! என் பேப்பரை விலைக்கொடுத்து வாங்கி
வேலை நடந்ததை கண்டுபிடித்து எடுத்த பிறகுதான் என்
மன அழுத்தம் குறைந்தது.

இது சாத்தியமா என்று கேட்காதீர்கள். மிக சத்தியமாக
சாத்தியம்.

இதைத் தவிரவும் மதிப்பெண் குறையவோ, தோல்வி
அடைவதற்கோ இருக்கும் பொதுவான காரணங்கள்
சிலவற்றை பார்ப்போம்:

1. அதிக எண்ணிக்கையில் தாள்களை திருத்துவதாலும்
அவர்களுக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸாலும் ஆசிரியர்கள்
கவனக்குறைவாக இருத்தல்.

2. அவசரத்தில் எழுதுவதால் கையெழுத்து புரியாமல்
இருந்தால் அந்த பேப்பருக்கு மதிப்பெண் கிடைப்பது அரிது.

3. பரிட்சைக்கு படிக்கும் பிள்ளைகளுக்கு சரியான
சூழ்நிலையை தரவேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள்,
எப்போதும் சீரியல் பார்ப்பதை அம்மாக்கள் விட்டுக்கொடுக்க
வேண்டும்.

4. இப்படி சொல்கையில் இன்னொரு கஷ்டமும் இருக்கு.
எனது உறவில் ஒரு பையன் +2 படிக்கிறான் என்பதற்காக
கேபிள் கனெக்‌ஷன் கட், இண்டர்நெட் கட், வெளியே
போகக்கூடாது என ஏகப்பட்ட நோக்கள். பாவம்
அதிகம் டென்ஷனாகி பயலுக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் அவதிப்பட்டான்.

5. 10 மற்றும் +2 பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு
பள்ளியில் தரப்படும் ஸ்ட்ரெஸ் அதிகம். அந்த நிலையில்
வீட்டிலும் அவனுக்கு ரிலாக்ஸாக்கிக்கொள்ள வாய்ப்பில்லை.
வெளியே சென்று விளையாடவும் கூடாது எனும் பொழுது
அந்த மன அழுத்தமே படித்ததை கூட சரியாக எழுத
முடியாமல் ஆக்கிவிடுகிறது.

6. என்னுடைய இந்தப் பதிவையும் படித்து பாருங்கள்.

7. பெண், கார், போதை, சிகரெட் என எது கேட்டாலும் சரி
ஆனால் எனக்கு 90க்கு மேல் மார்க் மட்டும் கொண்டுவா என்று
ஒரு தந்தை கேட்டதாக ஒரு புத்தகத்தில் படித்த போது
அதிர்ந்தேன். (சத்தியமாக இந்த வார்த்தைகள் படித்தவை.
என் கற்பனை அல்ல)

8. போஷாக்கான உணவுகள், ரிலாக்ஸாக்கிகொண்டு படிக்கும்
வகையில் டைம் டேபிள் போட்டுக்கொண்டு நிம்மதியான
தூக்கம் என பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

9. அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதை விட
பெற்றோராக நம் சப்போர்ட் மிக முக்கியம். நானிருக்கிறேன்
என்ற தைரிய வார்த்தை தரும் 100 பாட்டில் குளுகோஸின்
சக்தியை.

10. 100 சதவிகிதம், 90 சதவிகித்திற்கு மேல் எடுக்க வேண்டும்,
அதுதான் தனக்கு பெருமை என்று சொல்வதை விடுத்து
குழந்தையால் என்ன செய்ய முடியும்? அவனுடைய தகுதி என்ன?
என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.


//ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..//

இப்படி ஒரு பின்னூட்டம் நர்சிம் அவர்களின் பதிவில்
என்ன செய்யலாம்? உங்க கருத்தையும் சொல்லுங்க.

சிறுவனாக நடிச்சாரே சிவா
இப்போ எங்கிருக்காருன்னு பார்க்க எல்லாருக்கும் அவா
முன்னெல்லாம் வீக்கெண்ட் ஜொள்ளு வடியும் அவர் பதிவுல
இப்போ தினம் தினம் அசடோ அசடு வழியுதாம் வீட்ல


இவர் பதிவு முன்னெல்லாம் சும்மா டெர்ரரு
இப்ப இவரை பாத்து எல்லாரும் சொல்றாங்க டன்டன்னா டர்ருரு
இவரு விட்ட ஜொள்ளுல உண்டாச்சு பெரிய ஆறு
கல்யாணத்தப்புறம் இவர் போட்ட பதிவோ வெறும் ஆறு

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லிக்கிட்டாரு அவரு யூத்து
கல்யாணத்துக்கு அப்புறம் அவர் பதிவு வாங்குது வெறும் காத்து
வருஷம் பலவும் ஆகிப்போச்சய்யா... இன்னுமாய்யா நீ யூத்து
இருந்தாலும் இப்ப நாங்க சொல்றோம் உனக்கு பொறந்தநாள் வாழ்த்து


( போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கார்க்கிக்கே )

கவிதையில் வாழ்த்தியது*ஜீவ்ஸ்*

நாம் பொதுவாக செய்யும் தவறு பிள்ளைகளை
சமையலறைக்குள் நுழைய வி்டுவதே இல்லை.

ஆனால் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகள்
செய்ய கற்றுக்கொடுப்பது நல்லது.
வீட்டு வேலை செய்து பழகும் பிள்ளைகளுக்கு
கவனம் அதிகமாக இருக்கும். இது அவர்களின்
படிப்பிற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என
கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதோ இந்த குழந்தை செய்வது போல்
கேரட்,வெள்ளரிக்காய் போன்றவற்றிற்கு
தோல் சீவ சொல்லிக்கொடுக்கலாம்.



கைகளை கழுவிக்கொண்டு தோல்சீவியால்
அழகாக சீவ பழக்கலாம்.




சீவிய தோல்களை எடுத்து பதமாக
குப்பைத் தொட்டியில் போடப் பழக்குவதால்
சுத்தத்தை சொல்லி கொடுக்கிறோம்.



சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு காட்சி.

அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க
ஜெனிலியா ”க்ரீச்” என்ற சப்தத்துடன் நாற்காலியை
இழுத்து உட்காருவார்.

அப்போது அங்கே இருக்கும் அனைவரின் முகத்தையும்
ஒருமுறை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

ஆமாம். நாராசமாக இருக்கும். இது நாகரீகமான
முறை அல்ல.

மாண்டிசோரி கல்வியில் 2 1/2 வயது குழந்தைக்கே
நாங்கள் நாற்காலியை எப்படி எடுக்க வேண்டும்
என்று கற்றுக்கொடுத்து விடுவோம்.

நாற்காலியை இழுக்காமல் இப்படி தூக்கி
வைப்பதுதான் சரியான முறை.
இரு கைகளாளும் இந்தக் குழந்தை எப்படி
பேலன்ஸ் செய்கிறது பாருங்கள்.


நாமும் இம்முறையை பின்பற்றி நாற்காலியை
இழுக்காமல் தூக்கி வைப்பது மிக முக்கியம்.

நம்மை பார்த்துதானே பிள்ளை கற்கிறது??

சரி இதனால் குழந்தை என்ன கற்கிறது என்று
பார்ப்போம்.

க்ரீச் சத்தத்துடன் நாற்காலியை இழுக்காமல்
அழகாக தூக்க பழகும்.

கால்களின் பலத்தால் முறையாக நடக்க பழகுகிறது.

கைகளுக்கு, சதைக்கு பளு தூக்கும் பயிற்சி

கண் பார்த்து கை செய்யும் பயிற்சி

தனித்தன்மை, தன்னால் தனியாக செய்யமுடியும்’எனும்
தன்னம்பிக்கை.




சுற்றுபுறத்தை பற்றிய அக்கறை(சத்தம் எழுப்பாமல் இருத்தல்)

கவனமாக இருத்தல்

நாற்காலியை முறையாக கையாளக் கற்பதில் எத்தனை
கற்றல் நடக்கிறது பாருங்கள்!!!

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இந்தத் தொடரை தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு
வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை எனது வலைப்பூவிலும்,இங்கேயும்
வந்த இந்தத் தொடர் இனி இங்கே மட்டும்
தொடரப்படும்.

முந்தைய பதிவுகளின் லிங்குகள் இங்கே
கொடுத்திருக்கிறேன்.

முதல் பதிவு

அழைப்பு மணி

சுத்தம் சுகாதரம்

சுத்தம் பாகம்: 2

சுத்தம் பாகம் 3

Dressing/undressing

துணி மடித்தல்

எறும்புக்கு இணையாக
வரிசை


show lace கட்டுதல்

இனி இந்தத் தொடர் தொடரும்.

மற்ற பாடங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

குறும்புக்காரக் குழந்தைகள் நமது பார்வையில் வால் குழந்தைகள், அடங்காபிடாரிகள், முந்திரிக்கொட்டைகள், சொல்பேச்சு கேளாதோர், உருப்படாதது.....

ரஷ்ய ஆசிரியர் அமனஷ்வீலி அவர்களின் பார்வையில்:
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக்கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழக க் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன.

குறும்புக்காரக் குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள். இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும், மற்றியமைக்கவும் விழைகின்றனர்.

குழந்தைகளின் குறும்புகள்- வாழ்க்கையின்மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள். குறும்புக்காரக் குழந்தைகளை தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.

குழந்தைகளைப் பற்றிய உங்களது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இது ‘குழந்தைகளின் எதிர்காலம்’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்.ஷ.அமனஷ்வீலி.

நமது பேரண்ட்ஸ் கிளப்பில் மருத்துவரின்
பார்வையில் பிள்ளை வளர்ப்பு, அவர்களுக்குத்
தேவையானவற்றை செய்ய என பதிவிடவேண்டும்
என பலரிடம் கேட்டேன்.

இப்போது நம் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு மருத்துவர்
இணைகிறார்.

காரைக்குடி தந்த தேவா தான் அந்த மருத்துவர்.

தமிழ்த்துளி எனும் வலைப்பூ இவருடையதுதான்.

இனி நம் சந்தேகங்கள், சங்கடங்கள் எல்லாம்
மருத்துவராக தேவா தீர்த்துவைப்பார்.

வாருங்கள் தேவா!!

உங்களின் பதிவுக்காக பல பெற்றோர்கள்
காத்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரின் சார்பாக உங்களை
வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வரும் ஞாயிறு கிழக்குப் பதிப்பகம் மொட்டைமாடி,
எல்டாம்ஸ் ரோடு,சென்னையில் மிக மிக முக்கியமான
கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.

இதைப் பற்றி நி்றைய்ய பதிவுகள் வந்திருக்கின்றன.

அவைகளுக்கான லிங்குகள் கீழே கொடுத்திருக்கிறேன்.

இந்த பொன்னான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள
வேண்டுகிறேன்.

விருப்பம் இருப்பவர்கள் மடல் அனுப்பி இருக்கையை
பதிவு செய்துகொள்வது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு
பேருதவியாக இருக்கும்.

நர்சிம் அவர்களின் இந்த பதிவில் விவரங்கள் இருக்கின்றன.

டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி.

மற்ற பதிவுகளுக்கான லிங்குகள்.


லக்கிலுக் அவர்களின் பதிவு

வித்யாவின் பதிவு

சந்தனமுல்லையின் பதிவு

கார்க்கியின் பதிவு

முரளிகண்ணன் அவர்களின் பதிவு

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்